Friday, December 14, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.12.18

திருக்குறள்


அதிகாரம்:நடுவுநிலைமை

திருக்குறள்:120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

விளக்கம்:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

பழமொழி

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள்

* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த  மாட்டேன்.

* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை
பெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.

பொன்மொழி

அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.

    - பாரதிதாசன்

பொதுஅறிவு

1.மத்திய பிரதேசத்தின் மாநில விலங்கு எது?

   பரம்சிங்கா( சதுப்பு மான்)

2. மத்திய  பிரதேசத்தின் மாநில மலர் எது?

   வெள்ளை  லில்லி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சப்போட்டா



**சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.

** சப்போட்டா இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

** கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.

** இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு.

English words and Meaning

Vain    வீண்,உதவாத
Waive. விட்டுகொடு
Xebec.  பாய்மரக்கப்பல்
Yelp.  குரைத்தல்
Zinc துத்தநாகம்

அறிவியல் விந்தைகள்

மோனல்

* இந்த பறவை அதிகம் காணப்படும் இடம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம் ஆகும்.
* இது இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் மாநில பறவை ஆகவும் நேபாளத்தின் தேசிய பறவை ஆகவும் உள்ளது.
* இது இந்தியா தவிர பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் காணப்படுகிறது.
* ஆண் பறவை அழகிய பல வண்ணங்களிலும் பெண் பறவை வண்ணமற்று சாதாரணமாகவும் காணப்படும்.
* இதன் அழகிய இறகுகளுக்காக வேட்டை ஆட படுவதால் அழியும் நிலையில் உள்ளது.

நீதிக்கதை

வார்த்தை வலிமை

ஒரு கிராமத்தின் வழியாக ஒரு நாள்  ஒரு முனிவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு பெண் முனிவரிடம் வந்து  தன் வீட்டின் அருகின் உடல்  நலமில்லாத குழந்தை ஒன்று இருக்கிறது என்றும், அக்குழந்தையை குணமாக்கித்தரும்படியும் முனிவரிடம் மிகப் பணிவுடன் உதவிக் கேட்டாள். உடனே முனிவர் அப்பெண்ணிடம் உடல் நலமில்லாத அக்குழந்தையை அழைத்துவரும்படிக் கூறினார். அந்தப்பெண்ணும் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார். எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா என்ன? என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான். உனக்கு அது குறித்து என்ன தெரியும்? நீ ஒரு அறிவில்லாத முட்டாள் என முனிவர் அந்த மனிதனைப் பார்த்துக் கூறினார். முனிவர் சொன்ன வார்த்தையைக் கேட்டு அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்தான். அவனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. அந்த முனிவரைக் கடுஞ்சொற்களால் எப்படியாவது திட்டி அவர் மனதைக் காயப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
புன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்? என்று கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டப்பிறகு அந்த மனிதனுக்கு வார்த்தைகளின் வலிமை புரிந்தது.

நீதி : நல்லதைப் பேசினால் நிச்சயம்
          நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு.

இன்றைய செய்திகள்

15.12.2018

* வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, காரைக்கால் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* பத்திரங்களை பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் திரும்ப வழங்கும் திட்டம் வரும் 17-ம் தேதி தொடங்கப்படுவதாக பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

* ஆங்கில நாவலாசிரியரான அமிதவ் கோஷுக்கு 2018ம் ஆண்டின் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2-வது டெஸ்ட் கிரிக்கெட் முதல் நாளில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி  277 ரன்கள் எடுத்துள்ளது.

* வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்  அரையிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து,  சமீர் வர்மா முன்னேறியுள்ளனர்.

Today's Headlines

🌹 Due to low air pressure in the Bay of Bengal, the second number of storms cage  in the Karaikal harbour is loaded with a storm warning.

🌹Registrar's Chairman J. Kumarakuruparan said that the scheme for return of the borrower within one hour of registration will be launched on the 17th.

🌹 English novelist Amitav Ghosh has been awarded the 2018 Gyanpid Award.

🌹Australia scored 277 runs against India in the first day of the 2nd Test.

🌹 India's PV Sindhu and Samir Verma advanced to the World Tour Finals.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment