![]() |
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள் |
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.
Even water can be held in a seive, if you wait till it turns to ice.
இரண்டொழுக்க பண்புகள் :
*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.பொன்மொழி :
இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தாதே, நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும், நீ முயற்சி செய்தால் ....
பொது அறிவு :
1. ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது?
விடை: ஹீமோகுளோபின்
2. மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக்காரணம் என்ன?
விடை: பரப்பு இழுவிசை
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (IFOAM) இயற்கை வேளாண்மையை, சில முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.
நவம்பர் 06
- போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்
நீதிக்கதை
ஒரு வயதான மேஸ்திரி தனது வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அவரது கனவு.
தனது முதலாளியான பொறியாளரிடம் சென்று தான் ஓய்வு பெறும் செய்தியை கூறினார். தனது நீண்ட கால பணியாளர் ஒருவர் ஓய்வு பெறுவதில் முதலாளிக்கு சிறிய வருத்தம்தான்.சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் "எனக்கு எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும், இன்னும் ஒரே ஒரு வீட்டை மட்டும் கட்டிக் கொடுக்க முடியுமா?" என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து வேலையை தொடங்கி விட்டாலும் அவரால் அவரால் முழு மனதுடன் அந்த வேலையில் ஈடுபட முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பை கொண்டு அந்த வீட்டை கட்டி முடித்தார். "வேலையில் இருந்து ஓய்வு பெற போகிறோம் இந்த வீட்டை மட்டும் ஒழுங்காக கட்டினால் மட்டும் இனிமேல் என்ன கிடைக்கப் போகிறது" என்று அலட்சியமான போக்கு அவருக்கு.
வேலை எல்லாம் முடிந்த பிறகு வீட்டை பார்வையிட்டு விட்டு வந்த முதலாளி அந்த வீட்டின் சாவியை எடுத்து மேஸ்திரியிடம்f கொடுத்தார். " இந்தாருங்கள் இந்த வீடு தங்களுக்காக நாங்கள் அளிக்கும் அன்பு பரிசு. இத்தனை வருடங்கள் எங்கள் நிறுவனத்திற்காக வேலை செய்தமைக்கான வெகுமதி" என்று மிகவும் சந்தோஷத்துடன் கூறினார்.
மேஸ்திரியின் முகத்தில்
ஈயாடவில்லை. "அடடா! நமக்கான வீடு என்று தெரிந்திருந்தால் இன்னும் பலப்பல டிசைன்களில் வடிவமைத்திருக்கலாம், மிக உயர்தரமான பொருட்களைக் கொண்டுஅலங்கரித்திருக்கலாம் என்று மனதில் எண்ணினார்.
நீதி : நமக்கான வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்கிறோம். செய்யும் தொழிலே தெய்வம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment