Sunday, August 31, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.09.2025








திருக்குறள்: 

குறள் 682: 

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் 
கின்றி யமையாத மூன்று. 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

பழமொழி :

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.

Whenever you fall, it is to rise and not to weep.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய்.நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் அவ்வாறே ஆகிவிடுவாய்.நீ உன்னை வலிமை உடையவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிவிடுவாய்.

---- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.உலக வங்கியின் தற்போதைய தலைவர் யார்?

திரு.அஜய் பங்கா -Mr.Ajay Banga

02. வைனு பாப்பு மத்திய வானியல் ஆய்வகம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?

ஜவ்வாது மலை - காவலூர்
திருப்பத்தூர்
Javadhu Hills-Kavalur - Thirupathur

English words :

incredible - extremely good, மிகச் சிறந்த, உன்னதமான

Grammar Tips: 

 When to use "of" and "off"
OF
1. To show possession:
    Ex: A Friend OF mine

2. To state what something is made of
       Ex: A table made OF wood 

3. To show what something contains
      Ex: A jar of milk 

OFF
1. To show movement away from a place
     Ex: The dog runs OFF

2. To indicate separation
     Ex:  "His hat fell OFF" 

3. To form phrasal verbs
      Ex: shut the water OFF

4. Describe disconnection 
     Ex: I worked on and OFF as a waitress."

அறிவியல் களஞ்சியம் :

 வியன்னாவைச் சேர்ந்த பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer) முதலாவதாகத் தரவு துயில் நெறியை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தினார். அவருடைய தரவு துயில் உத்தி (technique) ஆற்றல் வசியம் (Mesmerism) என அறியப்பட்டிருந்தது.

நீதிக்கதை

 வல்லவர் யார்?


ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது.

மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது.

எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

நீதி :
எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு..

இன்றைய செய்திகள்

01.09.2025

⭐தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்

⭐ஏமனில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹூத்தி பிரதமர் படுகொலை

⭐அதிகரித்து வரும் முதலீட்டு மோசடிகள்: போலி லிங்க்-களில் இருந்து பாதுகாப்பாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கெய்ல், பொல்லார்டுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்து அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை

🏀ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 50 தங்க பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா

🏀அமெரிக்க ஓபன் டென்னிஸ்:
சின்னர், கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

⭐Venkatraman appointed as Tamil Nadu DGP in charge of law and order. 

⭐Houthi PM killed in Israeli airstrike in Yemen. 

⭐Investment scams on the rise: Police advise being safe from fake links.

 SPORTS NEWS 

🏀Alex Hales becomes the second player to score 14,000 runs in T20  after Gayle and Pollard 

🏀Asian Shooting Championship: India creates history by winning 50 gold medals 

🏀 US Open Tennis: Sinner, Coco Gabe advance to the 4th round.


Covai women ICT_போதிமரம்

Thursday, August 28, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.08.2025


  

தியான் சந்த்






திருக்குறள்: 

குறள் 681: 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 

விளக்க உரை: 
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பழமொழி :

Dreams are the seeds of success. 

கனவுகள் தான் வெற்றியின் விதைகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.

2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

எந்த இடத்தில் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களோ, அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று புதியனவற்றைத் தேடத் தொடங்குங்கள். அதுவே உங்களை வெற்றியாளர்களாக உருவாக்கும் -  வால்ட் டிஸ்னி

பொது அறிவு : 

01.தமிழ்நாடு அரசின் காகித தொழிற்சாலை எங்குள்ளது?

புகழூர்- கரூர்- Pugalur-Karur

02. இந்தியாவில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிர் எது?

நெல் - Rice

English words :

idyllic – very pleasant and peaceful,பெரு மகிழ்வும் அமைதியும் அளிக்கிற.

Grammar Tips: 

 Compliment vs Complement 

Compliment (with an "i"):

This word is used when you're expressing praise or admiration for someone or something.

Ex: The teacher complimented her dress.

Complement (with an "e"):

This word is used when something enhances or completes something else. 

Ex: A tasty dessert can complement a meal.

அறிவியல் களஞ்சியம் :

 தரவு துயில் நெறியின் வெற்றி, நோயாளி தரவு துயிலாழ்த்துவோனிடம் கொண்டுள்ள நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பொறுத்தே அமையும், நோயாளி இயல்பான நிலைக்கு வந்துவிட்டால் அவனுடைய மனம் எளிய குழந்தை மனநிலைக்கு வந்துவிடும். இளமையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவனை ஆழமாகத் தாக்கிய நிகழ்ச்சிகளும், அவன் நினைவிற்கு அடிக்கடி வரும். இந்தச் சூழ்நிலையில் துயிலாழ்த்துவோன் பயிற்சி பெற்ற மருத்துவனாகவும் இருந்தால் அவனுடைய அச்சங்களைப் புரிந்து கொண்டு அவனுக்கு உதவ முடியும்.

ஆகஸ்ட் 29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் , 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில்  தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை

 வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை


ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான். 

ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான். 

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது. 

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை! 

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார். 

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான். 

வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது. 

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான். 

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை. 

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது. 

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார். 

நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

29.08.2025

⭐புதிய தோற்றத்துடன் எழும்பூர் ரெயில் நிலையம் உருவாகிறது

⭐பருத்திக்கான இறக்குமதி வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு அறிவிப்பு

⭐அமெரிக்காவின் வரி உயர்வால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு-மு.க.ஸ்டாலின்

⭐சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

🏀 ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


Today's Headlines

⭐Egmore Railway Station gets a new look 

⭐ The Central Government has announced. Import duty exemption on cotton has been extended for another 3 months.

⭐Tamil Nadu's exports severely affected by US tariff hike - M.K. Stalin

⭐The Central Government has announced the National Quality Assurance Award for 5 government medical colleges in Tamil Nadu. The colleges are in Chennai Omandurar, Tiruvallur, Tiruvannamalai, Theni, and Kanyakumari.
 
 SPORTS NEWS 

🏀World Badminton Championship: PV Sindhu wins in the 2nd round 

🏀 ICC released the rankings for the best players in ODIs. In this, India's Shubman Gill retained the first place with 784 points

Covai women ICT_போதிமரம்

Wednesday, August 27, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2025








திருக்குறள்: 

குறள் 351: 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு. 

விளக்க உரை: 

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பழமொழி :

Dont wait for the right time, make it. 

சரியான நேரத்திற்காக காத்திருக்காதே, உருவாக்கு.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.

2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்குத் தகுதியான தன்மைகளின் முதன்மையான ஆக்கக் கூறுகள் நல்ல தன்மை, உண்மை ,நல்லறிவு ஆகியவை ஆகும்-  ஜோசப் அடிசன்

பொது அறிவு : 

01.ஆழ்கடலில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்களை கண்டறிய உதவும் கருவியின் பெயர் என்ன?

ஃபிஷ் பைண்டர் அல்லது
எக்கோ சவுண்டர்
Fish finder or Echo sounder

02.உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் எது?
 
அட்டகாமா பாலைவனம்
தென் அமெரிக்கா- சிலி
Atacama Desert
South America- Chile

English words :

collaboration – the action of working with someone to produce something. ஒத்துழைப்பு அல்லது உடனுழைப்பு

அறிவியல் களஞ்சியம் :

 ஒருவனின் மூளையைச் சுழுத்தி நிலை போன்ற செயற்கையான ஆழ்ந்த அறிநிலைக்குக் கொண்டு வரும் ஒரு கலை தரவுதுயில் ஆகும் (Hypnotism). அந்நிலையில் தரவு துயிலாழ்த்துவோன் (Hypnotist) அவனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கக்கூடும். ஆழ்மனப்பரப்பை ஆய்வு செய்து நோயாளியின் அடி மனதில் புதைபட்டு மறைந்து கிடக்கும் கவலைகளையும் அக அழுத்தங்களையும் விடுவிக்கும் ஒரு நெறியே இது.

நீதிக்கதை

 புத்திசாலி அம்மா


ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான். 


பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. 


நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள். 


சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன். 


முன்பு நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள். 

இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது. 


நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது. 


இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி. 


அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது. 

மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டியி ருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய். எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள். 

புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது. 

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள். 

நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

25.08.2025

⭐காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

⭐ஜம்மு காஷ்மீருக்கு தொடரும் கனமழை எச்சரிக்கை-நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

⭐அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
இன்று நடந்த போட்டியில் 46 பந்துகளில் 9 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.

🏀உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஓட்டப் பந்தய வீரர்: அனிமேஷ் குஜுர் சாதனை.

🏀கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி வென்று அசத்தினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா.


Today's Headlines

⭐School Education Department announces quarterly exam dates 

⭐Jammu and Kashmir continue to receive heavy rain warnings, and the death toll in the landslide rises to 30 

⭐50 percent tariff on Indian goods in the US came into effect. 

 SPORTS NEWS.

🏀Sanju Samson plays for Kochi Blue Tigers in the Kerala Cricket League. In the match played today, he scored 89 runs in 46 balls, including 9 sixes and 4 fours.

🏀Animesh Kujur becomes the first Indian runner to qualify for the World Athletics Championships.

🏀Minister T.R.P. Raja's daughter Nila Raja, won silver for India at the Asian Shooting Championship held in Kazakhstan.

Covai women ICT_போதிமரம்

Monday, August 25, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.08.2025

அன்னை தெரசா







திருக்குறள்: 

குறள் 421: 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்க லாகா அரண்.  

   விளக்கம்: 

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

பழமொழி :

Your effort today is your achievement tomorrow. 

இன்றைய உழைப்பு, நாளைய சாதனை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அதிகாலை எழுவதே ஆரோக்கியம்.

2. எனவே அதிகாலையில் எழுந்து எனது பணிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

எழுந்திருங்கள் , விழித்திருங்கள் , குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைத்திருங்கள் - விவேகானந்தர்

பொது அறிவு : 

" 01.தமிழ்நாட்டின் கற்பகவிருட்சம் என்று அழைக்கப்படும் மரம் எது?


      பனைமரம்- Palm  tree


02. "" தமிழ் நாடகத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்? 

     

       பம்மல் சம்பந்த முதலியார்

      Pammal Sambandha Mudaliyar"

English words :

ceremony – a formal public or religious event; முறைசார்ந்த பொதுநிகழ்ச்சி அல்லது சமயச் சடங்கு.

Grammar Tips: 

 When we use two subject in a sentence including 'I' as a pronoun , the subject is used to first

We have to follow as,

My friend and I went for a movie ( correct)

I and my friend went for a movie (wrong)

அறிவியல் களஞ்சியம் :

 நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் 26

அன்னை தெரசா  அவர்களின் பிறந்தநாள்


* அன்னை தெரசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார்.

 * இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.

*  நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். 

* முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.  1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். 

* இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 

* அன்னை தெரசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

நீதிக்கதை

 வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 


ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 


மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 


அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 


அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 


குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 


நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 


குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 


நீதி :

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.

இன்றைய செய்திகள்

26.08.2025


⭐அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனையோடு பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது- அமைச்சர் அன்பில் மகேஷ்

⭐இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐இந்தியாவுடன் இமாச்சல் வழியே மீண்டும் வர்த்தகம் - சீனா கொள்கை அளவில் ஒப்புதல்

⭐காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீ. ரைபிள்-3 பொஷிஷன் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

🏀 ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ்(ரஷியா) பெஞ்சமின் போன்சி(இத்தாலி) ஆகியோர் மோதினர்.இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.

Today's Headlines

⭐Minister Anbil Mahesh spoke about School education department was working with scientific progressive 

⭐Chief Minister M.K. Stalin has inaugurated the Institute of Journalism .

⭐Resuming trade with India via Himachal Pradesh - China approves in principle

 ⭐Israeli airstrike on hospital in Gaza and 8 killed

 *SPORTS NEWS* 

🏀India's Aishwarya Pratap Singh won gold at the Asian Shooting Championship in Kazakhstan. 

🏀Benjamin won the first round of the singles competition.

Covai women ICT_போதிமரம்