Tuesday, October 3, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.10.2023

   


சுப்ரமணிய சிவாதிருப்பூர் குமரன் திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :270

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

விளக்கம்:

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.பழமொழி :

Desire is the root of all evil

ஆசையே எல்லாத் தீங்கிற்கும் காரணம்.

இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.

2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

பொன்மொழி :

பலவீனமானவன் பிறரை மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம் மகாத்மா காந்தி 

பொது அறிவு :

1. பரிணாம கோட்பாட்டின் தந்தை யார்?

விடை: சார்ஸ் டார்வின் 

2. வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் எது?

விடை: நண்டு 

English words & meanings :

 dias (டயஸ்) - a raised platform பேச்சு மேடை: sewers (சிவெர்ஸ்- a channel for carrying waste water சாக்கடைக் குழாய்.

ஆரோக்ய வாழ்வு :

ரோஜா: ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.

அக்டோபர் 04

சுப்ரமணிய சிவா அவர்களின் பிறந்தநாள்

அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.

திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்தநாள்

திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran; 4 அக்டோபர் 1904 – 11 சனவரி 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[2] சனவரி 11 இல் உயிர் துறந்தார்.[3] இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்

உலக விலங்கு நாள்

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது சிறந்தது .

ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். 

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்? அது என் தூக்கத்தை கலைத்ததுடன் என்னையும் காயப்படுத்தி விட்டது” என்றார். அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.வரும் வழியில் மரத்தில் பழங்கள் 

இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?

அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.

மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள். இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர். 

காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அறிவற்ற மரம் கல்லால் அடித்தால் பழம் தருகிறது. அவ்வாறு இருக்க அறிவுள்ள நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?. மேலும் அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். 

நான் என் குடிமக்களுக்காக அவளுக்கு பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.  நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும். எனவே தெரியாமல் தவறு செய்திருந்தால் உரியவரிடம் மன்னிப்பு கேட்டு பழக வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.10.2023

*19 அடி உயரம் அம்பேத்கர் சிலை: அமெரிக்காவில் அக்டோபர் 14 திறப்பு.

* சென்னை ஐ.சி.எப் சார்பில் புதிய 10 வந்தே பாரத் ரயில்கள் : பெங்களூருவில் மாதிரி வடிவம் தயாரிக்கப்படுகின்றது.

*அடுத்தடுத்து மூன்று முறை 4.1 ரிக்டர் அளவு தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்.

* இந்தியாவின் அண்டை நாடான  வங்காள தேசத்தில் டெங்கு உயிரிழப்பு 1006 : நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி: பெண்கள் ஹாக்கியில் இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

* ஆசிய விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பிரீதி பவார் வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*19 feet tall Ambedkar statue: October 14 unveiling in USA.

 * New 10 Vande Bharat trains by Chennai ICF: Prototype for it is being prepared in Bengaluru.

 *Nepal has been hit by three successive 4.1 magnitude earthquakes. It shook Nepal 

 * Dengue death toll 1006 in India's neighboring country Bengal: Wards are overflowing with patients.

 *Asian Games: India won the women's hockey with a score of 13-0.

 * Asian Games: Indian athlete Preeti Pawar wins bronze in boxing.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, October 2, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.10.2023

 

பிங்கல வெங்கையா

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :269

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

விளக்கம்:

தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.

பழமொழி :

_Hunger breaks stone walls.

_பசி வந்தால் பத்தும் பறந்திடும்._

இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.

2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.

பொன்மொழி :

மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே. மகாத்மா காந்தி

பொது அறிவு :

1.வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?

விடை: மெக்சிகோ 

2. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?

விடை: பிங்கல வெங்கையா 

English words & meanings :


1. Approbate (அப்ராபேட்) - அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.

2. Decline (டிக்லைன்) - சரிவு.


3. Categorize (கேட்டகரைஸ்) - வகைப்படுத்து.

ஆரோக்ய வாழ்வு : 

வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .

நீதிக்கதை

 குரங்கின் அறிவு


ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்

ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!

அடுத்த  ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு  போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"

அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.

சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலிடம் கூறியது...! முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பாக்கிறியான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போய்டுசாம்.

இன்றைய செய்திகள்

03.10.2023

* பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.

*பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து வல்லூர் அணைக்கட்டு  நீர் நிரம்பி வழிந்தது.

*வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி துவக்கம். 

* பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு.

*ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.

*ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் வங்காள தேசத்தை 12-0 என வீழ்த்தியது இந்தியா.

Today's Headlines

* 50 percent reduction in milk supply of green aavin milk: Milk Agents Association alleges.

* Vallur dam overflowed after release of surplus water in Poondi lake.

* After three years in Vandalur Park, the facility to see lions and deers by vehicle has been inaugurated.

* Boycott of Gram Sabha meeting in 13 panchayats in protest of Parantur airport.

*Chief Minister M K Stalin congratulated Tamil Nadu athletes who won medals in the Asian Games.

* India beat Bangladesh 12-0 in Asian Games Hockey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, September 26, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2023

    திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்

குறள் :268

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

விளக்கம்:

தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து தொழும்.

பழமொழி :

Delay of justice is injustice

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

சகிப்புத் தன்மையால் தான் மகான்கள் நிம்மதிப் பெறுகின்றனர்.துன்பம் வரும் காலத்தில் அமைதியாக இருக்க பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்...

-------மார்க் ட்வைன்

பொது அறிவு :

1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை: நாக்கு


 2. சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய பிராணி எது?

விடை: கழுகு 

English words & meanings :

 mickle - a large amount மிகப்பெரிய அளவு : grunting - make a short sound in pain or anger வலியால் உறுமுதல், முணுமுணுத்தல்.

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை: இதில் உள்ள குறைந்த க்ளைசெமிக் மற்றும் ஸ்டார்ச் அமிலோஸின் இருப்பு காரணமாக உடல் கொண்டைக் கடலையில் உள்ள சத்தை உறிஞ்சிகிறது. இதனால் இரத்தத்தில் சமநிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் 27

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர் மண்பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.மண்பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். அரசர் மிகப்பெரிய முட்டாளாவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. நம் தவறுகளை நாமே திருத்திக் கொள்வோம் என்றார்கள். இருவரும் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.

இன்றைய செய்திகள்

27.09.2023


*தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

* தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 முதலமைச்சர் 
மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

* தமிழகம் முழுவதும் வருகிற 1ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் - அமைச்சர் மா சுப்பிரமணியன்.

*37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1000 புதிய வகுப்பறைகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 :
ஆண்கள் ஹாக்கியில் இந்தியா 16- 1 என்ற கோடு கணக்கில் அபார வெற்றி பெற்றது.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: படகு போட்டியில் இந்தியாவின் 
நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்றார்.

Today's Headlines

*Chance of thunder and lightning rains in Tamil Nadu- Chennai Meteorological Department warns.

 * Tamil Nadu Tourism Policy 2023 published by Chief Minister
 M. K. Stalin.

 * Special fever camp at 1000 places across Tamil Nadu on 1st October- Minister Ma Subramanian.

 * The Chief Minister inaugurated 1000 new classrooms in panchayat union schools in 37 districts.

 * Asian Games 2023 :
 In men's hockey, India won by a score of 16-1.

 *Asian Games 2023:  In rowing
 Neha Tagore of India won the silver medal.
 Prepared by

Covai women ICT_போதிமரம்Monday, September 25, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2023திரு. மன்மோகன் சிங் 


திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

விளக்கம்:

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

பழமொழி :

Delay is dangerous

தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி.

பொன்மொழி :

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும் உறுதியும் தியாக உணர்வும் வேண்டும். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. அதிகமான நாடுகளை கொண்ட கண்டம் எது?

விடை: ஆப்பிரிக்கா 

2. ஒரு தலைமுறை சுமார் எத்தனை ஆண்டுகளை குறிக்கும்?

விடை: 33

English words & meanings :

 purgation- cleansing தூய்மையாக்கல். nervation- arrangement of nerves in leaf இலை நரம்பு அமைப்பு

ஆரோக்ய வாழ்வு : 

 கொண்டைக்கடலை: நீரிழிவு நோய் என்பது இங்கு பலருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் அதன் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும் சுண்டல் உதவுகிறது. 

செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்மன்மோகன் சிங் (Manmohan Singhபஞ்சாபிਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 222004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்

1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

நீதிக்கதை

 The Fox And The Crab நரியும் நண்டும்  கதை :- ஒரு பெரிய கடல்ல ஒரு நண்டு வாழ்ந்துகிட்டு வந்துச்சு.

ஒரு நாள் அந்த நண்டுக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு ,உடனே இந்த உலகத்தை சுத்திப்பார்க்க போறேன்னு சொல்லிட்டு தண்ணிக்கு வெளிய வந்துச்சு. வெளி உலக ரசித்தது  நண்டு. கொஞ்ச தூரம் நடந்து பாக்கலாம்னு , புல்வெளியில நடக்க ஆரம்பிச்சுச்சு.அப்பத்தான் ஒரு நரி அந்த நண்ட பார்த்துச்சு , உடனே அந்த நண்ட பிடிச்சி திங்க நினச்சுச்சு அந்த நரி.ஆனா அந்த நண்டு ரொம்ப சுறுசுறுப்பா அங்குட்டும் இங்குட்டும் ஓடிக்கிட்டே இருந்துச்சு ,அந்த நரியோட விளையாடி என்ன பிடி பாப்போம்னு சொல்லி அந்த நரியவே கோபப்பட வச்சுச்சு.

ஆனா கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த நண்டு ரொம்ப சோர்வாக ஆரம்பிச்சுச்சு ,அப்பத்தான் அந்த நரி சொல்லுச்சு ,இவ்வளவு நேரம் உன்ன ஆட விட்டது எதுக்கு தெரியுமா ,நீ இப்ப உன்னோட இடத்துல இல்ல ,அதனால உனக்கு நீ சாப்புடற உணவு இங்க கிடைக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான்உணவு கிடைக்காம இப்ப நீ சோர்வாகிட்ட பார்த்தியா ,இப்ப என்கிட்ட இருந்து ஓடு பார்க்கலாம்னு சொல்லுச்சு நரி ,ஆனா ரொம்ப சோர்வான நண்டால நடக்க கூட முடியல,

 இப்ப அந்த நண்ட தின்னுச்சு . தேவையில்லாத இடத்துக்கு வந்து ,தேவையில்லாத வேலை செஞ்ச தனக்கு இது நல்ல தண்டனைத்தானு நினச்சுகிட்டே அந்த நரிக்கு உணவா மாறி செத்து போச்சு அந்த நண்டு.

இன்றைய செய்திகள்

26.09.2023

*கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை -  கோழிக்கோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. 

*சென்னை திருநெல்வேலிக்கு ஆம்னி பஸ்சை விட மூன்று மணி நேரம் முன்கூட்டியே செல்லும் வந்தே பாரத் ரயில்.

* ஆந்திர 
தடுப்பணைகள் நிரம்பியது: கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

* இலவச சிகிச்சை அளிப்பதில் கேரளா மாநிலம் முன்னணி: கேரளாவுக்கு மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது.

* ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டி :
19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

* ஆசிய விளையாட்டு 2023 : 
துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் வெண்கலம் வென்றார்.

Today's Headlines

*No new cases of Nipah virus in Kerala - Kozhikode is back to normal.

 *Vande Bharat train between Chennai and  Tirunelveli reaches it's destination three hours earlier than omni bus.

 *Andhra Pradesh
 Barrages full: Heavy rains cause flooding in Palaru.

 * Kerala state is leading in providing free treatment: Kerala has been receiving Arogya Manthan award by the central government.  Kerala state  won the award this year too.

 * Asian Games Women's Cricket Final:
 India won by 19 runs.

 * Asian Games 2023 :
 India's Pratap Singh Tomar won bronze in shooting.
 Prepared by

Covai women ICT_போதிமரம்