Tuesday, February 26, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.19

திருக்குறள்


அதிகாரம்:வெஃகாமை

திருக்குறள்:171

நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

விளக்கம்:

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடும்பமும் கெட்டுக், குற்றமும் அப்பொழுதே வந்து சேரும்.

பழமொழி

Small rudders guide great ships

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

*இரண்டொழுக்க பண்புகள்*

1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்
2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.

பொன்மொழி

உழைப்புதான் மனிதனுக்கு உயிர் போன்றது. வாழ்வில் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவே சிறந்த மருந்தாகும். அதுவே ஆக்கும் சக்தி. இறுதி மூச்சு வரை உழைப்பதற்கான உந்து சக்தியும் கூட.

    - கார்லைல்

பொது அறிவு

1. தொலைதூர இடங்களுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவையை எந்த மாநில அரசு துவக்கியுள்ளது?

ஒடிசா

2.  உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாதையாக உள்ள இந்திய ரயில்பாதை  எது?

நியூ பிலாஸ்பூர் - மணலி - லேஹ் ரயில்பாதை ( கடல் மட்டத்திலிருந்து 5360 மீ உயரம்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

மீன்



1. மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

2. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

3. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

English words and Meaning

Individual      தனித்தனி
Additional.     கூடுதலாக
Countable எண்ணிக்கையிலுள்ள
Accountable.
                   பொறுப்புள்ள
Portable.    எடுத்துச்செல்லக் கூடிய

அறிவியல் விந்தைகள்

*இழை*
*நாரிழை ( Fiber) அல்லது இழை என்பது நீளமான நூல் போன்ற ஒரு வகை மூலப்பொருள்
*இது இயற்கை இழை செயற்கை இழை என இரு வகைப்படும்.
* பட்டு இழை, கம்பளி, சணல், வாழை நார், கற்றாழை நார் மற்றும் பருத்தி ஆகியவை இயற்கை இழைகள்.
* மனிதனால் உருவாக்கப் பட்ட ரேயான், பாலியஸ்டர், டெரிகாட்டன் போன்றவை செயற்கை இழைகள்.

Some important  abbreviations for students

* GSLV -Geosynchronous Satellite Launch Vehicle

* GSI   -  Geological Survey of India

நீதிக்கதை

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
எனவே மற்றவர் கூறுவதை அப்படியே ஏற்பதை விட சிந்தித்து செயல்படுவதே சிறந்தது.


இன்றைய செய்திகள்
27.02.2019

* தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

* தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா : தமிழகத்தில் நீர் வளத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டு வரும் மதுரை, சிவகங்கை,  திருநெல்வேலி மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

* உலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்தியா 120-வது இடம்...1, 2-வது இடத்தில் ஸ்பெயின், இத்தாலி நாடுகள் உள்ளன.

* கோவையை சேர்ந்த முருகானந்தம் (குறைந்த விலையில் நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்) கதையை கருவாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’ என்ற இந்திய ஆவண படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.

* ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸 In Tamil Nadu, Panchayat elections may be held in May ,reported the State Election Commission to the Supreme Court.

🌸 National Water Awards ceremony: Awards were given to Madurai, Sivagangai and Tirunelveli districts, which are functioning well in protecting water resources in Tamil Nadu.

🌸India is ranked 120th in the list of healthy countries in the world and is ranked 1, 2, Spain and Italy.

🌸 The Indian documentary film 'Period End of Sentence' which was produced with the theme  ,life of Murugananthan (who invented Napkin making machine at low price)  got Oscar award

🌸Former srilanka' batsman Jayasuriya has been banned for two years for violating the ICC scandal.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment