![]() |
சார்லஸ் டார்வின் |
No honest man ever repented of his honesty .
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன்.
*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.
பொன்மொழி:
போலியான நண்பனாக இருப்பதைவிட
வெளிப்படையான எதிரியாக இரு
------ தந்தை பெரியார்.
பொது அறிவு :
English words & meanings :
Road - சாலை
Rock. - பாறை
வேளாண்மையும் வாழ்வும் :
நீர்வளங்களை திறம்பட நிர்வகிப்பது ஒரு நிலைத்த தன்மை மற்றும் நீருக்கான பாதுகாப்பு இலக்குகளை அடையவும், நீர் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.
பிப்ரவரி 12
நீதிக்கதை
கொக்கும் மீனும்
ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் கொக்கைப் பார்த்தவுடன் பயந்து நின்று விட்டது.
மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்கு நினைவுக்கு வந்தன. “கொக்குகள் நிற்கும் இடத்தைக் கண்டால் அங்கே போகாதே, அவை மீன்களைப் பிடித்துத் தின்றுவிடும்?” என்று அது கூறியிருந்தது. எனவேதான் அந்தக் கொழுத்த மீன் கொக்கைக் கண்டவுடன் பயந்து நின்று விட்டது.
ஆனால், அதைக்காட்டிலும் சிறிய மீன்களெல்லாம் சிறிதும் அச்சமில்லாமல் மடைவாய் வழியாகச் சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப் பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் தன்னைக் கடந்து செல்வதை அந்த கொழுத்த மீன் பார்த்துக்கொண்டிருந்தது.
மீன் சிறிது நேரம் நின்று கவனித்தது.பின்பு, "இந்தக் கொக்கு ஏமாளிக் கொக்கு போலிருக்கிறது" இத்தனை
மீன்களை தின்னவில்லை. சின்ன சின்ன மீனெல்லாம் அந்தக் கொக்குக்குப் பயப்படாமல் போகும் போது நான் ஏன் பயப்படவேண்டும்” என்று நினைத்துக் கொண்டு அதுவும் புறப்பட்டது.
மடைவாயை அந்தக் கொழுத்த மீன் நெருங்கியது. . அதே சமயம் கொக்கு அதைப் பிடித்தது. அந்தக் கொக்கு,
மறுபடியும் கொழுத்த மீன் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு மடைவாயின் கரையில் நின்று கொண்டிருந்தது.
கருத்துரை :-- ஓடுகிற மீனையெல்லாம் ஓட விட்டு விட்டுப் பொருத்தமான மீன் வரும்போது சட்டென்று கொத்தித் தின்னும் கொக்கு.அடக்கமாக உள்ளவர்கள் கொக்குப்போல் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களே.அவர்களை ஏமாளிகள் என்று எண்ணிவிடக் கூடாது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment