Tuesday, January 21, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.01.20

திருக்குறள்


அதிகாரம்: அரசியல்

திருக்குறள்: 415

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க  முடையார்வாய்ச் சொல்.

விளக்கம்:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

பழமொழி

Cut your coat according to cloth .

 விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

துன்பங்கள் எல்லாம் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரும். அதனை சரியாக புரிந்து கொண்டால் இன்பங்களை  நம்முடையதாக மாற்றலாம்.

-------ஜேம்ஸ் வாட்

பொது அறிவு

1. Politics என்ற நூலை எழுதியவர் யார்?

 அரிஸ்டாட்டில்.

 2. 'War and peace' என்ற நூலை எழுதியவர் யார்?

லியோ டால்ஸ்டாய்.

English words & meanings

Vitrics –  study of glassware and glassy materials.

Velvety -  having a smooth and soft appearance and feel. மென்மையான, மெத்தென்ற

ஆரோக்ய வாழ்வு

இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி விடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைகிறது.

Some important  abbreviations for students

A.M - Ante meridiem. 

P.M - Post meridiem

நீதிக்கதை

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

புதன்
கணக்கு & கையெழுத்து

ஜல்லிக்கட்டு கணக்கு

ஒரு தடுப்பறைக்குள்
12 காளைகள் அடைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் பக்கங்களை
ஒரு ரவுண்ட் சுத்திவந்துப் பார்த்தால் 30 தடுப்பறைகள் இருந்தன.

கேள்வி: ஜல்லிக்கட்டு மைதானத்தில் அடைத்து
 வைத்திருக்கும் மொத்தக் காளைகள் எத்தனை???

விடை:
12 × 30 = 360 காளைகள்

கையெழுத்துப் பயிற்சி- 24



இன்றைய செய்திகள்

22.01.20

*காட்டுத்தீ, ஆலங்கட்டி மழையை அடுத்து இப்போது ஆஸ்திரேலியா மக்களின் இயல்பு வாழ்க்கையை புழுதிப்புயல் பாதித்து வருகிறது.

*சென்னை புத்தக கண்காட்சிக்கு (ஜனவரி 9 முதல் 21 வரை)
13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

*கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி,கோவையை, சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற, அனைவரும் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

*அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

*சென்னை- கோவை வழித்தடத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

*19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Today's Headlines

🌸 After the wildfire and hail, the natural life of the people of Australia is now suffering from dust storm .

🌸  The South Indian Booksellers and Exporter's Association says it has reached 13 lakh readers in Chennai Book Fair (January 9 to 21)

 🌸 At the Road Safety Awareness Program held at the Central Regional Transport Office, Coimbatore, collector   Rajamani urged all people to follow road rules to make kovai as a road accident free district.

 🌸 Like the US, Japan will create a space security force said Prime Minister Shinzo .

 🌸Southern Railway has announced that 68 special trains will be operated between Chennai- Coimbatore to avoid the crowd.

 🌸 India beat Japan by 2-0 in World Cup ODI cricket for u-19. On this India registered  the 2nd victory.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment