![]() |
திரு. மன்மோகன் சிங் |
திருக்குறள்:286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
விளக்கம்:
பிறர் பொருளைக் கவர்வதில் மிகுந்த விருப்பமுடையவர், அளவறிந்து வாழும் நெறியில் நின்று வாழமாட்டார்.
Success tastes sweeter after struggle.
போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.
2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
பொன்மொழி :
என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ்
பொது அறிவு :
1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?
2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?
English words :
Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
உலகில் முதன்முதலாக (1969ல்) நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) சாதனை படைத்தது. நிலவில் காலடி வைத்த முதல் வீரரானார் நீல் ஆம்ஸ்ட்ராங் . இதற்குப்பின் இதுவரை எந்தவொரு நாடும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதில்லை. இந்நிலையில் 50 ஆண்டுக்குப்பின் மீண்டும் மனிதர்களை அனுப்பும் 'ஆர்டிமிஸ்-II' திட்டம், 2026 பிப்.,ல் செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. எஸ்.எல்.எஸ்., ராக்கெட்டில் ஓரியன் விண்கலத்தில், ஒரு பெண் உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வர். நிலவில் தரையிறங்காமல் சுற்றி வருவர். பயண காலம் 10 நாட்கள்.
செப்டம்பர் 26
மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்
மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது.
நீதிக்கதை
வரும்முன் காப்போம்
ஒரு ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது. அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள். வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது. குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம்.
இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது. உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை. குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை. இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.
ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் சோமு, தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லிவிட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு அய்யோ கடவுளே! ராமு அப்பொழுதே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே என்று புலம்பியது.
ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம் என்றது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன். வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி மகிழ்ச்சியாக வாழ்ந்தது. வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது. வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமு மீனோ கொல்லப்பட்டு விட்டது.
இன்றைய செய்திகள்