Sunday, December 5, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.21

   திருக்குறள் :

பால்: பொருட்பால் 

இயல்: அரணியல் 

அதிகாரம்: நாடு 

குறள் எண்: 734 

குறள்: 
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா தியல்வது நாடு. 

பொருள்: மிகுந்த பசித்துயரும், ஓயாத நோயும், அறிவினை உண்டாக்கும் பகையும் வந்து சேராமல் இருப்பதே வளம் மிக்க நாடாகும்.

பழமொழி :

A stitch in time saves nine

வருமுன் காத்தல் சாலவும் நன்று

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:


பொது அறிவு :

1. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?

 கால்சியம் ஹைட்ராக்சைடு. 

2. மீன்கள் இல்லாத ஆறு எது? 

ஜோர்டான் ஆறு.

English words & meanings :

Feel blue - feeling sad, சோகமாக உணர்தல், 

golden opportunity - a good chance to do something, எதிர்பாராத வகையில் கிடைத்த வாய்ப்பு

ஆரோக்ய வாழ்வு :

வறட்டு இருமல் நீங்க சில டிப்ஸ்


1)பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரைத் தேக்கரண்டி தேனை கலந்து பருகினால் வறட்டு இருமலை தடுக்கலாம்.



2)ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.



3)தேனில் உள்ள இருமலைக் குணப்படுத்தும் பண்புகள், வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அத்தகைய தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



4)கற்றாழையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள வலி நிவாரண பண்புகள், தொண்டைச் சுவற்றில் இருக்கும் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும். அதிலும் கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.



5)யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

கணினி யுகம் :

Ctrl + shift + E - Create new folder. 


Ctrl + shift + F - Change font


டிசம்பர் 06

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்




பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkarமராத்திभीमराव रामजी आंबेडकर14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

நீதிக்கதை


நன்றி மறவா நண்பர்கள்



கதை :
ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது. 

அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். 

தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான். 

அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான். 

நீதி :
ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.

இன்றைய செய்திகள்

06.12.21

# வலுவிழந்த ஜவாத்  புயல்,  அபாய கட்டத்தை தாண்டிய ஆந்திரா ஒடிசா மாநிலங்கள்

 # ராமநாதபுரம் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் கலந்த வைகை ஆற்று உபரி நீர்.

#வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

# ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பைக்கு 3-வது வெற்றி.

# உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன்: தென் கொரிய வீராங்கனை ஆன் சியங், 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
  
# உலக இறுதி சுற்று பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம்  வென்றுள்ளார்

Today's Headlines

 * Odisha, West Bengal and Andhra Pradesh breathed a sigh of relief as cyclonic storm Jawad weakened into a deep depression before reaching the east coast.

* After 10 years Vaikai flow into Ocean near Ramnad. 

* Due to top layer Atmospheric cycle Tirunelveli, Tuticorin, Ramnad and Kanyakumari districts may get rain with thunderstorm .

* ISL Football : Mumbai won 3rd time 

* World Tour Badminton Finals: South Korean Player Ann Siyank won by 21-16 & 21-12 sets. 

* World tour final badminton India's PVSindhu won Silver medal
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Friday, December 3, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.12.21

   திருக்குறள் :

பால்: அறத்துப்பால்

இயல் :பாயிரம்

அதிகாரம் :அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 35

குறள்: அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு
குற்றங்களையும் நீக்கியவரால் செய்யப்படுவதே அறமாகும்.

பழமொழி :

A rolling stone gathers no moss

அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழாத நிலமும், இறைக்காத கிணறும், உழைக்காத உடலும் கெடும் இத்தவறை செய்ய மாட்டேன். 

2. இரக்கமில்லாத மனமும், இயற்கை அழிக்கும் நாடும் கெடும். எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளம் ஒரு நாளும் அழிக்க மாட்டேன்.

பொன்மொழி :

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

சுவாமி விவேகானந்தர்:

பொது அறிவு :

1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது? 

டால்பின். 

2. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது? 

தேனீ.

English words & meanings :

Nagging - constantly complaining, எப்போதும் முறு முறுத்தல். 

Stumble - to fall over something, எதன் மீதாவது இடறி விழுதல்

ஆரோக்ய வாழ்வு :


கத்தரிக்காய் 2 ஆம் சர்க்கரை நோயைத் தடுக்கும். "மைட்ரோநியூட்ரின்கள்" இருப்பதால் நினைவாற்றல் பெருக்கும். அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் இருதய நோய்க்கு சிறந்த மருந்து.

கணினி யுகம் :

Ctrl + shift + B - Search contact list. 

 Ctrl + shift + C - Add contact    

டிசம்பர் 04


1971 இந்திய-பாகிஸ்தான் போரின்இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 

ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்





இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.

நீதிக்கதை


நரியும் முட்செடியும்...

கதை :
ஒரு நரியானது செடி, கொடிகள் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது. 

ஒரு நாள் நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமான முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது. 

தப்பிக்க முயல்கையில் நரியின் உடம்பெல்லாம் காயம், கீறல் பட்டது. அதனை கண்டு நரி மிகவும் கோபமடைந்தது. 

முள்செடியைப் பார்த்து, என்ன செடி நீ, பார் உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா? என்று திட்டியது. 

முள்செடி அதற்கு, நண்பா, நான் முள்செடி. என்னை குத்துவதற்குத் தவிர வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை என்றது. 

முதலில் தன்னிடம் உள்ள குறையை பார்க்காமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தக் கூடாது. 

நீதி :
மற்றவர்களை குறை சொல்லும் முன் தன்னிடம் உள்ள குறையை அறிய வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.12.21

★திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலப் புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

★தமிழகத்தில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய 10 நினைவுத் தூணுடன் கூடிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

★பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


★போட்டித் தேர்வில் தமிழ் மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை.

★வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வரும் 5-ம் தேதி ஒடிசா மாநிலம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

★டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, டெல்லி அரசுக்கு 24 மணி நேர கெடு: உச்ச நீதிமன்ற உத்தரவால் பள்ளிகள் மூடல்.

★ஒமைக்ரானால் உலகளவில் இதுவரை உயிரிழப்பு இல்லை: உலக சுகாதார நிறுவனம் தகவல்.


★மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


★ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அரைஇறுதியில் இந்தியா-ஜெர்மனி மோதல்.

Today's Headlines

 ★ Paleolithic burial grounds dating back to about 4,000 years have been found at Javadumalai next to Tirupattur.

 ★ Discovery of inscriptions with 10 monuments dating back to 1,000 years are discovered for the first time in Pudukottai district in Tamil Nadu.

 ★ The Department of School Education has ordered that Omicron antiviral measures should be actively implemented in schools.

 ★ Government of Tamil Nadu mandates compulsory Tamil language examination in competitive /eligibility examinations.

 ★ The low pressure area in the Bay of Bengal is expected to cross  near the coastal area of Puri in Odisha on the 5th as it turns into a storm: Indian Meteorological Center information.

 ★ Central, Delhi government gets 24-hour deadline to control air pollution in Delhi: Schools closed by Supreme Court order.

 ★ Omicron has not caused any deaths worldwide so far: World Health Organization data.

 ★ The Rising Star team advanced to the finals of the state basketball championship.

 ★ Junior World Cup Hockey: India-Germany clash in the semi-finals.

 Prepared by

Covai women ICT_போதிமரம்