அன்புடைய ஆசிரிய சமூகத்துக்கும், மாணவ செல்வங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்புத்தாண்டு முதல் புதிய பகுதி ஒன்று நம் வலைபூவில் அறிமுகமாக உள்ளது. அப்பகுதியை நமக்கு வழங்க இருக்கின்றவரைப் பற்றிய ஓர் அறிமுகம் இதோ......
ஆனைமலை ஒன்றியத்தில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து, நடுநிலைபபள்ளி தலைமை ஆசிரியராக உயர்ந்து, தற்போது கூடலூர் ஒன்றியத்தின் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர்தான் திரு.மு.ஸ்ரீவெள்ளிங்கிரி ஐயா அவர்கள். இவரது துணைவியார் திருமதி.K.R.மைதிலி அவர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்.
15.10.2004ல் ஆரம்பிக்கப்பட்ட தங்களின் மைத்துளி கல்வி அறக்கட்டளை மூலம் மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு குறுவள மைய கூட்டத்தின் போது ஆசிரியர்களுக்கும், மாதந்தோறும் மாணவர்களுக்கும் பொது அறிவுத் தேர்வு வைத்து பரிசுகள் வழங்கி வாசிப்பை ஊக்கபடுத்தி வந்தனர். பிறகு மைத்துளி என்ற பெயரில் பொதுஅறிவு செய்திகளை புத்தக வடிவில் வெளியிட்டு வந்தனர்.
தற்போது நாள்தோறும் அலைபேசி மூலம் MICE TEST நடத்தி வருகின்றனர்.
இதன் நோக்கம்
தினமலரின் லட்சிய ஆசிரியர் விருது (2013) மற்றும் BOLT விருதும் இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது MICE தேர்வினை நமது வலைபூவில் தினமும் பதிவேற்ற ஒப்புக்கொண்ட ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
Covai women ICT

MICE - Measuring the Intelligence in Current Events
இதன் நோக்கம்
- நாளும் நாளிதழ் படிப்போம்! ஞாலம் அறிந்திடத் துடிப்போம்!!
என்ற நோக்கில் அனைவரையும் நாளிதழ் படிக்கத் தூண்டுவது, மாணவர்கள், ஆசிரியர்களின் திறமைகளை அங்கீகாரம் செய்வது .
தினமலரின் லட்சிய ஆசிரியர் விருது (2013) மற்றும் BOLT விருதும் இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது MICE தேர்வினை நமது வலைபூவில் தினமும் பதிவேற்ற ஒப்புக்கொண்ட ஐயா அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தினமும் காலை 9 மணிக்குள் கேள்விகள் (5/6 கேள்விகள்) நமது வலைப்பூவில் பதிவேற்றப்பட்டு அதன் link அனுப்பப்படும். 6 - 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதற்கான விடையினை comment பகுதியில் பதிவேற்ற வேண்டும். தங்களின் பெயர், வகுப்பு, பள்ளி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
- விடைகள் அடுத்த நாள் காலை பதிவேற்றப்படும். அதனுடன் சரியாக விடையளித்த 10 மாணவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்.
- மாத இறுதியில் அம்மாதம் முழுவதும் நடந்த தேர்வுகளை தொகுத்து google form-ல் ஒரு தேர்வு வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களில் 10 பேருக்கு எமது Covai women ICT மூலம் பரிசுகள் அனுப்பி வைக்க இருக்கின்றோம்.
- இதில் ஆசிரியர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இக்கேள்விகளை தினமும் மாணவர்களிடம் கொண்டு செல்லுங்கள். செய்திதாள்களை வாசிக்க ஊக்குவியுங்கள். முடிந்த அளவு மாணவர்களையே விடைகளை கண்டறிய வாய்ப்பளிக்கலாம்.
ஆசிரிய நண்பர்களே நம் மாணவர்கள் போட்டித்தேர்வினை எதிர்கொள்ள இவை உறுதுணையாக அமையும் என்ற எண்ணத்தில் இதனை ஆரம்பிக்கிறோம். தங்களின் மேலான ஆதரவினை வழங்கி நம் மாணவர்களின் உயர்விற்கு உதவுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
Covai women ICT
Superrrrrbbbb
ReplyDeleteThank u akka
DeleteSuperb.best wishes.
ReplyDeleteThank u ms
ReplyDeleteSuper. Good initiative. மாணவர்கள் நலன் மீது அக்கறை கொண்டு இதை தொடங்கிய ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteநன்றி சகோ
DeleteNice effort
ReplyDeleteThank u sir
ReplyDelete