Thursday, November 18, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.11.21

திருக்குறள் :

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின். 

பொருள் 

பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

பழமொழி :

If you run after two hares you will catch neither.

இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு பக்கத்தை உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. - அப்துல் கலாம்

பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?

கொல்கத்தா

2. இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?

 கேரளா

English words & meanings :

Not in my book - not according to my views, என் கருத்துக்கு ஒத்தது அல்ல, 

give me a break - leave me to relax, என்னை சற்று ஓய்வு எடுக்க விடு

ஆரோக்ய வாழ்வு :

நுரையீரலுக்கு முள்ளங்கி


அகத்திக்கீரையின் பூவும் முள்ளங்கியும் நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப்பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றிவிடும்.

மேலும், கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்னை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல், கண் அழுத்தம் (Glucoma),கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப்பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால், மேற் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் குணமாகும். முள்ளங்கியில் உள்ள ராபனைன் (Raphanine)என்ற ரசாயனம் புற்றுநோயை நீக்கக் கூடியது. ராபனைனை எலிக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், எலியின் நுரையீரலில் உள்ள கட்டிகளின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்தன.

எம்பிசெமா(Emphysema)என்ற நுரையீரல் பாதிப்புப் பிரச்னையும் முள்ளங்கி சாற்றால் குணமாகிறது. நிமோனியா, புகையிலையால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு, இந்தச் சாறு அருமருந்து. தொடர்ந்து குடித்து வந்தால் மூச்சுக்குழாய் சுருக்கநோய் (Chroni cobstructive pulmonary disease) குணமாகத் தொடங்கும். நுரையீரல் பலப்படும். நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகளின் வீரியமும் வெகுவாகக் குறையும். இதனுடன், பத்மாசனம், சித்தாசனம் (யோகமுத்திரை) , பிராணயாமம் போன்றவற்றை செய்து வந்தால், இயற்கையாகவே நுரையீரல் பலப்படும். பாதிக்கப்பட்ட நுரையீரல் கூட புத்துயிர் பெறும்.

கணினி யுகம் :

Alt + 0198 - Æ. 

Alt + 0231 - ç

நவம்பர் 19

இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்... 



இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.


உலகக் கழிவறை நாள்


உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

நீதிக்கதை

சுத்தம் தேவை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.

அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்

19.11.21

★18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம் மற்றும் கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

★இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வான, மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

★இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


★இந்தியாவின் பூடான் எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்து உள்ளது. இது குறித்த செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.

★நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.

★கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த மழை  வெள்ளத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

★அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.

★இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.

★ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்க பதக்கம் வென்றுள்ளார்.


Today's Headlines

 ★ The Tamil Nadu government has announced that young writers under the age of 18 can apply for the Kavimani Award with Rs. 25,000 cash and a shield.

 ★ Astronomers predict that the longest lunar eclipse of this century will occur today.

 ★ The Tamil Nadu government has announced that the cabinet meeting scheduled to be held today will be postponed due to heavy rains.

 ★ China is building 4 villages a year on the Bhutan border with India.  Satellite images of this have been released.

 ★ Scientists have swiftly prevented the collision of INDO-US Space craft which is going to collide with each other in lunar orbit.

 ★ The worst hurricane to hit Canada, followed by flash floods, has caused unprecedented damage  in 100 years.

 ★ The game Silampam is included in the 3% reservation for sportspersons in government service

 ★ Indonesian Masters Badminton: PV Sindhu advanced to the quarterfinals.

 ★ Indian archer Jyoti Sureka wins gold at the Asian Archery Championships.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 17, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.11.21

  திருக்குறள் :

குறள் 165:
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

பொருள்

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும். 


பழமொழி :

who sows thorns will never reap grapes.


 விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

எல்லோரையும் நம்புவது ஆபத்து தான். ஆனால் யாரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து! 

- ஆபிரஹாம் லிங்கன்

பொது அறிவு :

1. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?

சட்லெஜ்

2. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய் ______

ஆந்த்ராக்ஸ்

English words & meanings :

Freezing - very cold, அதிக குளிர், 

jubilant - very happy, அதிக சந்தோசம்

ஆரோக்ய வாழ்வு :

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்


💂பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

💂எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

💂தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

💂அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.

💂தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும். 

💂இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும். 

கணினி யுகம் :

Alt + 0248 - ø.

 Alt + 0223 - ß

நவம்பர் 18

வ. உ. சி அவர்களின் நினைவுநாள்  





வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை[2](V. O. Chidambaram Pillaiசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.

நீதிக்கதை

குகையில் தங்கம்

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :
பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்திகள்

18.11.21

◆தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

◆அதி கனமழை எச்சரிக்கை; 2 நாட்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் கையிருப்பு வைத்துக்கொள்ளும்படி  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.

◆உலகின் மிக உயர்ந்த சாலை லடாக் சாலை: கின்னஸ் உலக சாதனை.

◆வட தமிழகத்தில் நாளை  மிக அதிகனமழை வரை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

◆அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது.

◆உலக ஆண்கள் டென்னிஸ்: ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் வெற்றி.

◆இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி இணை அடுத்த சுற்றுக்கு தகுதி.


Today's Headlines

 * In Tamil Nadu a draft for Teacher's transfer will be drawn by the end of this week.

* On the warning of extremely heavy rain Madras Corporation advised people to keep stock of eatables for 2 days.

* Ladak Road is declared by Guinness Record as the world's highest road.

* In North Tamil Nadu districts there will be the heavy pouring of rain - warning by IMD.

* By pushing down the US in the richest country's list China hit the list and captured first place.

* World Male Tennis - Russian star Danil Metvidev won the match.

*Indonesian Masters Badminton: Kitambi Srikanth, Dhruv Kapila-Sikki Reddy pair qualified for next round.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 16, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.11.21

  திருக்குறள் :

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 

பொருள் 
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.

பழமொழி :

A good beginning makes a good ending


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

குறைகளைச் சுட்டிக் காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள். எந்த அளவு இதைச் செய்கிறாரோ, அந்த அளவுக்கு வேகமாக முன்னேறுவாய்.

- அரவிந்தர்

பொது அறிவு :

1. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?

கொற்கை


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

ஞானபீட விருது

English words & meanings :

Effortless - very easy, அதிகம் உழைக்க தேவையில்லாத மிக எளிய, 

gigantic - very big, மிகவும் பெரிய

ஆரோக்ய வாழ்வு :

சீரகம் ஒரு மருத்துவ மூலிகை


சீரகம்=சீர்+அகம்..!

அகத்தைச் சீர்செய்யும் சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் முக்கியமாக அரேபியாவில் மசாலா பொருள்களில் இது நீண்ட காலமாக உபயோகிக்கப்படுகிறது.


சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப்பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

கணினி யுகம் :

Alt + 0246 - ö. 

Alt + 0252 - ü

நவம்பர் 17

லாலா லஜபதி ராய் அவர்களின் நினைவுநாள்  




லாலா லஜபதி ராய் (1865 ஆம் ஆண்டு சனவரி 28)  ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

நீதிக்கதை

பொய்

மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன். 

ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான். 

பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான். 

ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள். 

நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன். 

மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன். 

உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான். 

கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான். 

மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர். 

சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன். 

அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன். 

இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி. 

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர். 

நீதி :
ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.

இன்றைய செய்திகள்

17.11.21

◆தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4,000 கரோனா தடுப்பு உபகரணங்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர், கொரிய தூதர் ஆகியோர் இணைந்து வழங்கினர். இவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டன.


◆பணிக் காலத்தின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்ப நலநிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

◆விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

◆தமிழகத்தில் உள்ள அனைத்து வகைக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

◆கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர, 20 மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

◆நேபாளத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த கால்பந்து அணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

◆இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.


Today's Headlines

 🌸The President of TVS and the Korean Ambassador jointly distributed 4,000 corona prevention equipment to Tamil Nadu Government School students.  These were presented to the Minister of School Education Mr.Anbil Magesh Poiyamozhi.


 🌸The government has increased the family welfare of a journalist who dies during his working hours to Rs. 5 lakhs.

🌸 The Tamil Nadu government has canceled the announcement of setting up a petrochemical zone in the Nagapattinam district followed by the protests of farmers.  Delta farmers are happy with this.

 🌸The Department of Higher Education has stated that the semester examinations will be held only directly in all types of colleges in Tamil Nadu.

 🌸 As the corona spread is in control, the Central Government has given permission to foreign tourists to come to India after 20 months.

 🌸Villupuram football team has been selected for the football tournament to be held in Nepal.

 🌸PV Sindhu and Lakshaya Sen qualified for the second round of the Indonesian Masters Badminton Series
 Prepared by

Covai women ICT_போதிமரம்