Wednesday, December 8, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.12.21

திருக்குறள் :


பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: அவை அஞ்சாமை

குறள் எண்: 722

குறள்: 
கற்றாருள் கற்றார் எனப்படுபவர் கற்றான்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்: கற்றறிந்த கருத்துகளைக் கற்றவர் நிறைந்த சபையில் அவர்கள்
விரும்பிக் கேட்கும் வண்ணம் சொல்லக்கூடியவர்கள்
சிறப்பாகக் கற்றவர் ஆவர்.

பழமொழி :

When at rome do as romens do 


ஊரோடு ஒத்துவாழ்,  

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :


கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.------ புத்தர்


பொது அறிவு :

1. உலகின் மிகப் பழைமையான மலைத்தொடர் எது? 

ஆரவல்லி மலைத்தொடர்.

 2. உலக வரலாற்றில் பழைமையான மரமாகக் கருதப்படும் மரம் எது? 

பேரிச்சை மரம்.

English words & meanings :

Nerd - an intelligent person but not like to mingle with others. அதிகம் படித்த ஆனால் நவீன வாழ்வை விரும்பாதவர்.

Social butterfly - one who like to sociable with everyone, எல்லாரோடும் கலகலப்பாக பழகுபவர் 

ஆரோக்ய வாழ்வு :

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, பி 6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


கணினி யுகம் :


Ctrl + Shift + * - View or hide non printing characters. 

 Ctrl + Shift + > - Increase selected font +1 

டிசம்பர் 09


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்




ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்தவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.


1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையணுத்து 1918 இல் பட்டைய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றழய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.

நீதிக்கதை


பொறாமையால் ஏற்பட்ட இழப்பு



கதை :
கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார். 

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது. 

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது. 

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார். 

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது. 

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும். 

நீதி :
பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

இன்றைய செய்திகள்

09.12.21

🌐 நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில்  முப்படைகளின் தலைமை தளபதி  பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 

🌐 தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தின் புதன் கிழமைகளில் அரசு அதிகாரிகள் சைக்கிளில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

🌐 மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டி 7 மதகுகள் திறந்து விடப்பட்ட நிலையில் நெல்லை மக்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🌐 நெல்லை வேய்ந்தான் குளம் அருகே 4 நடைமேடைகள் உடன் அமைந்திருந்த புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.அங்கு கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் தரை தளம், முதல் தளம் என வணிக வளாகம் போன்று கடைகளும் கட்டப்பட்டுள்ளது.

🌐 இந்திய ஆண்கள் கிரிக்கெட்  அணியின் ஒருநாள் மற்றும் T20 கேப்டனாக ரோஹித் நியமனம்.

🌐 தென் ஆப்பிரிக்கா எதிரான 3 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

 🌸An army helicopter has crashed in Katteri near Coonoor in the Nilgiris district.  Eleven people, including Army chief Pipin Rawat and his wife, were died. 

 🌸The Tamil Nadu government has advised government officials to come to the office on bicycles on every Wednesday  to prevent environmental pollution in the state.

🌸 The people of Nellai have been warned as the Manimuttaru Dam has reached its full capacity and 7 flood gates have been opened.

 🌸The new bus stand with 4 platform near Nellai Veynthan Lake has been expanded. Two additional platforms have been set up there.  There are also shops on the ground floor of the bus station, as well as a commercial complex on the first floor.

 🌸 Rohit was appointed ODI and T20 captain of Indian men's cricket team.

 🌸Indian squad for 3 Test series against South Africa announced.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 7, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.12.21

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: ஆள்வினை உடைமை

குறள் எண்: 620

குறள்:
 ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

சோர்வில்லாமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்கள்,
வெற்றிக்குத் தடையாய் வரும் விதியையும் வென்று விடுவார்கள்.

பழமொழி :

Necessity has no law


ஆபத்துக்கு பாவமில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.----- சார்லஸ்

பொது அறிவு :

1. கிராம்பு என்பது கிராம்பு செடியின் எந்தப் பகுதி ஆகும்? 

விரியாத மொட்டுப்பகுதி. 

2.வைக்கோலில் உள்ள வேதிப்பொருள் எது? 

லிக்னைன்.

English words & meanings :

Down to earth - a simple practical person, பேச பழக எளிமையானவர். 

Chatter box - someone who talks non stop, ஓயாது பேசுபவர் 

ஆரோக்ய வாழ்வு :

ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.




கணினி யுகம் :

Ctrl + shift + R - Reply all. 

Ctrl + shift + Q - New meeting request

நீதிக்கதை

விடா முயற்சி

கதை :
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

08.12.21


★பிப்ரவரி மாதத்தில் குரூப்-2, 2A தேர்வுகளுக்கும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பாணை வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி.

★சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

★வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவாக 3.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

★நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

★டெல்டாவைவிட ஒமைக்ரானால் மீள் தொற்றுக்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்.

★பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு.

★இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

★ Group-2 and 2A exams will be announced in February and Group-4 exams in March. The elections will be held within 75 days of the announcement says the TNPSC President in an interview. 

 ★ Reduction in prices of CIDCO industrial estates: Announcement by Chief Minister MK Stalin.

 ★ Out of 14,138 lakes in Tamil Nadu, 8,690 lakes have reached their full capacity due to the northeast monsoon and the average rainfall in 30 districts in the last 24 hours was 3.6 mm, the Tamil Nadu government said.

 ★ The Supreme Court has recommended to the National Law Commission to bring in strict punishments in the law to eradicate dowry cruelty from the country.

 ★ Omicron is three times more likely to cause re-infection than delta: says World Health Organization scientist Sawmiya Swaminathan.

 ★ British Sports Awards: Emma Radukanu selected as this year's Player of the Year.

 ★ The 21 members of South African squad for the Test series against India has been announced. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, December 6, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.12.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால் 

இயல்: நட்பியல் 

அதிகாரம்: நட்பு 

குறள் எண்: 789. 

 குறள்: 
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 

பொருள்: நட்புக்குச் சிறந்த பெருமை எதுவென்றால் மனம் கோணாமல், முடிந்த போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

பழமொழி :

It is easier to destroy than to create

அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்


பொது அறிவு :

1. தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபர் யார்? 

நெல்சன் மண்டேலா.

2. இந்தியாவின் பூட்டு நகரம் என்றழைக்கப்படுவது எது? 

அலிகார்.

English words & meanings :

Tough cookie - a strong person to deal difficult situations, கஷ்டமான சூழலிலையும் சமாளிப்பவர். 

A white lie - a harmless lie told not to upset someone. மற்றவர்களை காயப்படுத்தாத பொய் 

ஆரோக்ய வாழ்வு :

அடிக்கடி சுண்டைக்காய் வற்றலை சமைத்து சாப்பிட்டு வர வறட்சி இருமல் வயிற்று பூச்சி அனைத்தும் குணமாகும். 2. நான்கு வில்வ இலையுடன் நான்கு துளசி இலை கசக்கி அத்துடன் நான்கு மிளகு சாப்பிட்டால் ஆஸ்த்மா கட்டுபடும்ப் 

கணினி யுகம் :

Ctrl + shift + J - Distribute paragraph.

 Ctrl + shift + L - Activate Bullets

டிசம்பர் 07


கொடி நாள் (இந்தியா) 




கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.


நீதிக்கதை


கோபத்தை மறந்த ராமு



கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான். 

ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான். 

ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. 

ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. 

அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன். 

நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

07.12.21

★2021-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

★பூசிமலைக்குப்பத்தில் நாயக்கர் காலத்தை சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுப்பு: கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

★முத்தடுப்பு மருந்து (டிபிடி) விநியோகம் 2023-ல் தொடங்கும் என குன்னூர் பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் தகவல்.

★ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர்  கூறியுள்ளார்.

★இனி வரும் பெருந்தொற்றுகள் கரோனாவைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கும்: தடுப்பூசி தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை.

★ஒமைக்ரான் டெல்டா வைரஸைவிட மோசமானது அல்ல; அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் நம்பிக்கை.

★இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து : ஜாம்ஷெட்பூர்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதல்.

★ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

Today's Headlines

 ★ The Government of Tamil Nadu has announced that applications are invited for the Chief Minister's Computer Tamil Award for the year 2021.

 🌸 Discovery of 2 monumental stones over Victory belonging to the Nayakar period at Poosimalaikkuppam:   Researchers say that they belong to the AD  15th century.

 🌸 Coonoor Pasteur Laboratory Director informed that the distribution of vaccine (DTP) will start in 2023.

 🌸 The Union Home Minister has said that the technology for destroying the drones is being prepared in India and they will be added to the army soon.

 🌸The oncoming epidemics will  be more dangerous than the corona: warning by vaccine  producers.

 🌸 Omicron is not worse than delta virus;  American President's Medical Adviser hoped. 

 🌸 Indian Super League Football: Jamshedpur-ADK Mohan Bagan clash.

 🌸 India defeated Thailand in the Asian Cup Women's Hockey Tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்