அதிகம் கேள், குறைவாகப் பேசு
Hear more, but talk less
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை,வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை---காமராஜர்
பொது அறிவு :
1. உலக பரப்பளவில் இந்தியா எத்தனையாவது நாடாகும்?
விடை: ஏழாவது.
2. அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிக்கை முதன்முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது?
விடை: 1947
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.
நீதிக்கதை
பூனையும் நரியும்
ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அவர்களை பிடிக்காது”, என்று நரி சொல்லியது . “ஆமா ஆமா அவர்களை எனக்கும் சுத்தமா பிடிக்காது” என்று பூனையும் சொன்னது.
“ அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவர்களால் என்னை பிடிக்க முடியாது.ஏனென்றால் , அவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்”, என்று அந்தப் பூனை கேட்டது.
அதற்கு நரிசொல்லியது , "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.
“நிஜமாகவா”? என்று அந்தப் பூனை கேட்டது . அதற்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதில் ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க செய்யக் கூடியது” என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக் கொண்டிருக்கும் போது வேட்டை நாய்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது.
உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாற்றி கொள்ள போகிறேன்” என்று கூறி விட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாற்றி கொள்ள போகிறாய் என்று நானும்
பார்க்கிறேன்” என்று அந்த நரியிடம் பூனை சொன்னது.
அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தியும் நரியால் அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.
நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment