Monday, January 10, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.01.22

   திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்: படையியல்

அதிகாரம்: படைமாட்சி

குறள் எண் : 763

குறள்:
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும.

பொருள்:
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

பழமொழி :


Do not cry for the moon.


 எட்டாத கனிக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை. 

2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை

பொன்மொழி :


எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் நகரக்கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும்.____அன்னை சாரதா தேவி

பொது அறிவு :


1. இந்தியாவில் முதல் உள்நாட்டு விமான தாங்கிக் கப்பலின் பெயர் என்ன? 


விக்ராந்த். 


2. ஐ.நா பொதுச் சபையானது 2021 ஆம் ஆண்டை எந்த ஆண்டாக அறிவித்துள்ளது? 


"பழங்கள் மற்றும் காய்கறிகள் சர்வதேச ஆண்டு."


English words & meanings :


Current - a movement of water or air, காற்று நீர் ஆகியவற்றின் தொடர் ஓட்டம் /பாய்வது,


 current - at present, தற்போது நிகழ்வது 


ஆரோக்ய வாழ்வு :

1.நெல்லிக்காய் தேனில் ஊறவைத்து தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும். 


 2. சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


கணினி யுகம் :

Ctrl + Alt + Numpad_subtract. - Insert em dash. 


 Ctrl + Numpad_subtract. - Insert en dash 


டிசம்பர் 11


திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்

நீதிக்கதை


கைக்கொடுப்பது எது?

ஒரு பெரிய நகரத்தில் இருந்த பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் அவரின் கடை மிகப் பிரபலம். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, நீங்க நல்லா நிர்வாகம் பண்றீங்க. தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனியில் நீங்க வேலையில் இருந்திருந்தால் நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் என்றார்.

பெரியவர் புன்னகைத்துவிட்டு, இல்லை. நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கிறேன். எப்படி? பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் கூடையில் சமோசா விற்றபோது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க. அப்பொழுது என் வருமானம் மாதம் இரண்டாயிரம் ரூபாய். உங்கள் வருமானம் மாதம் இருபதாயிரம்.

நீங்கள் இப்பொழுது இந்த கம்பெனியில் மேனேஜர் ஆகி விட்டீர்கள். மாதம் இரண்டு லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள். இப்பொழுது எனக்கு சொந்தமாக இந்த கடை இருக்கிறது. எனக்கு நல்ல பேர் இருக்கு. நான் மாதம் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாதிக்கிறேன். நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல இல்லாமல் நேரடியாக முதலாளியாக வந்து கடையை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தால் போதும் என்றார். 

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்களின் இத்தனை வருட உழைப்பின் பலன் உங்கள் முதலாளியின் மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் அனுபவித்த அவ்வளவு கஷ்டத்தையும் அவனும் அனுபவிப்பான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்களே எண்ணிப் பாருங்க என்றார். ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம் என்றார். மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு மௌனமாகச் சென்று விட்டார். 

நீதி :
கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

11.12.21


◆கரோனா தடுப்பு நடவடிக்கையாக  ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையிட 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

◆தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் கால வரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

◆கடும் குளிர், பனியிலும் துணிச்சலாக எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்தி வெளியீடு.

◆மூன்றாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடலில் ஆன்டிபாடி அளவு கணிசமாக அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நம்பிக்கை தரும் தகவலைத் தெரிவித்துள்ளது.

◆மத்திய தரைகடல் நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் டெல்டாக்ரான் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

◆புரோ கபடி லீக்: புனேரி பால்டன், உ.பி.யோத்தா அணிகள் வெற்றி.

◆அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா- ராம்குமார் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Today's Headlines

 🌸 As a preventive measure against Corona Government of Tamil Nadu gave permission to only 150 spectators to watch the jallikattu competitions.

🌸 Higher Education Minister Ponmudi announced that all university examinations in Tamil Nadu have been postponed indefinitely.

 🌸 Army soldiers bravely guarding the border in extreme cold and snow: Federal Ministry of Defense press release.

 🌸The Indian Medical Research Institute (IMRC) has reported that a third dose of covaxin vaccine can significantly increase antibody levels in the body.

🌸 A new type of corona virus has been identified in the Mediterranean country of Cyprus.  Researchers have named it Deltacron.

 🌸 Pro Kabaddi League: Puneeri Bolton, UP Yodha teams won.

🌸India's Bopanna-Ramkumar pair clinch the Adelaide International Tennis Championship.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment