Thursday, February 14, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.02.19

திருக்குறள்


அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.

விளக்கம்:

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

பழமொழி

Spoken words cannot be taken back

சிந்திய நெல்லை அள்ளலாம்; சொல்லிய சொல்லை அள்ள முடியாது!

இரண்டொழுக்க பண்புகள்

1.தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.

       - பாரதியார்

 பொது அறிவு

1. 2016 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றன?

 ரியோ (பிரேசில்)

2.2020 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?

 டோக்கியோ (ஜப்பான்)

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

நேந்திரம் பழம்



1. நேந்திரம்பழம் தினசரி சாப்பிட்டு வருவதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது.
நினைவு ஆற்றலை அதிகபடுத்துகிறது.

2. TB நோய் தாக்குதலுக்கு உண்டானவர்கள் தினசரி நேந்திரம் பழம் ஒன்றும்,முட்டை ஒன்றும் தொடர்ந்து உண்டுவர இந்நோய் நீங்கி உடல் வலு பெறும்.

3. 1 வயதிலிருந்து குழந்தைகளுக்கு நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை வேகவைத்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நல்ல உடல்வளர்சியும்,
ஊட்டசத்தும் கிடைக்கும்.

English words and Meaning

Afford.  வாய்ப்பளித்தல், உதவுதல்
Absorb  உறுஞ்சு,
உட்கொள்
Allay.   அமைதிப்படுத்து
Analysis ஆராய்ச்சி, கூறுபாடு
Amplify. அதிகமாக்குதல்

அறிவியல் விந்தைகள்

* 'வெள்ளைத் தங்கம்' என அழைக்கப்படுவது பருத்தி.
* 'கடலின் மழைக் காடுகள்' என அழைக்கப்படுவது பவளப் பாறைகள்.
* 'மருந்துகளின் இராணி' என அழைக்கப்படுவது பென்சிலின்.
* 'கருப்பு தங்கம்' என அழைக்கப் படுவது பெட்ரோல்.
*'பூமியின் சுவாசப் பைகள் 'என அழைக்கப்படுவன மரங்கள்.

Some important  abbreviations for students

* ECG   -  Electoral Cardiogram

* ELISA  -  Enzyme Linked Immuno Sorbent Assay

நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே.

இன்றைய செய்திகள்
15.02.2019

* இந்திய தேர்தல் ஆணையராக மத்திய நேரடி வரி வாரிய சேர்மன் சுஷில் சந்திரா நியமனம்.

* காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு...

* மணப்பாறை: வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக 3 முறை மணியோசை ஒலிக்கப்படுகிறது. இதனால் உடல்நலத்தை காக்கும் வகையில் மாணவர்கள் தினமும் தண்ணீர் குடிப்பதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

* மழையின்றி சரிந்தது பெரியாறு நீர்மட்டம் : காத்திருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம், திகிலில் தென்மாவட்ட மக்கள்.

* கடைசி டெஸ்டில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி.தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

Today's Headlines

* Chairman of the Central Board of Direct Taxes, Sushil Chandra, appointed as the Election Commissioner of India.

* 40 CRPF soldiers killed in the  terrorist attack in Kashmir.

* In Manaparai, Vayampatti - Karunkulam Government Higher Secondary School is giving 3 times break for drinking water. The parents have welcomed this drinking habit which will  protect student's health.

* The water level of Periyar dam  reduced. There might be a water scarcity in the southern districts of Tamilnadu.

* England won the final Test. The West Indies won the test cricket series.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment