பிப்ரவரி 28
தேசிய அறிவியல் தினம்
இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.
சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.
திருக்குறள்
அதிகாரம்:வெஃகாமை
திருக்குறள்:172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
விளக்கம்:
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.
பழமொழி
The wearer knows where the shoe pinches
பாம்பின் கால் பாம்பறியும்
இரண்டொழுக்க பண்புகள்
1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்
2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.
பொன்மொழி
உழைப்புதான் மனிதனுக்கு உயிர் போன்றது. வாழ்வில் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவே சிறந்த மருந்தாகும். அதுவே ஆக்கும் சக்தி. இறுதி மூச்சு வரை உழைப்பதற்கான உந்து சக்தியும் கூட.
- கார்லைல்
பொது அறிவு
1.இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை சபாநாயகர் யார்?
திருமதி மீரா குமார்
2. இந்தியாவின் தற்போதைய மக்களவை சபாநாயகர் யார்?
திருமதி. சுமித்ரா மகாஜன்
English words and Meaning
Disposal. பிரிவு,
விற்பனைசெய்தல்
Dabble. தெளி,தெறி
Depression தாழ்வு,
குறை அழுத்தம்
Depict தெளிவாக
(வரை,விளக்கு)
Delivery. கொடுத்தல்,
பட்டுவாடா
அறிவியல் விந்தைகள்
நொதித்தல் (Fermentation)
என்பது காபோஹைடிரேட்டுக்களை அமிலம் அல்லது ஆல்கஹால் ஆக மாற்றும் செயல்முறையாகும்.
*விளக்கமாகக் கூறுவதாயின் மதுவம் அல்லது நுரைமம் அதாவது ஈஸ்ட் (yeast) என்னும் உயிரினத்தால் காபோஹைடிரேட்டு ஆல்ஹகாலாக மாறுவதும், சில பாக்டீரியாக்கள் சில உணவு வகைகளில் வினை புரிந்து இலக்டிக் அமிலம் உருவாக்குவதும் நொதித்தல் என்னும் செயல்முறையாலாகும்.
*நீண்டகாலமாக மனிதர்கள் தமது தேவைக்காக இந்த நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்தி வந்தோருக்கான.
*இவ்வகை நொதிப்பானது சமையல், வைன் உற்பத்தி, பியர் உற்பத்தி, தேயிலை இலைகளை தேநீருக்காகப் பதப்படுத்தல் போன்ற செயல்முறைகளில் நடைபெறுகிறது.
Some Important Abbreviations Students
* GATT - General Agreement on Tariffs and Trade
* GPO - General Post Office
நீதிக்கதை
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இன்றைய செய்திளகள்
28.02.2019
* அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடுத் திட்ட மொபைல் ஆப் மதுரையில் அறிமுகம்.
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி.
* இந்திய விமானப்படையின் மிக் 21 விமானத்தின் விமானியை காணவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி - சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
* இந்திய பாகிஸ்தான் மோதலால் எல்லையில் பதற்றம்... போர் நிறுத்தம் ஏற்பட தேச மக்களாய் பிரார்த்திப்போம்.
Today's Headlines
* Introduction of new medical insurance plan mobile app for Government Officers was held in Madurai.
* The high court dismissed the case against the bio metric attendance in govt and aided schools.
* The Indian Foreign Ministry said that the pilot of the MiG 21 flight of the Indian Air Force was missing.
* 12 teams will participate in the state level hockey competition begins day after tomorrow in Chennai.
* As the citizens of our country let's pray for the peace in India Pakistan border.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment