Tuesday, October 5, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.10.21

  திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி. 

குறள் : 414

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

பழமொழி :

A little knowledge is a dangerous thing.


அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

நீங்கள் பிறரிடம் எதை செலவு செய்கிறீர்களோ அதைவே நீங்கள் சம்பாதிப்பீர்கள்.அன்பும் பகையும் இரட்டிப்பாகும் செலவுகள் ஆகும்....விவேகானந்தர்.

பொது அறிவு :

1.கிரிக்கெட் பீட்சின் நீளம் எவ்வளவு?

 22 கெஜம்.

2.கிரிக்கெட் ஸ்டம்பின் உயரம் எவ்வளவு?

27 அங்குலம்.

English words & meanings :

Metre - SI unit of length. நீளத்தின் அலகு. 

Meter - measuring device. அளக்கும் கருவி.

ஆரோக்ய வாழ்வு :

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் தேன்...!!




*தேனுடன் சுண்ணாம்பைக் கலந்துநன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால்ஆறாத புண்கள் ஆறிவிடும்.

 * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிடகீழ் வாதம் போகும்வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

 * தேனோடு பாலோஎலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும்கல்லீரல் வலுவடையும்.

 * அரை அவுன்ஸ் தேனுடன்அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரஇரத்த சுத்தியும்இரத்த விருத்தியும் ஏற்படும்நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

 * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

கணினி யுகம் :

Ctrl + Alt + 2 - Change text to heading 2

Ctrl + Alt + 3 - Change text to heading 3

அக்டோபர் 6

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  


புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

  தங்கத்தூண்டில்


ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். 

அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான். 

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். 

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான். 

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. 

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ். 

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது. 

நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.21

 ◆இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது: 30,000 மாணவர்கள் பங்கேற்பு.

◆தேசிய நெடுஞ்சாலையில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து; 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், பாஸ்போர்ட் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் நிவர்த்தி செய்யும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

◆அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு உடனடியாக உரிய மாற்றங்களை செய்யவேண்டும் என்று பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்.

◆தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை அதன் விதிமுறைகளுடன் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

◆உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 10 ஆண்டுகளில் 14% பவளப்பாறைகள் அழிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

◆இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற காரணத்தால் லவ்லினா போர்கோஹெய்ன் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று உள்ளார்.

◆உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்.

Today's Headlines

 🌸 Phase II Engineering counseling started: 30,000 students participated.

 🌸100 to 120 km speed on the National Highway was Cancelled by Federal Government. The High Court verdict to give the order for only 60 to 100 km speed limit.                                                                            

 🌸A new facility has been launched at the Chennai Regional Passport Office to address passport-related complaints and grievances through WhatsApp video calls.

 🌸 The Tamil language has been removed from post office forms.  S. Venkatesh M . P wrote a letter to the General Manager that appropriate changes should be made immediately. 

 🌸 The Ministry of Road Transport and Highways has announced the establishment of the National Road Safety Board with its regulations.

 🌸Scientists say that 14% of worldwide coral reefs have been destroyed in 10 years due to climatic changes. 

 🌸 Lovelina Borgohain has qualified directly for the Women's World Boxing Championships after winning a bronze medal at the Tokyo Olympics in June this year.

 🌸 World Cup Sniper: Namya Kapoor of India wins gold at the age of 14.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Monday, October 4, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை. 

குறள் : 410

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

பொருள்:
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

பழமொழி :

Good face needs no paint.


அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

பகை ,தீமை இவற்றை எந்த அளவுக்கு நாம் விதைக்கிறோமோ அவை வட்டியுடன் திரும்பி வந்து நம்மையே சேரும்....சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

1.பெருங்கடல்களில் மிகப் பெரியது எது?

பசுபிக் பெருங்கடல்.

2.குளிர் சாதனப் பெட்டியில் செலவிடப்படும் மின்திறன் எவ்வளவு வாட் ஆகும்?

500 வாட்

English words & meanings :

Principal - head of the School. பள்ளியின் தலைமை ஆசிரியர். 

Principal - most important. மிக முக்கியமான நபர்

ஆரோக்ய வாழ்வு :

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

1)எடை குறைப்பு

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் மூளை விரைவிலேயே வயிறு நிறைந்து விட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட தேவையில்லை.மேலும் நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உங்கள் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.

2)வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது

நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்களுடைய கீழ் முதுகு, இடுப்பு, வயிறு என அனைத்தும் நேராக இருக்கும். இது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும். இது உங்களின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செய்லபட வைக்கும்.

3)முழங்கால் மற்றும் இடுப்பு ஆரோக்கியம்

தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்குகிறது மேலும் முதுகு வலியை குறைக்கிறது. இந்த நிலை இடுப்பு எலும்புகளை திறந்த நிலையில் வைப்பதுடன் கால்களை நெகிழ்வாக்குகிறது. கணுக்கால் மற்றும் கால் தசைகள் வலுப்படுகிறது. முழங்காலை மடக்கி வைத்திருப்பது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

4)இதய ஆரோக்கியம்

உங்கள் கால்கள் உங்கள் இதயத்திற்கு கீழ் நோக்கி இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாய் இருக்கும். அதே நேரம் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

கணினி யுகம் :

Ctrl + 5 - 1.5 line spacing. 

Ctrl + Alt + 1 - Change text to heading 1

அக்டோபர் 5

சர்வதேச ஆசிரியர் நாள் 





சர்வதேச ஆசிரியர் நாள் (World Teachers' Day) உலக ஆசிரியர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆண்டுதோறும் அக்டோபர் 5 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. [1] [2] சர்வதேச ஆசிரியர் நாள் "உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்" ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் நினைவுநாள்  




ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 241955- அக்டோபர் 5, 2011ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

நீதிக்கதை

  குருவி கொடுத்த விதை


ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்

05.10.21

 📰  கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

📰  கைவிடப்பட்ட பிளாஸ்டிக் சாலை திட்டம்: மாநகராட்சி அலட்சியத்தால் பாழாகும் மதுரை வைகை ஆறு.

📰  திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடுகள் அடங்கிய பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.


📰   புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

📰  உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

📰  2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

📰  ஷாஹீன் புயலால் கொட்டித்தீர்த்த பெருமழை: வெள்ளக்காடானது மஸ்கட்.


📰  ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.

📰  ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான நட்புறவு கால்பந்து ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
Today's Headlines

📃Tamil Nadu Chief Minister MK Stalin has written a letter to 12 state chief ministers stressing the need to restore the primacy of state governments in managing the education sector and calling for a concerted effort to do so.

 📃  Abandoned Plastic Road Project: Madurai Vaigai River ruined by corporation negligence.

 📃  A rock containing symbols for donating land to Vaishnava temples has been found in Mookkanur village next to Tirupati.

 📃  ISRO plans to launch 3 satellites for Earth observation by the end of this year.

 📃  "India is emerging as the world's pharmacy," said Sawmiya Swaminathan, chief scientist at the World Health Organization.

 📃  The Nobel Prize in Medicine 2021 is shared between two American scientists, David Julius and Artem Fattahoudian.

📃  Heavy rains caused by Shahaheen storm: The floodplain is Muscat.

📃  Asian Table Tennis Championship: Two more bronze for India.

📃   Indian women's team wins friendly football match against United Arab Emir
Prepared by
Covai women ICT_போதிமரம்

Sunday, October 3, 2021

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.10.21

 திருக்குறள் :

அதிகாரம்: கல்லாமை

குறள்:409

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் 
கற்றா ரனைத்திலர் பாடு.

பொருள்: கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டை போக்கிவிடும்.

பழமொழி :

Brevity is the soul of wit


சுருங்கச் சொல்லி விளங்க வை

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

என்னை விரும்புகிறவர் இவ்வுல உயிர்களையும் விரும்புபவர்களாக இருப்பர்.தானம் தான் பக்தியின் வழி என்றிருப்பார்... சீரடி சாய்பாபா

பொது அறிவு :

1.புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 

1991.

2.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது? 

ஏப்ரல் 1,2010.

English words & meanings :

Storey - level of a building. கட்டிடத்தின் அடுக்கு. 

Story - tale. கதை.

ஆரோக்ய வாழ்வு :

நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

1)செரிமானக்கோளாறு

சாப்பிடும்போது நீங்கள் இருக்கும் நிலை உங்கள் செரிமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி நின்றுகொண்டு சாப்பிடும்போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் அவை நுண்துகள்களாக உடைக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இது குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

2)அதிகமாக சாப்பிட தூண்டுதல்

மேலே கூறியதன் தொடர்ச்சியாக நின்று கொண்டு சாப்பிடும்போது உணவு வேகமாக கீழே சென்று விடுவதால் நீங்கள் போதுமான அளவு சாப்பிட்டு விட்டீர்களா என்று உங்களுக்கே தெரியாது. இதன் விளைவாக நீங்கள் அதிகம் சாப்பிட நேரிடும். அதனால்தான் எப்பொழுதும் அமர்ந்து நிதானமாக சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. இது நிறைவான உணர்வை தருவதோடு கலோரிகளையும் எளிதாக எரிக்கும்.

3)பசி எடுத்தல்

நீங்கள் பசியாக உணருகிறீர்களா இல்லையா என்பதை எளிதில் கண்டறியும் வழி உங்கள் வயிற்றில் எவ்வளவு உணவு உள்ளது என்பதை கண்டறிவதுதான். மருத்துவரீதியாக நின்று கொண்டு சாப்பிடுவது உணவு செரிப்பதை 30 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் உங்களுக்கு பசி எடுக்க தொடங்கிவிடும்.

4)வீக்கம்

விரைவான செரிமானம் என்பது ஆபத்தானது. ஏனெனில் உணவிலிருந்து முழுமையாக சத்துக்களை உறிஞ்சும் முன் உணவு செரித்து விடுவதால் மீதமுள்ள சத்துக்கள் வாயுவாகி உடலில் தங்கிவிடுகிறது. இது குடல் வீக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் முழுமையாக செரிக்காத போது அது வீக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கணினி யுகம் :

Ctrl + 1 - Single -space lines. 

Ctrl + 2 - Double -space lines

அக்டோபர் 4

திருப்பூர் குமரன் அவர்களின்  பிந்தநாள் 




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சனவரி 11 இல் உயிர் துறந்தார்.இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

உலக விலங்கு நாள்




உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக விண்வெளி வாரம்


உலக விண்வெளி வாரம்(World Space Week (WSWஅக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய,இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.



நீதிக்கதை

 அன்பின் மதிப்பு


அக்பர் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்தப்படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர். 

அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே சென்றான். அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அக்பர் அறிந்து கொண்டார்.

அவன் மன்னனிடம், அரசே உங்கள் உடல்நிலை சரியாக வேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றான். 

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப்போயிருந்தது. அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி அந்த விவசாயிக்கு பரிசாகக் கொடுத்து அனுப்பினான். 

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், அரசே, கெட்டுப்போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு? என்று கேட்டார். மன்னனோ, அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். 

அவனது அன்பு உண்மையானது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை கூட அவனது அன்புக்கு ஈடாகாது என்று கூறினான். 

நீதி :
நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

இன்றைய செய்திகள்

04.10.21

 ✒️வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✒️எம்.எட். படிப்பு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு.

✒️சென்னையில் மீண்டும் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை.

✒️ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிங்பம் மாவட்டத்தில்  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


✒️இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.

✒️உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

✒️உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

Today's Headlines

📃The Chennai Meteorological Department has forecast heavy rains in 11 districts due to the upper air circulation of the atmosphere. 

 📃M.Ed.  Course: Online application is available from today onwards - Notice by the Directorate of College Education.

 📃Petrol price in Chennai has crossed 100 rupees again.

 📃A moderate earthquake was felt in the Singhbhum district of Jharkhand.  The National Epicenter for Earthquake recorded, below 4.1 on the Richter scale.

 📃  General Assembly Speaker Abdullah Saheed said he was vaccinated with Indian make Covishield. 

📃India tops the World Sniper Championship Series

 📃India won silver at World Women's Chess Championship
Prepared by
Covai women ICT_போதிமரம்