Thursday, February 28, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.03.19

திருக்குறள்


அதிகாரம்: வெஃகாமை

திருக்குறள்:173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

விளக்கம்:

அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர், நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

பழமொழி

The worth of the thing is best known by the want

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

இரண்டொழுக்க பண்புகள்

1.உள்ளதை உள்ளது என்றும் இல்லாததை இல்லை என்றும் சொல்வேன். அதற்கு மிஞ்சியது பொய் ஆகும் என அறிவேன்
2. இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் நம் நாட்டின் இரு கண்கள் எனவே அவர்களை மதித்துப் போற்றுவேன்.

பொன்மொழி

முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!

    - நேதாஜி

 பொது அறிவு

1.இந்தியாவின் நைல்  என்று அழைக்கப்படும்  நதி எது?

 சிந்து நதி

2. அரசியல் அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 அரிஸ்டாட்டில்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

கரும்புச்சாறு



1.  இது உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வு எனக் கூறப்படுகிறது. இது தொற்றுநோய்களுக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும். எனவே இது நீரிழப்புக்கு நல்லது.

2. சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.

3. நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.

4. கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது, மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.

English words and Meaning

Correction.    திருத்தம்
Split.      பிரித்தல், பிளவு
Gather     சேகரி,கூட்டு
Wonder   ஆச்சர்யம்
Subordinate.  அடக்கு, உட்படுத்துதல்


அறிவியல் விந்தைகள்

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis)
*இது விழுதுகளை உடைய ஒரு மரம்
* மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது
* இதில் விழுதுகள் உண்டு இது ஆலமரத்தின் சிறப்பம்சம்.
* ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது இதன் பெருமைக்கு சான்று.
*இது நம் நாட்டின் தேசிய மரமாகும்

Some Important Abbreviations  Students

* HCF   -  Highest Common Factor

* HDFC    -  Housing Development Finance Corporation

நீதிக்கதை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள்

01.03.2019

* ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே ஆன்லைனில் இருக்கை விவரங்களை அறியும் வசதியை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.

* காடுகளிலிருந்து பழங்குடிகள் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

* உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் : மாநில தேர்தல் ஆணையம் உறுதி.

* பெங்களூரில்  நடந்த 2-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான தொடரையும் கைப்பற்றியது.

* பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சவுரவ் கோஷல் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌸Railway Minister Piyush Goyal launched the facility to find the seat facilities while booking  the train ticket by online.

🌸 Discharge of tribal people from the forests temporarily suspended: Supreme Court verdict.

🌸 Announcement for Local Elections will be released by May 31st: State Election Commission confirmed.

🌸 Australia defeated India by 7 wickets in the 2nd and last T20 matches in Bangalore and conquered the series

🌸 India's Sourav Khoshal advanced to the quarter-finals of the BSA World Squash Championship.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment