கிறிஸ்டியானோ ரொனால்டோ |
தருமமே தலை காக்கும்.
Charity guards the head.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.---மாவீரன் நெப்போலியன்
பொது அறிவு :
1. நிலவில் விளையாடிய முதல் விளையாட்டு எது?
விடை : கோல்ப்.
2. அடிடாஸ் எந்த நாட்டின் நிறுவனம்?
விடை : ஜெர்மனி
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
நீர் வளத்திற்கான தேவை மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது.
பிப்ரவரி 05
கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்
நீதிக்கதை
ஆணவம் அழிந்தது
போரில் வெற்றி பெற்ற மன்னர் ஆணவம் கொண்டார் . தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால் மன்னரின் ஆணவம் அதிகரித்தது.
அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?" எனக் கூறி சிரித்தார்.
துறவி சற்றும் கலங்கவில்லை.
மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.
தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார்.
மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார்.
அதற்கு துறவி,"மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர் இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.அதைப்போல தாங்களும் சிந்தித்தால் தமக்கே புரியும் "என்று கூறினார்.
மேலும், துறவி,"இந்த உலகில் தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தை கைவிட்டார்.
இன்றைய செய்திகள்