Tuesday, July 18, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2023

  

நர்மதை நதி



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :219

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

விளக்கம்:

உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவும் உள்ளம் உடையவன் வறியவன் ஆவது, செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்யமுடியாது வருந்தும் போதுதான்.


பழமொழி :

A young calf knows no fear

இளங்கன்று பயமறியாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

ஒரு புத்திசாலி பல சாதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர், ஆயினுங்கூட மேலும் கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். --எட் பார்க்கர்

பொது அறிவு :

1. சர்தார் சரோவர் அணை எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?

விடை: நர்மதா நதி

2. விந்தியா மற்றும் சத்புரா மலைத்தொடருக்கு இடையே ஓடும் ஆறுகள் எது?

விடை: நர்மதை நதி

English words & meanings :

 kiwi - a wingless bird சிறகற்ற ஒருவகை பறவை; lad - a boy சிறுவன்

ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி, மயக்கம் போன்றவை அடிக்கடி ஏற்படும் நிலை சிலருக்கு ஏற்படுகிறது. கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது.

நீதிக்கதை

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கி  கொள்ளவேண்டும்.

இன்றைய செய்திகள்

19.07. 2023

*வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடம் திறப்பு. பிரதமர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

*மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.

*மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

*வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்த முடிவு.

*இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 15 பழங்கால சிற்பங்களை ஒப்படைத்தது அமெரிக்கா.

*இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா ஆர்வம். நான்காவது போட்டி நாளை தொடக்கம்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி: 800 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு.

Today's Headlines

*Inauguration of new building of Veera Savarkar International Airport.  Prime Minister inaugurated through video presentation.

 * Tamil Nadu government issued an ordinance to allocate 4.5 crore rupees to provide scooters for disabled people.

 *There is a ban on fishing in the Gulf of Mannar.

 *Decision to double entry fee at Vandalur Zoo.

 *US hands over 15 ancient sculptures smuggled from India.

 *Australia keen to win Ashes Test series against England.  The fourth match starts tomorrow.

 *Asian Games: 800-strong Indian team participates.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment