கல்லீரல் |
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்.
The fearless goes into the assembly.
இரண்டொழுக்க பண்புகள் :
*பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.
* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.பொன்மொழி :
புத்தக கடையில் புரட்டி புரட்டி பார்த்து வாங்குவது நல்ல புத்தகம் அல்ல, எந்த புத்தகம் உன்னை முன்னேற்றம் நோக்கி புரட்டி போட வைக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம்.....
பொது அறிவு :
1.நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்
விடை: ஊதா.
2. பித்தநீர் எப்பகுதியில் சுரக்கிறது?
விடை: கல்லீரல்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
சில சமயங்களில் அரசாங்கம் இயற்கை விவசாயததிற்கு அளித்த மானியத்தால் கவரப்பட்டு பல விவசாயிகள் இயற்கை விவசாய முறைமைக்கு மாறினர்.
நீதிக்கதை
ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே ஒரு துறவி அமர்ந்திருந்தார்.
அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன் அந்த துறவியை பார்த்து, "ஏய் கிழவா, ஏற்கனவே இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று சற்று அதிகாரத்துடன்
மரியாதையின்றி கேட்டான்.
அதற்குத் துறவி, "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று கூறினார். சிறிது நேரம் கழித்து வேறொருவர் வந்து, "ஐயா இந்த வழியாக யாராவது சென்றார்களா?" என்று கேட்டார். அதற்குத் துறவி, "ஆம்.சற்று முன்பாக இதே கேள்வியை கேட்டுக் கொண்டு ஒருவர் சென்றார்" என்று பதில் கூறினார்.
மீண்டும் சிறிது நேரம் கழித்து, இன்னொருவர் வந்து "வணங்குகிறேன் துறவியாரே! இந்த வழியாக யாரேனும் செல்லும் சப்தம் தங்களுக்கு கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டார். அதற்குத் துறவி, "மன்னரே! வணக்கம் முதலில் ஒரு வீரனும் அதற்குப் பின் ஒரு அமைச்சரும் தாங்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக்கொண்டு சென்றார்கள்" என்று கூறினார்.
அப்போது மன்னர் மிகவும் ஆச்சரியத்துடன், "ஐயா, தங்களுக்கு கண் பார்வை கிடையாது ஆனால் வந்தவர் வீரன் என்றும் அமைச்சர என்றும் எவ்வாறு கண்டு கொண்டீர்கள்" என்று கேட்டார்.
அதற்குத் துறவி "இதை கண்டுகொள்ள பார்வை தேவையில்லை அவரவர் பேசும் முறையைக் கொண்டு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை கண்டு கொள்ளலாம்" என்றார். மேலும் "முதலில் வந்தவர் பேச்சில் கொஞ்சம் மரியாதையின்மையும் அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரமும் தங்களின் பேச்சில் பணிவும் இருக்கிறது"என்று துறவி கூறினார்.
நீதி : நமது பேச்சே நமது நடத்தையை தீர்மானிக்கிறது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment