covai women ICT
அரசுப் பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கென்றே அரசாணை உள்ளது இன்னின்னவற்றை தயாரித்து அதனை மாணவர்களை கொண்டே வாசிக்க வைத்து வழிபாட்டுக்கூட்டம் நடத்தவேண்டும். இதற்கென்று ஒவ்வொரு ஆசிரியரும் சிரமப்பட்டு தினமும் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த 2 ஆண்டுகளாக இப்பணியினை தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் எளிமையாக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்கள் இவர்களே.
2016-ஆம் ஆண்டு ஆசிரியத்தினத்தன்று உருவாக்கப்பட்ட Covaiwomenict குழு, பெண் ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி கொடுப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தது.பிறகு 2018-அம் ஆண்டு முதல் 12 ஆசிரியைகள் ஒன்று சேர்ந்து பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகளை whatsapp குழுக்களில் பகிர்ந்து வருகின்றனர். அனைவருக்கும் உதவும் வண்ணம் Covaiwomenict.blogspot.com என்ற வலைப்பூவினை உருவாக்கி அதிலும் இச்செயல்பாடுகளை பதிவிட்டு வருகின்றனர்.
காலை வழிபாட்டுப் பகுதிகளான திருக்குறள், பொன்மொழி, பழமொழி, பொது அறிவு, நீதிக்கதை, செய்திகள் இவற்றோடு மட்டும் நின்று விடாமல் மாணவர்களுக்கு உதவக்கூடிய வகையில் 5 நாட்களுக்கு 5 பாடத்தினை மையப்படுத்தி செயல்பாடுகளை தருகின்றனர்.
திங்கள் – தமிழ்
செவ்வாய் – English & ART
புதன் – கணிதம் & கையெழுத்துப் பயிற்சி
வியாழன் – அறிவியல் & கணினி
வெள்ளி – சமூகவியல் & பாரம்பரிய விளையாட்டு
என பல பயனுள்ள தகவல்களை அள்ளித் தருகிறது இவர்களின் வலைப்பூ.
இவை அனைத்தையும் தினமும் பல சிரமங்களுக்கு மத்தியில் தயாரித்து வழங்கிக் கொண்டிருப்பவர்கள் ரூபி பாக்கியம், கோமதி, பழனிமுத்து, தீபா, ரஞ்சிதம், சிவகாமி, இளமதி, வஹிதா, ரெனிட்டா, அம்ரின் மற்றும் ஸ்ரீதேவி. இவர்கள் தயாரித்து வழங்கிய எல்லா பகுதிகளையும் தொகுத்து வலைப்பூவில் பதிவேற்றம் செய்வது, வீடியோக்களை தயாரித்து பதிவேற்றுவது முதலிய வேலைகளை செய்பவர் அனிதா. இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணிபுரிந்தாலும் தங்களின் அர்ப்பணிப்பு உணர்வினால் ஒன்று சேர்ந்து இதனை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இந்த 2020 ஆம் வருடம் முதல் தினமும் மாணவர்களுக்கு, கூடலூர் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.மு.ஸ்ரீவெள்ளிங்கிரி அவர்களின் MICE TEST ( Measuring Intelligence in Current Events) ஐ தங்கள் வலைப்பூ மூலம் நடத்தி வருகின்றனர். இதில் மாத இறுதியில் ஒரு தேர்வு வைத்து அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளுக்கே புத்தகங்களை பரிசளித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
january monthly test
பள்ளி அளவிலும் இவர்கள் அனைவரும் சாதனைப் பெண்களே. பல துறைகளில் இவர்கள் அனைவரும் தங்கள் பள்ளிகளை மேம்படுத்தி வருகின்றனர். கணினி, வாட்சப் என இயந்திரத்தோடு மட்டும் நின்று விடாமல் சமுதாயத்திலும் களமிறங்கி பணியாற்றுகின்றனர். தங்களது Covaiwomenict குழு மூலம் கேரள வெள்ளத்தின் போதும், கஜா புயலின்போதும் 75,000 ரூபாய் வரை திரட்டி நிவாரணப் பொருட்களை வாங்கி அதனை அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
Kerala & Kaja flood relief work
இவர்களது அயரா உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் பாடசாலை வலைதள குழு இவர்களுக்கு கடந்த வருடம் குரு விருதினை வழங்கி சிறப்பித்தது.
guru award
பெண்களாக இணைந்து தொடர்ந்து பல செயல்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் இச்சாதனைப் பெண்மணிகளை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்த்துவோம்…….
எம் பணியினைப் பாராட்டி தினமலர் நாளிதழில் வந்த செய்தி

No comments:
Post a Comment