Sunday, November 7, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண்: 466

குறள்:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

பொருள்:
செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

பழமொழி :

An evil deed has a witness in the bosom


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

வெற்றிப் பெறுவது எளிது ,வாய்ப்புக்காக காத்திருக்காதீர்! உமக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - ---அப்துல் கலாம்

பொது அறிவு :

1. தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது? 

சுதேசமித்திரன்.

 2."தங்கப் போர்வை நிலம் "என்றழைக்கப்படும் நாடு எது?

ஆஸ்திரேலியா.

English words & meanings :

Fat cat - a highly placed and paid person, உயர் பதவியில் அதிக சம்பளம் பெறும் மனிதர், 

let the cat out of the bag - reveal the secret, இரகசியம் வெளியிடுதல்

ஆரோக்ய வாழ்வு :

அதிமதுரம்






அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl+ Arrow right - Bring to forward , 

Ctrl + Arrow left - Send backward

நவம்பர் 08

வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்... 




வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747)இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில்  வந்தார். 


இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


நீதிக்கதை

தூக்கணாங்குருவி

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது. அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது. குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே? என்றது. ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது. 

வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங்குருவிகள் அறிவுரை சொல்வதா? என்று எண்ணியபடி, எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.

பாவம் தூக்கணாங்குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது. தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.11.21

★சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு.

★செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகள் திறப்பு: கனமழையால் ஏரிகள் நிரம்பி வருவதால் நடவடிக்கை.

★தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 909 ஏரிகளில், 175 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 

★தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நவம்பர் 11-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


★தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை: மத்திய அரசு தகவல்.


★இந்தியாவில் கரோனா வைரஸுக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியதையடுத்து, பல்வேறு நாடுகளிலும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

★ஐரோப்பா, மத்திய ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

★ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணிக்கு தமிழக வீரர் தேர்வு.

★ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 🌸 Chief Minister inspects heavy rain affected areas in Chennai.

 🌸Sembarambakkam and Puzhal lakes are opened as the level of water is rising due to heavy rains .

 🌸 Out of 909 lakes in Kanchipuram and Chengalpattu districts, 175 lakes are completely filled due to continuous rains.

 🌸 The Indian Meteorological Department has warned of heavy rains in the coastal areas of Tamil Nadu till November 11.


 🌸 No reduction in petrol and diesel taxes in 14 states including Tamil Nadu informed by Central Government 


 🌸 The federal government is in talks to seek recognition in various countries after the World Health Organization (WHO) approved the Covaccine, a vaccine made by Bharat Biotech, of  India against the corona virus.

 🌸 Corona coronary death toll rises again in Europe and Central Asia warned by World Health Organization .

 🌸 Tamil Nadu player selected for the Indian cricket team for the Junior World Cup.

 🌸 Hilo Open Badminton: India's Laksaya Sen advanced to the semifinals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 2, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.11.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண் : 464

குறள்:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

பொருள் :
களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

பழமொழி :

Be slow to promise but quick to perform


ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.


இரண்டொழுக்க பண்புகள் :

1.தனக்கு இல்லாத குணத்தையும் இயல்பையும் தகுதியையும் ,

2. இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை இயற்கை. 2. நானும் அதை போலவே இல்லாதவற்றை இருப்பது போல் காட்டி பெருமை கொள்ள மாட்டேன்

பொன்மொழி :

உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ---ஐசக் நியூட்டன்

பொது அறிவு :

1. காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? 

போலாந்து. 

2. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? 

55 மொழிகளில்.

English words & meanings :

Back on your feet - start to work after a period of illness. சுகம் பெற்று மறுபடியும் வேலை செய்வது. 

Salt of the earth - good character people very important for the humans. மனிதர்களுக்கு உப்பாக இருந்து பாதுகாத்தல்

ஆரோக்ய வாழ்வு :

குழந்தைகளுக்கு பயிற்சி


தசைகள், எலும்பு, மூட்டுக்களை பலமாக்கவும், கை, கால் வலுவடையவும் பயிற்சிகளை செய்யலாம். குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம்.  உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் ஃபிட்டாக இருக்கும்.

  • குழந்தைகளுக்குத் தொங்குவது என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிகம் உயரம் இல்லாத வீட்டின் உத்தரக் கம்பின் மேல் குழந்தையின் கைகளை வைத்து தொங்கும் பயிற்சி. இப்படி தினமும் ஐந்து நிமிடம் தொங்குவதால், தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் பகுதி நன்கு வலுவடையும்.
  • காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம்.  இதனால், குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.  உடல் சோர்வு நீங்கும்.
  • நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால், அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி பலன் தரும்.
  • நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான்.
  • நீச்சல், ஓட்டப்பந்தயம், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுக்களில் ஈடுபடும்  குழந்தைகள், தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
  • பள்ளியைவிட்டுத் திரும்பியதும் சைக்கிள் ஓட்டலாம், ஓடிப் பிடித்து விளையாடலாம்.
  • படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும்.
  • அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சொல்லாம். எந்தப் பயிற்சியில் ஈடுபடும்போதும், பெற்றோர் பிள்ளைகளைத் தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கவேண்டியது அவசியம்.

கணினி யுகம் :

Ctrl+ Arrow up - Bring to front, 

Ctrl+ Arrow down - Send to back

நவம்பர் 03

அமார்த்ய குமார் சென் அவர்களின் பிறந்தநாள்





அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 31933இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.[1]

நீதிக்கதை

ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.  அப்போது ஒரு தேள் ஓடிவந்து, " ஆமை அண்ணா, ஆமை அண்ணா!  நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.  உன் முதுகில்  ஒரு ஓரமா  இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா  அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது. 
ஆமைக்குப் பாவமாக இருந்தது.  இருந்தாலும்  ஒரு எச்சரிக்கைக்காக ,
 " ஒன்னப் பாத்தா எனக்கும்  பாவமாதான் இருக்குது.  முதுகுல  ஏத்திக்கிட்டுப் போறேன் .  ஆனா வழியில  எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ ,  உரிச்சுப் புடுவேன் . ஆமா"
முதுகில் ஏற்றிக்கொண்டது.
தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது. சிறிது தூரம்  போனதும்  தேளுக்கு ஒரு சந்தேகம்  ,"பாறை மாதிரி  இருக்குதே இந்த  ஓடு!  இதுல நம்மால கொட்ட முடியுமா?  சரி. லேசா கொட்டித்தான் பாப்போமே"
மெல்ல ஒரு கொட்டு கொட்டியது. ஆமை கேட்டது
 " ஏய் என்ன பண்ற ?
" இல்லண்ணே. தெரியாம கொடுக்கு பட்டுடிச்சு.  மன்னிச்சுடுங்க" இது தேள். 
   ஆமை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  கரையை  அடைய  இன்னும் பாதி தூரம் இருந்தது.  தேளுக்கு மீண்டும் ஒரு எண்ணம், " லேசாகக் கொட்டியதால்தான் ஓடு கொஞ்சம் கூட  அசையவில்லையோ! கொஞ்சம் அழுத்தமாகக்  கொட்டினால்? சற்று  அழுத்தமாகவே கொட்டியது.
ஆனாலும்  ஓடு கொஞ்சம் கூட அசையவில்லை.
" என்னடா தம்பி,  புத்தியக்காட்டுறியா? "
என்றது ஆமை .
" அட  இல்லண்ணே.  கொஞ்சம் வழுக்குற மாதிரி இருந்தது.  கொஞ்சம் கொடுக்கால அழுத்திப் பிடிச்சிக்கிட்டேன். அதுக்குப் போயி பெருசா பேசுறியே! "
என்றது தேள்.  ஆமை தலையை  அசைத்துக் கொண்டே ஏதோ முணுமுணுத்துக் கொண்டே
நீந்தியது. கொஞ்சம் நேரம் சென்றது.  இப்போது கரைக்கு  இன்னும் சில  அடி தூரம்தான்.  இப்போது தேளுக்கு  தைரியத்துடன் கொஞ்சம் அகங்காரமும் வந்துவிட்டது.  
"நான் கொட்டுனா எவ்வளவு பெரிய யானையெல்லாம் அலறி ஓடும்!  சின்ன மிருகமா இருந்தா வாயில் நுரை தள்ளி செத்தே போகும். இந்த தம்மாத்தூண்டு ஆமைப்பயல் அசையக்கூட மாட்டுறானே. இதோ கரையும் நெருங்கிடுச்சு. கடைசியாக ஒரு தடவை கொட்டிப் பாக்கலாம் "
பலத்தையெல்லாம் திரட்டி  அழுத்தமாக ஒரு போடு போட்டது. 
ஆமைக்கு இப்போது கோபம் வந்தது.  
"நீ சரியா வரமாட்டே போலிருக்கே" என்றது.  தேளுக்கு கரையை நெருங்கிவிட்ட தைரியம். 
" பிறந்த நாள் முதலாவே கொட்டிக் கொட்டிப் பழகிட்டேன். இந்தப் பத்து நிமிஷம் பயணத்துக்காகல்லாம் பழக்கத்தை  மாத்திக்க முடியாது.  இது பழக்கதோஷம். நீதாம்ப்பா கொஞ்சம் அனுசரிச்சிப் போகணும்" என்றது.  
ஆமை சிரித்தபடியே சொன்னது , " உனக்கு இருக்கும் பழக்கதோஷம் மாதிரியே  எனக்கும் ஒன்னு  உண்டு.  அது இதுதான் " என்றபடியே நீருக்குள் மூழ்கி எழுந்தது.  எழுந்து பார்த்தால் தேள்  ஆமையின் முதுகில் இல்லை.  அது ஆமை நீருக்குள்  முழுகும்போதே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு செத்துப் போய்விட்டது.
நீதி : உதவி செய்பவர்களை வருந்த செய்தால் அழிவு நிச்சயம்

இன்றைய செய்திகள்

03.11.21

◆பள்ளிகள் திறப்பு: 'அறிவியல் அறிவோம்' நிகழ்ச்சி மூலம் உற்சாகமூட்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

◆ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றோர் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது.

◆கனமழை காரணமாகத் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆தீபாவளி அன்று பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். காலை 6 மணிமுதல் 7 மணி வரை, இரவு 7 முதல்8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

◆நாட்டில் 92% அதிகமான பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

◆2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

◆டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.


Today's Headlines

🌸Schools are reopened: Tamil Nadu Science Movement encouraging students through "Know Science" program

🌸If the IAS students cleared the preliminary they can apply for the coaching with a scholarship says All India Administrative Services coaching center.

🌸Due to the heavy rains, there is an Orange alert for four districts of TN

🌸During Deepavali people has to burst green crackers only. The timing is morning 6 to 7 and night 7 to 8 said the Department of Environment

🌸In our Nation, more than 92% of school teachers got vaccinated. Information from the central government 

🌸Before 2070 India fixed the goal for the emission of Carbon as Zero said PM in Seasonal Changes Meet.

 🌸T20 World Cup: South Africa beat Bangladesh.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, November 1, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.11.21

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:அரசியல்

அதிகாரம்: தெரிந்து செயல் வகை

குறள் எண் : 465

குறள்:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

பொருள் :
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

பழமொழி :

Cast no dirt into the well that gives  you water


 உண்ட  வீட்டிற்கு  இரண்டகம் பண்ணாதே.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.

 2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்ளவேண்டும், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - ---கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு :

1. போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது? 

நியூசிலாந்து. 

2. உலகின் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்? 

லெனின்.

English words & meanings :

Idioms 

up in the air - haven't yet decided about a plan, இன்னும் முடிவு செய்யவில்லை.

 I wasn't born yesterday - not believe others saying because you are old. இளையவர்கள் சொல்வதை எளிதில் நம்பாத முதியோர்

ஆரோக்ய வாழ்வு :

ஆடாதொடை இலையின் மருத்துவ குணம்

சித்தர்கள் பயன்படுத்திய பல மூலிகை வகைகளில் ஆடாதோடை மிகவும் முக்கியமானது. இந்த இலையின் அறிவியல் பெயர் Adhatoda vasica. வாசை என்ற  வேறு பெயறும் உண்டு. இது Acanthaceae என்ற தாவர குடும்பத்தை சார்ந்தது.    

  • ஆடாதொடை இலை பொதுவாக இருமல், சளி மற்றும் தொண்டைக் கட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்த இலைகளில் அல்கலாய்டு என்ற வேதிப்பொருள்கள் இருப்பதால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
  • ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ், டானின், அல்கலாய்டுகள் போன்ற  வேதிப்பொருள்கள் உள்ளன.
  • தொண்டை கரகரப்பு, அதிக சளி மற்றும் சுவாசப் பாதைகளை சீராக வைத்துக்கொள்ளவும், நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நரம்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • வயிற்று எரிச்சலை சரி செய்யவும், சீத கழிச்சல் சரி செய்யவும், கர்ப்ப பைகளை வலுப்படுத்தவும், உடலில் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

கணினி யுகம் :

Num+ - zoom in, 

Num- - zoom out,

நவம்பர் 02

ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் நினைவுநாள்  





ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும் படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே. 

நீதிக்கதை

வேலை ஒன்று சம்பளம் இரண்டு

சத்ரபதி சிவாஜியின் அரண்மனையில் வேலை செய்தவர்களில் ஒரு பணியாளருக்கு 100 ரூபாயும் இன்னொருவருக்கு 150 ரூபாயும் சம்பளம். ஆனால் இருவருக்கும் ஒரே வேலைதான். குறைந்த சம்பளம் வாங்கியவர் இது பற்றி சிவாஜியிடமே கேட்டுவிட்டான். அப்போது வாசலில் ஏதோ சப்தம் கேட்டது. சிவாஜி அந்த பணியாளனிடம் வாசலில் சத்தம் கேட்கிறது போய் பார்த்து வா என்றான். அவன் போன வேகத்தில் திரும்பி வந்தான். ராஜா ஒரு யானை போய்க்கொண்டிருக்கிறது என்றான். அது என்ன யானை? என்றார் சிவாஜி. இவன் திரும்பவும் போய் வந்து ஆண் யானை மகாராஜா என்றான். அதன் விலை என்ன? என்றதும் திரும்ப யானைக்காரனை பார்க்க ஓடினான் பணியாளன். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஓடி ஓடி சென்று பார்த்துவர வேண்டியதாயிற்று. 

சிவாஜி அடுத்த பணியாளனை அழைத்தார். வாசலில் சத்தம் கேட்கிறது. பார்த்து வா என்றார். அவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். மகாராஜா அங்கே ஒரு ஆண் யானை போகிறது. மிகுந்த லட்சனமானது. தந்தத்தின் நீளம் மட்டும் ஐந்தடி இருக்கும். விலை ஆயிரம் பொன் பெறும் என்று விவரமாக எடுத்துரைத்தான். சிவாஜி முதல் பணியாளனை ஒரு பார்வை பார்த்தார். அதன் பிறகு அவனிடம் கூலி பற்றி வாய் திறக்கவே இல்லை.

இன்றைய செய்திகள்

02. 11.21

★தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.

★அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்.

★கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு; முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக தலைமை பொறியாளர் ஆய்வு.

★மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு.

★மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மதிப்பெண் விவரங்கள் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் மாணவர்களின் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

★2022-ம் ஆண்டில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பல பள்ளிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூடப்படும் ரயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கேந்திரியா வித்யாலயா அல்லது மாநில அரசுப்பள்ளிகளில் சேர்க்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.

★ஜி 20 காலநிலை மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாதற்கு ரஷ்ய மற்றும் சீன நாட்டுத் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டித்துள்ளார்.

★பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு நேற்று தொடங்கியது.

★23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து : தகுதி சுற்றில் ஜொலித்த இந்திய அணி.
       
★உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு முன்னேறினர்.


Today's Headlines

★ TN Government declared a holiday on the 5th the next day after Deepavali. 

 ★ The next 2 will be a great challenge for all of us. So we should focus on preventive measures: Secretary of the Health Department instructs all district collectors.

 ★ Increase in the water supply to Kerala;  Chief Engineer of Tamil Nadu inspects Mulla Periyar Dam.

 ★ Repeal of 10.5% Internal Reservation Act for Vanni in the division of Most Backward Classes: High Court gave verdict today.

 ★ NEET the Medical Entrance Exam  Results have been released.  Score details are mailed to students on behalf of the National Examinations Agency (NDA).

 ★ According to reports, it is said that the Railway Department planned to close many schools run by it in 2022.  Railways have also decided to enroll the students studying there in Kendriya Vidyalaya or state government schools.

 ★ US President Joe Biden has reprimanded Russian and Chinese leaders for not attending the G20 climate summit in person.

 ★ The Climate Change Conference kicked off yesterday in Glasgow, Scotland, UK.

 ★ Asian Cup Football for Under-23s: The Indian team that shone in the qualifying round.

 ★ Indian boxers advance to quarterfinals of World Boxing Championship
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்