பிப்ரவரி 8
ரஷ்ய வேதியியலாளர். *கனிம அட்டவணையின் தந்தை* எனப் போற்றப்படும் டிமிட்ரி மெண்டலீவ் பிறந்தநாள்.இவர் தனிமங்களை அணு நிறையை கொண்டு அட்டவணைப்படுத்தினார்.
திருக்குறள்
அதிகாரம்:பொறையுடைமை
திருக்குறள்:155
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
விளக்கம்:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
பழமொழி
Many hands make work light
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்புகள்
1. விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.
2. என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொன்மொழி
பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
- ஔவையார்
பொது அறிவு
1.இந்தியாவில் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?
மீரா குமார்
2. உலக சிக்கன தினம் எப்போது அனுஷ்டிக்கப்படுகிறது?
அக்டோபர் 30
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
மோர்
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து
English words and Meaning
Oasis - பாலைவனச் சோலை
Objective - நோக்கம்
Obligation - கடமையுணர்ச்சி
Omit - தவிர்த்தல்
Omnipotent - சர்வ வல்லமையுள்ள / இறைவன்
அறிவியல் விந்தைகள்
எறும்பு
* உலகில் 12,000 வகையான எறும்புகள் உள்ளன.
* இவை தன்னைப் போல் 20 மடங்கு எடையை தூக்க கூடியவை
* இவைகளுக்கு செவி இல்லை. புவியின் அதிர்வுகளை காலில் உணர்வதே அதன் "கேட்டல்" ஆகும்.
* இரை தேட செல்லும் போது ஃபெரமோன் எனும் இயக்க நீரை விட்டு செல்லும். அது அவைகள் திரும்பி செல்ல உதவும்.
Some important abbreviations for students
DC - Direct Current
DOB - Date Of Birth
நீதிக்கதை
ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”
ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”
ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!
1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்
2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.
3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது
4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இன்றைய செய்திகள்
08.02.2019
* பள்ளிக் கல்வித் துறை சார்பில் இம்மாதம் மாணவர்களின் கற்றல் ஆற்றலை மேம்படுத்த கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது.
* உலோக குப்பையில் உருவான 7 உலக அதிசயங்கள்: டெல்லியில் திறக்கப்படவுள்ள கண்கவர் பூங்கா.
* குமரி மாவட்டத்திற்கு பறவை இனங்களில் வருகை குறித்து ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.
* சென்னையில் பாடி பில்டர்களுக்கான மிஸ்டர் இந்தியா போட்டி மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடக்கிறது.
* ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வென்று தொடர்ச்சியாக 2வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.
Today's Headlines
* Educational TV will be launched to improve the learning potential of students this month on behalf of the School of Education.
* 7 Wonders of the World in Metal Trash: A spectacular park to be opened in Delhi.
* On the basis of the Forest Department, the census is conducted annually on the arrival of bird species in Kumari district. In this way the bird survey for this year began today.
* Mister India for the Bodybuilders in Madras will be held on March 29, 30, 31.
* In the Ranji Trophy final, Vidarbha won the Saurashtra by 78 runs and won the Ranji Trophy for the 2nd time.
Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:
Post a Comment