Thursday, January 9, 2020

MICE TEST - 10.01.20

மைத்துளி. வணக்கம்.
  MICE TEST:38
1.உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் பனி சிகரம் எது?
a) எவரெஸ்ட்
b) டிராஸ்
c) சியாச்சின்
d)கிளிமஞ்சாரோ


2. இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடல் வழியாக கண்ணாடி இழை வடம்(optical cable fibre)பதிக்கும் பணியை BSNL நிறுவனம் சென்னை மற்றும் எந்த தீவுகளுக்கு இடையே துவங்கியுள்ளது?
 a) லட்சத்தீவு
 b) மடகாஸ்கர் தீவு
c) அந்தமான நிக்கோபர் தீவு
d) ராமேஸ்
வரத்தின்
குருசேடை தீவு


3.மத்திய அரசின் சார்பில் இளம் விளையாட்டு  நட்சத்திரங்களைக் கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் Khelo games,இந்த ஆண்டு எங்கு நடைபெறுகிறது?

a) மணிப்பூர்
 b) அஸ்ஸாம்
c) மேகாலயா
d) டெல்லி


4. AEPC(Apparel Export Promotion Councli_ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்)  ன் தலைவராக தேர்வாகியுள்ளவர் யார்?
a) சக்திவேல்
 b) வசந்த்
 c) ராமராஜ்
d) சரவணா செல்வ ரத்தினம்


5.ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் இதுவரை ........லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி அழிந்துள்ளது.
a) 40.  b) 50   c) 20.  d)60


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link


_________________________________________________________________________________

வணக்கம்.....

நேற்றைய விடைகள்

1. b ) Assam
2. c ) மேலத்திருப்பத்தியூர்
3. b) பளு தூக்குதல்
4. b ) உக்ரைன்
5. b ) INS Vikranth
6. d ) மணல் சிற்ப கலைஞர்
7. d ) கோவனூர்


நேற்று சரியாக விடையளித்தவர்கள்

1. P. தனுஷ்யா - 8 ஆம் வகுப்பு
2. ஆதிரை  - 8 ஆம் வகுப்பு
3.  K.J.ஹேமஸ்ரீ - 8 ஆம் வகுப்பு
4. S. ரூபா தரணி - 8 ஆம் வகுப்பு

இந்நால்வரும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.....  மாணவர்களே நீங்கள் இணையத்தில் விடைகளைத் தேடுவீர்களானால் உங்களுக்கு ஒரு சின்ன tips.....  கேள்வியினை அப்படியே முழுவதுமாக தட்டச்சு செய்து தேட வேண்டாம் . முதலில் உங்களின் குறிப்பேடு ( note ) மற்றும் பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கேள்வியிலும் உள்ள முக்கியமான வார்த்தையினை ( key word) எண் வரிசைப்படி குறிப்பேட்டில் எழுதிகொள்ளுங்கள். உதாரணத்திற்கு நேற்றைய கேள்விகளில்  இருந்த key words  1. Manas national park   2. தென்னிந்திய தூய்மையான நகரம்   3. சரப்ஜீத் கவுர் ஊக்கமருந்து   4.  bread basket of Europe   5.  முதல் விமானம் தாங்கி கப்பல்   6. சுதர்ஸ்ன் பட் நாயக்   7. இந்த கேள்விக்கு விடைகள்தான் key word.... எனவே இணையத்தில் தேடும்போது இம்மாதிரி key words கொண்டு தேடும்போது விரைவாகவும், சரியாகவும் விடைகளை கண்டறிய முடியும்.   கண்டறிந்த விடைகளை உங்கள் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு பின்பு அந்த link ல் சென்று விடைகளை பதிவு செய்யலாம்.பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.....

No comments:

Post a Comment