Sunday, April 6, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 07.04.2025

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

   






திருக்குறள்: 

பால்:பொருட்பால்

 இயல் :குடியியல்
                     
குறள் எண்:1006

 அதிகாரம் :நன்றிஇச் செல்வம்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.

பொருள்:

தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

பழமொழி :

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்.

A teacher is better than two books.

இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 

* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல்  எழுதுவேன்.

பொன்மொழி :

உன் வேதனை  பலரைச்  சிரிக்க வைக்கலாம். ஆனால்,  உன் சிரிப்பு யாரையும்  வேதனைப்பட வைக்கக்கூடாது.----சார்லி  சாப்ளின்

பொது அறிவு : 

1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?    

விடை : பிங்கலி வெங்கையா.         

2. காற்றிலுள்ள நைட்ரஜனுக்கு பதிலாக ஆழ்கடலில் மூழ்குபவர்கள் சுவாசிக்க  பயன்படுத்தும் மந்த வாயு எது? 

விடை: ஹீலியம்

English words & meanings :

Aeroplane.    -   விமானம்

Bicycle.     -     மிதிவண்டி 

வேளாண்மையும் வாழ்வும் : 

 மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை துணி துவைக்க பயன்படுத்துங்கள்.

ஏப்ரல் 07

உலக நலவாழ்வு நாள்

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 


வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.  தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.

நீதிக்கதை

 அபசகுனம்


அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள கடவுளின் படத்தை தான் பார்ப்பார்.

ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வந்தது. எல்லாம் சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் நடந்தது என்று,அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது.பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

அதற்கு பீர்பால் “நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே , அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்” என்றார்.

அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌

இன்றைய செய்திகள்

07.04.2025

* தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

* 500 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு.

* நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.

* உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி.

* உலக குத்துச்சண்டை கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் ஹிதேஷ்.

* சார்லஸ்டன் டென்னிஸ் தொடர்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* This year's fishing ban in Tamil Nadu begins on the coming 15th. This ban will remain in effect for 61 days. Thus, the price of fish is expected to increase from next week.

* The Supreme Court has ordered the Tamil Nadu government to determine the minimum educational qualification for minority educational institute teachers.

* Solar Panel is a must in the homes of families who use 500 units. Kerala Government Announcement.

* India has provided 442 metric tonnes of food items to Myanmar affected by the earthquake.

* Russia's  missile attack on Ukraine. 18 people killed 

* World Boxing Cup: Hitesh set a historic record as the first Indian to advance to the final.

* Charleston Tennis Series: Jessica Begula Progress to the final.

Covai women ICT_போதிமரம்

Thursday, April 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.04.2025

மார்டின் லூதர் கிங்

 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1005

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய 
கோடிஉண் டாயினும் இல். 

பொருள் :
பிறர்க்கு கொடுக்காதான், தானும் உண்ணாதான் இவனுக்கு பலகோடி இருந்தென்ன பயன்.

பழமொழி :

Set a thief to catch a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒருநாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும்.---ஆபிரகாம்  லிங்கன்

பொது அறிவு : 

1. நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது? 

விடை:  ஆடுதுறை

2. மனித மூளையானது எத்தனை சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது? 

விடை : 65%

English words & meanings :

 Tablet.    -          மாத்திரை
 
Toothache.        -     பல் வலி

வேளாண்மையும் வாழ்வும் : 

 கைகழுவும் போது மடமடவென தண்ணீரை திறந்து விட்டு வீணாக்காதீர்கள்.

ஏப்ரல் 04

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.  மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.



மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்


மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நீதிக்கதை

 நாயின்  தந்திரம்

ஒரு அரசர் ஓய்வுக்காக காட்டுக்குச் சென்ற போது, தன்னுடைய நாயையும் அழைத்துச் சென்றார். அவர் தனது வேட்டையில் மும்முரமாக இருந்த பொழுது நாய் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப்பூச்சியை பிடித்துக் கொண்டு காட்டில் வெகு தூரம் சென்று விட்டது.

 சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதை நாய் கண்டது. அது தன்னைத்தான் வேட்டையாட வருகிறது என்பதை அறிந்து கொண்ட நாய் எப்படி தப்பிப்பது என்று யோசித்தது.

 தூரத்தில் சில எலும்பு துண்டுகள் கீழே கிடந்ததை பார்த்தது. சட்டென்று  நாய்க்கு ஒரு யோசனை தோன்ற, புலிக்கு முதுகை காட்டியபடி எலும்பு துண்டுகளுக்கு அருகில் உட்கார்ந்தது.

 புலி அருகில் வந்ததும் நாய்,"ஆஹா புலியின் மாமிசம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்றது.

இதனை கேட்ட புலிக்கு பயம் வந்தது. நாயை, புலி வேறு ஏதோ புதிய மிருகம் என எண்ணிக் கொண்டது.நல்ல வேலை இந்த மிருகத்திடம் நாம் அகப்பட்டுக் கொள்ளவில்லை என்று நினைத்தது.

கீழே நடந்ததை மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது.

 நாய், புலியை ஏமாற்றியதை    புலியிடம் சென்று கூறி அதன் மூலம் தனக்கு பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்று எண்ணி புலியிடம், "அது பெரிய மிருகம் ஒன்றும் இல்லை வெறும் நாய் தான்"என்று விளக்கிக் கூறியது 

 உடனே புலி," அந்த நாய்க்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கின்றேன்" என்று திரும்பி நாய் இருந்த இடத்தை நோக்கி வந்தது.

குரங்குடன் புலியும் சேர்ந்து வருவதை பார்த்த நாய் ஏதோ தவறாக நடக்கப் போவதை யூகித்தது. எனவே முன்பு அமர்ந்ததைப் போலவே அமர்ந்துகொண்டு, " என்ன இது!அந்த குரங்கு சென்று எவ்வளவு நேரம் ஆனது,புலியை ஏமாற்றி அழைத்துக் கொண்டு வருவதாய் சென்ற குரங்கை இன்னும் காணவில்லையே" என்று கூறியது. 

அதனை கேட்ட புலி,  தன்னை ஏமாற்றியது குரங்கு என்று எண்ணி,குரங்கை ஒரே அடி அடித்து விட்டு தன் உயிர் பிழைக்க ஓட்டமாய் காட்டுக்குள் ஓடியது.

நீதி : சமயோசிதமாக  செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்

இன்றைய செய்திகள்

04.04.2025

* ரூ. 45 இலட்சத்தில் 
சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள் நிறுவப்படும் என தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தகவல்.

* கோயம்புத்தூர் மாநகராட்சியில் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

* கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

* அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

* தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றுள்ளார்.

* ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி.

Today's Headlines

* The Tamil Nadu Fisheries Development Corporation has announced that fish waste recycling plants will be established in Chennai, Ramanathapuram, and Thoothukudi at a cost of ₹4.5 million.
 
   * The construction of the Classical Tamil Park is undergoing within the Central Prison complex in Coimbatore  Corporation.
 
   * The Supreme Court has upheld the Calcutta High Court's order canceling the appointments of 25,753 individuals, stating that the West Bengal teacher recruitment in 2016 was illegal.
 
   * China has urged the United States to immediately withdraw the recently imposed tariffs and has stated that it will retaliate to protect its national interests.
 
   * Tamil Nadu's S.S. Madhunisha won 2 medals in the National Sub-Junior Archery Competition.
 
   * Bengaluru FC defeated Goa in the Indian Super League (ISL) football match.

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2025

  


 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

குறள் எண்:1004

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
 நச்சப் படாஅ தவன்?

பொருள்:
எவராலும் விரும்பப்படாத கருமி தனக்கு பிறகு என்று எதை கருதுகின்றான்?

பழமொழி :

செய்யத் தக்கதை ,

செயத்தக்க வழியில் செய்வதே அழகு.

Whatever is worth doing, is worth doing well.

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

உங்களின் நாளைய எதிர்காலம், இன்றைய செயல்களில் இருக்கிறது. ---மகாத்மா காந்தி

பொது அறிவு : 

1. குமரி மாவட்டத்தின் பழைய பெயர் என்ன? 

விடை : நாஞ்சில் நாடு.        

2. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர் என்ன? 

விடை: ஒடிசா 

English words & meanings :

 Stomach ache.     -    வயிற்று வலி

Surgery.    -    அறுவை சிகிச்சை

வேளாண்மையும் வாழ்வும் : 

குற்றால அருவியில் குளிப்பதாய் நினைத்துக் கொண்டு ஷவரில் தண்ணீரை திறந்து விடாமல் குளிப்பதற்குக் குறைந்த அளவு தண்ணீரையே பயன்படுத்துங்கள். 

நீதிக்கதை

 பறவையும் ஆமையும்


 ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது. 

அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை 

மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,

சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது. 

அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம் 

மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.அந்த பதிலைக் கேட்ட ஆமை சற்று சிந்தித்தது.

நீதி: தனியாக பெரிய பங்களாவில் வசிப்பதை விட, உறவு மற்றும் நண்பர்களுடன் ஒரு சிறிய வீட்டில் வசிப்பது சந்தோசம்.

இன்றைய செய்திகள்

03.04.2025

* விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் "தங்கத்தால் செய்யப்பட்ட மணி" ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

* இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் நேற்று முழு கடையடைப்பு.

* தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

* திருநங்கைகளுக்காக நாடு முழுவதும் 18 இல்லங்கள்: மத்திய அரசு தகவல்.

* இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

* சென்னையில் நேற்று முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது.

Today's Headlines

*During the 3rd phase of the excavation in Vembakottai at Virudhunagar district many valuable artifacts were found already. Now they found a small golden ball in 2.04 metre depth.

*There is bundh in Nilgiris district yesterday, urging authorities to cancel the e-pass practice.

*Heavy rains are likely to occur for four days in Tamil Nadu. Prediction by India Metrological department 

*18 Homes across the country for transgender people: Central Government Information.

*US President Donald Trump is reportedly engaged in a serious consultation on 100% tax on India's agricultural products.

*Tickets for the match between Chennai Super Kings and Delhi Capitals started in the IPL cricket match.

*The first Sabha Club men basketball tournament will be held in Chennai from yesterday to 7th.

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 1, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2025

 







திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

குறள் எண்:1003

அதிகாரம்:நன்றிஇச் செல்வம்
 ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
 தோற்றம் நிலக்கும் பொறை.

பொருள்:
சேர்த்த பொருளை இறுக்கி வைத்துக் கொண்டு, ஈகை புகழில்லாத ஆடவர் பூமிக்கு பாரமாவர்.

பழமொழி :

செயல்கள் தேவை; சொற்களல்ல.

Wanted deeds only, not words.

இரண்டொழுக்க பண்புகள் :

1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.  

2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி :

என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால்,  என் நேரத்தை மட்டும் கேட்காதே!---நெப்போலியன்  ஹில்

பொது அறிவு : 

1. தண்ணீரில் போட்டால் மிதக்கும் கோள் எது? 

விடை : சனி.       

2. மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய பாலைவனம் எது? 

விடை: சகாரா பாலைவனம்

English words & meanings :

 Ointment.      -   களிம்பு மருந்து

Powder.     -       பொடி

வேளாண்மையும் வாழ்வும் : 

 ஷவரின் துளைகள் சிறிய அளவில் இருக்குமாறு அமைத்துக் குளிக்கும் போது அதிக நீர் செலவாவதைக் கட்டுப்படுத்த முடியும். 


நீதிக்கதை

 நன்றி மறந்த சிங்கம் |


முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.


“மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்ற குரல் கேட்டது.தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.


அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.


மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,” என்றது.“நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி 

நான் விடுவிக்க முடியும்?” என்றான் மனிதன்.


“மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்,” என்று 

நைசாகப் பேசியது சிங்கம்.


சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.


இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே… அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி,” என்றான்.


“என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்?  என்றது சிங்கம்.


“கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றான் மனிதன்.


அவ்வழியாக ஒரு நரி வந்தது.

“இதனிடம் நியாயம் கேட்போம்,” என்று கூறிய மனிதன் நடந்த கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.அனைத்தையும் 

கேட்ட நரி ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்தது.


“நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்,” என்றது நரி.


உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.“நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்.“எந்தக் கூண்டிற்குள்?” என்றது நரி.


“அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்,” என்றது சிங்கம்.

“எப்படி அடைந்து கிடந்தீர்கள்?” என்றது நரி.


சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.


“நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!” என்று கத்தியது சிங்கம்.


“நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள்.  முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்,” என்றது நரி.


நன்றி மறந்த சிங்கம் தன் நிலையை நினைத்து நொந்து போனது.

 

நீதி :ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறக்க கூடாது. மறந்தால் தீமை நமக்கே.

இன்றைய செய்திகள்

02.04.2025

* மும்பையில் காடுகளின் நடுவே மரத்தினால் ஆன நடைபாதை திறப்பு!மும்பை மலபார் ஹில் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வன நடைபாதை நேற்று திறக்கப்பட்டது.

* இதுவரை அரசு 
பள்ளிகளில் 1,17,310 மாணவர்கள் சேர்க்கை' - கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்.

* கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதாக அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

* கடுமையான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; 3 லட்சம் பேருக்கு ஆபத்து: ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு

* தொடர் தோல்வி எதிரொலி: டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்.

* இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Today's Headlines

* A wooden bridge is  opened in the middle of the forest in Mumbai!
The newly built forest corridor in Malabar Hill, Mumbai, opened yesterday.

 * So far 
Admission of 1,17,310 students in government schools - Education Minister Anbil Mahesh is proud.

* Sanjay Gandhi, special lawyer, said that Kumbakonam Beetal, Kumari Thovalai's maanika malai which is made of flowers to give to temple had got a geographical code 

* The possibility of a severe earthquake; 3 lakhs of people in danger: Announcement of Japan

* Series Failure Echo: Medvedev lost the top 10 in the tennis rankings.

* In the name of former India captain Mansoor Alikan awards were given. Now the England Cricket Board planned to stop this trophy.

Covai women ICT_போதிமரம்