திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: அரசியல்.
அதிகாரம்: குற்றம் கடிதல்.
குறள் : 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
பொருள்:குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
பழமொழி :
All things are difficult before they are practiced
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.
2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.
பொன்மொழி :
உண்மை எதுவெனத் தீர்மானிக்க ஒரு பரீட்சை ,எந்த ஒன்று நம் தேகத்தை பலவீனப்படுத்துகிறதோ அது நம் அறிவையும் மனதையும் பலவீனமாக்கும் .உணர்வீர் ஒதுக்குவீர். -------- சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் வேதிப்பொருள் எது?
கிளிசரால்.
2.100% மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும் பொருள் எது?
கண்ணாடி.
English words & meanings :
Chatter box - a person who talks a lot, அதிகம் பேசுபவர்,
Smart Cookies - an intelligent person who is able to handle difficult situations, கடின சூழ்நிலைகளை கையாளக்கூடிய திறமைசாலி
ஆரோக்ய வாழ்வு :
பாதவெடிப்பு பிரச்சனை - ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்கள்
- வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
- தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
- கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
- வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
கணினி யுகம் :
Ctrl+1 - Single space lines.
Ctrl+2 - Double space lines
நீதிக்கதை
செய்நன்றி மறவேல்
ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.
மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.
ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.
தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.
இன்றைய செய்திகள்
23.10.21
◆போதை மற்றும் மனநோயை ஏற்படுத்தும் மருந்துகள் மக்களுக்கு சுலபமாகக் கிடைப்பதைத் தடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
◆சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
◆அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
◆பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
◆இணையதள பயன்பாட்டை அதிகரிக்க கிராமங்களில் பறக்கும் மொபைல் டவர்கள்: பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் திட்டம்.
◆சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை கரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. வைரஸ் பரவியுள்ள லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
◆கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டி தொடக்க ஆட்டத்தில் போபண்ணா ஜோடி வெற்றி.
◆டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஓமனை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு ஸ்காட்லாந்து அணி முன்னேறியது
Today's Headlines








Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment