திருக்குறள்
அதிகாரம்:பொறையுடைமை
திருக்குறள்:153
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
பழமொழி
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
Too much of anything is good for nothing
இரண்டொழுக்க பண்புகள்
1. விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.
2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொன்மொழி
ஆடம்பரம் அதிகமாகிக் கொண்டே போனால் உண்மையான வீரமும், ஒழுக்கங்களும் அகற்றப்பட்டுவிடும்.
- ஜீன் ஜாக்ஸ் ரூஸோ
பொது அறிவு
1.அரபிக் கடலின் ராணி எனப்படுவது எது?
கொச்சி
2. புவி தினம் கொண்டாடப்படும் நாள் எது?
ஏப்ரல் 22
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
வேர்க்கடலை
1. பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.
2. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
3. உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
English words and Meaning
Texture. இழைநயம்
Thicket. காடு,புதர்
Thickset. நெருக்கமாக கட்டமைக்கப்பட்ட
Tiptop முதல்தரமான
Tremble. நடுங்குதல்
அறிவியல் விந்தைகள்
*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.
*ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.
*ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.
Some important abbreviations for students
CA. - Chartered Accountant
CBR. - Cosmic Background Radiation
நீதிக்கதை
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.
வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.
ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.
தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
பேராசை பெரும் நஷ்டம்
இன்றைய செய்திகள்
06.02.2019
* ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 தடுப்பணைகள் கட்ட அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* பருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என்று சமீபத்தில் வந்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
* இந்தியாவில் மேற்கொள்ளப் பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடு நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 11 சதவீதம் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட தமிழக வீரர் பிரசாந்த் தகுதி பெற்றார்.
* ஐசிசி ஒரு நாள் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது இந்திய அணி
Today's Headlines
* As many as 21 sanctions have already been constructed across Palar in Andhra Pradesh, the state has taken steps to build 30 more restrictions.
* A recent statement warned that a part of the Himalayas could disappear at the end of the 21st century due to climate change.
* Foreign Direct Investment (FDI) in India has decreased by 11 per cent in the April-September period of the current fiscal, the Commerce Ministry said in a statement.
* Chennai ATP Challenger Open tennis : in the men's singles Prasanth of tamilnadu qualified to the second round.
* ICC one day rankings Indian team progressed to the 2nd place.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment