Tuesday, February 4, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.02.2025

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ

  






திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:963

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

 பொருள்: செல்வம் பெருகும் போது அடக்கம் வேண்டும். செய்வம் குறையும் போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.

பழமொழி :

தருமமே தலை காக்கும். 

Charity guards the head.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.---மாவீரன் நெப்போலியன்

பொது அறிவு : 

1. நிலவில் விளையாடிய முதல் விளையாட்டு எது? 

விடை : கோல்ப்.  

2. அடிடாஸ் எந்த நாட்டின் நிறுவனம்? 

விடை : ஜெர்மனி

English words & meanings :

Mud.    -    சேறு
 
Ocean.    -   பெருங்கடல்/சமுத்திரம் 

வேளாண்மையும் வாழ்வும் : 

நீர் வளத்திற்கான தேவை மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது. 

பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்


கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985 ) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுயூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.

நீதிக்கதை

 ஆணவம் அழிந்தது 


போரில் வெற்றி பெற்ற  மன்னர் ஆணவம் கொண்டார் . தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால்  மன்னரின் ஆணவம் அதிகரித்தது.


அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?"   எனக் கூறி சிரித்தார்.


துறவி சற்றும் கலங்கவில்லை.

மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.


தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார்.


 மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார்.


அதற்கு துறவி,"மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர்  இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.அதைப்போல தாங்களும் சிந்தித்தால் தமக்கே புரியும் "என்று கூறினார்.


 மேலும், துறவி,"இந்த உலகில்  தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தை கைவிட்டார்.

இன்றைய செய்திகள்

05.02.2025

* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.

* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.

* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.

* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.

Today's Headlines

* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.

* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.

* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu 

* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.

* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.

* Chennai Open Tennis: Italian player won in the first round.

Covai women ICT_போதிமரம்

Monday, February 3, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.02.2025

 

உலகப் புற்றுநோய் நாள்






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:962.

 சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: புகழொடு
மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.

பழமொழி :

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.  

 There is no words superior to one's father's advice.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.

உழைக்கும் நேரம்.

பொது அறிவு : 

1. தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?

 விடை : 5.    

2. பின் பக்கமாகவும் நீந்தும் உயிரினம் எது?

 விடை : இறால்

English words & meanings :

 Meadow.    -  புல்வெளி
 
Mine.      -     சுரங்கம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீர் முக்கியமானது - அதற்கு மாற்றீடு எதுவும் இல்லை. எனவே நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று ஆகும்.

பிப்ரவரி 04

வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.


உலகப் புற்றுநோய் நாள்


உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை

 ஒற்றுமை


 ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார்.


 அவர்களை "ஒற்றுமையாக இருங்கள்" என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.


ஒரு நாள் அவருக்கு உடல்நிலை  சரியில்லாமல் போகவே நால்வருக்கும்  ஒற்றுமை பற்றிய பாடத்தினை புகட்ட அவர் நால்வருக்குள் ஒரு போட்டியை வைத்தார்.


 நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்புகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். அவர்களும் கொண்டு வந்தனர்.  நான்கு கொம்புகளையும் கயிறு கொண்டு ஒன்றாக கட்டச் சொன்னார். பின்பு ஒவ்வொருவராக வந்து அந்த கட்டை உடைக்கச் சொன்னார் ஆனால் எவராலும் உடைக்க இயலவில்லை.

  

பின்னர் கட்டுக்களை அவிழ்த்து ஒவ்வொரு  கொம்புகளாக எடுத்து உடைக்க சொன்னார்.விரைவில் சுலபமாக உடைத்து விட்டனர்  அப்போது செல்வந்தர் "ஒற்¡றுமையின் பலம் என்ன என்று இப்போது புரிகிறதா"?என்று கேட்டார். மேலும்,"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் எவராலும் உங்களை அசைக்க முடியாது" என்றும் கூறினார்

இன்றைய செய்திகள்

04.02.2025

* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.

* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.

Today's Headlines

* The High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.

* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.

* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.

* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.

* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.
Covai women ICT_போதிமரம்

Sunday, February 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.02.2025

 

யோகான்னசு கூட்டன்பர்கு






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :மானம்

குறள் எண் :961

 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் 
குன்ற வருப விடல்.

பொருள்:இன்றியமையாதச் சிறப்பைத் தருவதாயினும் குடிப் பெருமைக்குக் குறைவானவற்றை செய்தலாகாது.

பழமொழி :

Face the danger boldly than live with in fear.


அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.

பொன்மொழி :

செய்யும் காரியம் தவறாகும் போது,நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது,அவசியமானால் ஓய்வெடுத்து கொள்.ஆனால் ஒருபோது மனம் தளராதே..

---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----

பொது அறிவு : 

1. எந்த மாதத்தில் பிறப்பு விகிதம் அதிகம்?

 விடை : ஆகஸ்ட். 

2. அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை முதன்முறை எங்கு செயல்பட்டது? 

விடை : சீனா

English words & meanings :

 Land.     -   நிலம் 

 Lighthouse.     -   கலங்கரை விளக்கம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 உலகம் முழுவதும், நீர் ஆதாரங்கள் மனித செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன,

பிப்ரவரி 03

யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது. 


ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்


கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை. 

நீதிக்கதை

 காணிக்கை 


ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றிருந்தான்.

அவன் விரித்த வலையில் கழுகு ஒன்று  சிக்கிக்கொண்டது.


அந்த கழுகின் இறகுகளை மட்டும் வெட்டி அதனை சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்துக் கழுகை வாங்கி தன் வீட்டில் அன்புடன் வளர்த்து வந்தார்.


இறகுகள் நன்கு வளர்ந்த பின்பு அதனைப் பறக்க விட்டார். கழுகு பறந்து செல்லும்போது ஒரு முயலைப் பார்த்தது. அதை பிடித்து வந்து தன்னை காப்பாற்றிய அவருக்கு காணிக்கையாகக் கொடுத்தது.


இதைப் பார்த்த நரி, "உன்னை பிடித்த வேடனிடம் இந்த முயலை கொடுத்திருந்தால், பின்னாளில் அவன் உன்னை பிடிக்காமல் விட்டிருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய்?" என்று கேட்டது.


அதற்கு கழுகு,"இல்லை. நீ சொல்வது தவறு. வேடனிடம் கொடுத்திருந்தாலும் பின்னாளில் அவன் என்னை பிடிக்கத்தான் செய்வான். ஏனெனில் அது அவனுடைய தொழில். ஆனால் என்னை காப்பாற்றிய அவருக்கு நான் காணிக்கையாக இதைச் செய்தேன்"என்று கூறியது.


நீதி : உதவி செய்தவரிடம் நன்றியுடனும் விசுவாசத்தடனும் இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

03.02.2025

* தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு: இந்தியாவிலேயே மிக அதிகம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

* விடுமுறை நாளில் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படவில்லை.

* மாலத்​தீவு​களுக்கு நிதி​யுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதி​யாண்​டில் வழங்​க​வுள்​ளது.

* முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார்

* ஹாக்கி இந்தியா லீக்: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன்.

Today's Headlines

* The number of Ramsar sites in Tamil Nadu has increased to 20: Chief Minister Stalin is proud that it is the highest in India.

* The registration offices were not functional today, the Sunday, as the land registry department employees did not go to work in protest against working on a holiday.

* India will provide Rs. 600 crore as financial assistance to the Maldives in the coming financial year.

* Vyacheslav Volodin, the chairman of the State Duma, the lower house of the Russian parliament, has said that he will go to India for important negotiations.

* Hockey India League: Sarachi RAR Bengal Tigers team is the champion.

Covai women ICT_போதிமரம்