பால்: பொருட்பால்
அதிகாரம்: புல்லறிவாண்மை
குறள் எண்: 844
வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
பொருள்:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே' மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். அதுபோல , நல்லவர்ககுச் செய்த உதவி நிலை நிற்கும்.
A raindrop that falls on an oyster shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.
இரண்டொழுக்க பண்புகள் :
* நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.
*நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.
பொன்மொழி :
உடல்நலத்தை பாதுகாப்பது போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்- ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
2.கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை.
நீதிக்கதை
நல்லதும், கெட்டதும்
ஒரு சீடன் தன் குருவிடம்,
"நல்லதை படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதை போல் கெட்டதையும் ஏற்றால் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு குரு சிரித்துக்கொண்டே, "அது அவரவர் விருப்பம்" என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவை பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும்,மறு கிண்ணத்தில் பசுமாட்டுச் சாணமும் வைக்கப்பட்டு, சீடனிடம் உணவருந்த கொடுக்கப்பட்டது.
குரு புன்முறுவலுடன் சீடனிடம்,
"பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடமிருந்து தானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக் கொள்வது போல் சாணத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? " என்று கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார்.
"பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ,அதனை அப்படியே ஏற்கலாம். சாணத்தை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல் கெட்டதை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை ஏற்க வேண்டும்" என்றார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment