திருக்குறள் :
அதிகாரம்-3 நீத்தார் பெருமை
குறள்-28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். பொருள்: சான்றோர்களின் பெருமையை இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்.
பழமொழி :
Do well what you have to do. செய்வன திருந்தச் செய்
இரண்டொழுக்க பண்புகள் :
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி :
மனம் ,உடல்,செயல் ஆகிய மூன்று நிலைகளிலும் தூய்மையைக் கடைபிடிப்பவரே தொண்டுள்ளம் கொண்டவராகிறார்.
------காந்தியடிகள்
பொது அறிவு :
1.உலகில் பிளாஸ்டிக் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
ஜெர்மன்.
2."இசைக் கருவிகளின் ராணி "என அழைக்கப்படுவது எது?
வயலின்.
English words & meanings :
* Broigus - angry,irritated.
* Athleisure - casual clothing
ஆரோக்ய வாழ்வு :
1)கொரோனா காலகட்டத்தில் மனித உடலுக்கு அதிகம் தேவைப்படும் வைட்டமின் D யானது மீனில் அதிகம் உள்ளது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். மூளை வளர்ச்சியை அதிகரிக்கவும் கண்பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது.
2)காளானிலும் வைட்டமின் D அதிகம் உள்ளது.இது சூரிய ஒளியில் வளர்வதால் வைட்டமின் D, B1, B2, B3, காப்பர் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன.மேலும் இதயநோய் , புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
2)காளானிலும் வைட்டமின் D அதிகம் உள்ளது.இது சூரிய ஒளியில் வளர்வதால் வைட்டமின் D, B1, B2, B3, காப்பர் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன.மேலும் இதயநோய் , புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
கணினி யுகம் :
Ctrl+ V - Paste ,
Ctrl+ P - Print
செப்டம்பர் 9 :
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.
நீதிக்கதை
குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்
ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.
அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்திப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத்விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்துவிட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.
அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இதுவரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன.
நீதி :
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்க்கலாம்.
இன்றைய செய்திகள்
09.09.21
◆ வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க மேலும் 4 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் அறிவிப்பு.
◆ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேறியது.
◆ கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்.
◆ காற்றை சுத்திகரிக்கும் நாட்டின் முதல் பனிப்புகை கோபுரம் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.
◆ மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
◆ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா டாப்10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
◆ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு.
Today's Headlines







Prepared by
Covai women ICT_போதிமரம்
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment