Thursday, September 24, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2026

சதீஷ் தவான்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:502

குறள்:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.  


பொருள்:

நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்..

பழமொழி :

Set a thief to catch a thief.

முள்ளை முள்ளால் எடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி : 

ஒரு கருத்தை ஒற்றைக் கண்ணோட்டத்தில் அல்லது ஒரே கோணத்தில் பார்ப்பவர்கள் ,அதில் உள்ள உண்மைகளை ஆராய்வதில்லை. எனவே உங்கள் கருத்து பன்முகம் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் ..

இறையன்பு அவர்கள்

பொது அறிவு : 

1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

செப்டம்பர் 27.

2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?

குற்றாலம் (தமிழ்நாடு)

English words :

1. Comprehensive– Thorough – விரிவான

2.Inevitable – Unavoidable – தவிர்க்க முடியாத

புவியியலும் சுற்றுசூழலும் :

கழிவுநீர் வடிகால் வசதிகளைப் பராமரித்தல்.
பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல்
பூங்காக்கள் மற்றும் பொது இடங்களைப் பராமரித்தல்
பிறப்பு, இறப்பு போன்ற பதிவுகளை மேற்கொள்ளுதல் போன்றவை ஆகும்.

NMMS :

MAT 

வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவரது கடவுச்சீட்டில் குறிக்கப்படும் முத்திரை

 (1) ஆதார் அட்டை

 (2) விமான பயணச்சீட்டு

 (3) விசா

 (4) வாக்காளர் அடையாள அட்டை 

 விடை: (3) விசா

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 🌿 படிப்புடன் ஓய்வும் தேவை

ஒரு சிறிய ஊரில் விக்னேஷ் என்ற மாணவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டவன். எப்போதும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு படித்துக் கொண்டே இருப்பான்.

தேர்வு நெருங்கியதால், “நான் அதிக நேரம் படித்தால்தான் அதிக மதிப்பெண் பெற முடியும்” என்று நினைத்து, ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து படித்தான். நண்பர்கள் விளையாட அழைத்தாலும் செல்லவில்லை . உணவு சாப்பிடும் நேரத்திலும் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான். சில நாட்களில் அவனுக்கு மிகவும் சோர்வாக இருந்தது. படித்த பாடங்கள் சரியாக நினைவில் நிற்கவில்லை . இதை க் கவனித்த அவனுடைய தாய்,

“விக்னேஷ், படிப்பு முக்கியம் தான். ஆனால் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுத்து, நன்றாகத் தூங்கி, பிறகு படித்தால் படிப்பு நன்றாக மனதில் பதியும்,” என்று அறிவுரை கூறினார்.

அன்று முதல் விக்னேஷ் தனது படிப்பு நேரத்துடன் சிறிய ஓய்வு நேரத்தையும் வைத்துக்கொண்டான். மாலை சிறிது நேரம் விளையாடினான், சரியான நேரத்தில் உணவு சாப்பிட்டான், இரவில் நன்றாகத் தூங்கினான்.

அதன் பிறகு அவன் புத்துணர்ச்சியுடன் படிக்கத் தொடங்கினான். படித்தவை எளிதாக நினைவில் நின்றன. தேர்விலும் நன்றாக எழுதினான்.

அப்போது விக்னேஷ், “ஓய்வு என்பது நேரத்தை வீணாக்குவது அல்ல; அடுத்த முயற்சிக்கான சக்தியைப் பெறுவது!” என்பதைப் புரிந்துகொண்டான்.

நீதி: 🌟 படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே போல் உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

இன்றைய செய்திகள்

25.09.2026

🗒️சமூக நீதி விடுதி மாணவர்களின் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி திட்டம்!
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

🗒️ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் மூலம் 60 கோடி பேர் பயன் - பிரதமர் மோடி பெருமிதம்... 

 🗒️எல்நினோவால் இந்தியாவில் 15,800 பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
வருகிற நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் எனத் தகவல். 

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய விளையாட்டு: 

🏃🏿400  மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்.

🏃🏻‍♀️மகளிர் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான்; இந்தியாவுக்கு வெண்கலம்.

Today's Headlines 

🗒️ Special training programme to improve the skills of Social Justice Hostel students!
Steps are being taken to prepare more than 12,000 students for various competitive exams.

🗒️ 60 crore people benefited from the Ayushman Bharat scheme – PM Modi says proudly.

🗒️ El Niño may cause the deaths of 15,800 people in India, study says.
The study says that temperatures may rise further in the coming days.

🏅 Sports News

🏀 Asian Games:

🏃🏿 India won a silver medal in the 400-metre relay.

🏃🏻‍♀️ Women’s 10,000-metre race: India won a bronze medal.

Covai women ICT_போதிமரம்

Wednesday, September 23, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2026

மங்கள்யான்




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:501

குறள்:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

பொருள்:

அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

பழமொழி :

Sadness and gladness succeed eash other

வறுமை ஒரு காலம்; வளமை ஒரு காலம்

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி : 

அன்பு செலுத்தி  அன்பைப் பெறு. மரியாதை செலுத்தி மரியாதை பெறு. நிச்சயம் வாழ்வில் உயர்வாய்

Thought for the Day :

Translation Day: “Different languages, shared understanding.”

பொது அறிவு : 

1. தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? 

பிப்ரவரி 28. 

2. தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28 அன்று கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன? 

சர் சி வி ராமன் "ராமன் விளைவை" கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. 

English words :

1.Feasible – Achievable – சாத்தியமான

2. Arbitrary – Random – தன்னிச்சையான

புவியியலும் சுற்றுசூழலும் :

பேரூராட்சியின் முக்கியப் பணிகள் குறித்து பார்ப்போம்.

குடிநீர் வழங்குதல், சாலை மற்றும் தெருக்களைப் பராமரித்தல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், தூய்மை மற்றும் குப்பை மேலாண்மை. 

NMMS :

MAT 

உஉலகில் சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் நாடுகள்

 (1) இந்தியா, சீனா, ஜப்பான் , இத்தாலி 

 (2) ஜெர்மனி, ஸ்பெயின், கனடா, பிரேசில் 

 (3) ரஷ்யா, நார்வே, இந்தியா, கிரீன்லாந்து

 (4) இந்தியா, அமெரிக்கா, கனடா, இத்தாலி

 விடை: (1) இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி 

செப்டம்பர் 24

2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

நீதிக்கதை

 🌱 யார் இகழ்ந்தாலும் பயப்படாதே

ஒரு சிறிய கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் அமைதியானவனாகவும், முயற்சி செய்து கற்றுக்கொள்ளும் பழக்கம் கொண்டவனாகவும் இருந்தான்.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் அனைவரிடமும் ஓவியம் வரையச் சொன்னார்.

அருண் மிகவும் ஆர்வமாக ஓர் அழகான இயற்கைக் காட்சியை வரைந்தான். ஆனால் சில மாணவர்கள் அவனைப் பார்த்து,

“உன்னால் நல்ல ஓவியம் வரையவே முடியாது!” என்று கேலி செய்தனர். முதலில் அருணுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவன் அவர்களின்    வார்த்தைகளைக் கண்டு பயப்படவில்லை .

“நான் இப்போது சிறப்பாகச் செய்யவில்லை என்றாலும், தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் முன்னேறுவேன்,” என்று தன்னம்பிக்கையுடன் நினைத்தான்.

அன்றிலிருந்து தினமும் சிறிது நேரம் ஓவியம் வரையப் பயிற்சி செய்தான். சில மாதங்களில் அவனுடைய ஓவியங்கள் மிகவும் அழகாக மாறின.

பள்ளியில் நடை பெற்ற ஓவியப் போட்டியிலும் அவன் பரிசு பெற்றான்.

அப்போது முன்பு அவனை கேலி செய்த மாணவர்கள், “அருண், நீ உண்மையிலேயே நன்றாக வரைந்திருக்கிறாய்!” என்று பாராட்டினர்.

அருண் புன்னகையுடன், “யாராவது நம்மை இகழ்ந்தால் அதை க் கண்டு பயப்படவோ, மனம் தளரவோ கூடாது. நம்முடைய முயற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்,” என்றான்.

நீதி: 🌟

யார் இகழ்ந்தாலும் பயப்படாமல், தன்னம்பிக்கையுடன் நம் முயற்சியைத் தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

24.09.2026

🗒️செப்டம்பர் 23-ஆம் நாளினை, மாநில அளவில் ஆண்டுதோறும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🗒️அரசு விடுதி மாணவர்களின் குறைகளை தீர்க்க புதிய கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் வன்னி அரசு திறந்து வைத்தார்.

🗒️ வேலை நாட்களை குறைக்க வலியுறுத்தி வங்கிகள் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு.மேலும் ஐந்து நாட்கள் வங்கிச்சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

🗒️அமெரிக்காவில் தகவல் தொடர்பு கேபிள் பழுதால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்-அமைச்சர் ஜோசப்  விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Today's Headlines

🗒️ September 23 has been declared as Organ Donation Awareness Day to be observed every year across the state.

🗒️ A new control room has been opened to solve the problems of students staying in government hostels. Minister Vanni Arasu inaugurated it.

🗒️ Banks have announced a three-day nationwide strike demanding a reduction in working days. There is also a risk that banking services may be affected for five more days.

🗒️ More than 600 flights have been cancelled in the US due to a communication cable failure.

🏀 Sports News

🏀 Tamil Nadu badminton player Hariharan has received congratulations from Chief Minister Joseph Vijay.

Covai women ICT_போதிமரம்

 

Tuesday, September 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2026

 




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:500

குறள்:

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

பொருள்:

வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

பழமொழி :

Self help is the best help.

தன் கையே தனக்கு உதவி.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை காப்பதோடு மட்டும் அல்லாது அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி : 

கடமையை செய்பவனுக்கு
கடமை இருந்து கொண்டே இருக்கும்;
கவலைப்படுகிறவனுக்கு
கவலை இருந்து கொண்டே இருக்கும்.

- கண்ணதாசன்

Thought for the Day :

Heart Day: “Care for your heart; cherish every heartbeat.”

பொது அறிவு : 

1.“ரேபிஸ்” நோய் உண்டாவதற்குக் காரணம்?

விடை: நாய்க்கடி


2. கடற்கரை கோவிலும், குகை கோவிலும் காணப்படும் இடம் எது?

விடை: மாமல்லபுரம் 

English words :

1. Prudent– Sensible – விவேகமான

2.. Reluctant– Unwilling – தயங்குகிறl

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதி பெரும்பாலும் சமவெளியாக உள்ளது.
முக்கிய சமவெளிப் பகுதிகள்:
காவிரி டெல்டா
வட தமிழக சமவெளி
தென் தமிழக சமவெளி
காவிரி டெல்டா “தமிழகத்தின் நெற்களஞ்சியம்” என்று அழைக்கப்படுகிறது.

NMMS :

MAT 

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு. 

 (1) காக்கசாய்டு - யுரேசியா 

 (2) நீக்ராய்டு - வட அமெரிக்கா

 (3) மங்கோலாய்டு - ஆசியா 

 (4) ஆஸ்ட்ரலாய்டு - ஆஸ்திரேலியா 

 விடை: (2) நீக்ராய்டு - வட அமெரிக்கா 

செப்டம்பர் 23

சம இரவு நாள்

சம இரவு நாள்(Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீ(equi) எனபது சமம் என்றும் நாக்சு(nox) என்பது இரவு என்றும் பொருள்படும். சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 21அன்றும் இவை நிகழும். இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதி சம இரவு நாள் ஆகும்.

நீதிக்கதை

 🌙 கனவை க் கண்டு பயந்த கவின்

ஒரு சிறிய கிராமத்தில் கவின் என்ற சிறுவன் தனது பெ ற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அன்பானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்தான்.

ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது கவினுக்கு ஒரு பயமுறுத்தும் கனவு வந்தது. கனவில் ஒரு பெரிய இருண்ட காட்டில் அவன் தனியாக இருப்பது போலத் தோன்றியது. திடீரென்று ஒரு பெரிய உருவம் அவனை நோக்கி வருவது போல தெ ரிந்தது. பயந்து விழித்த கவின், “அம்மா!” என்று அழைத்தான். உடனே அவனுடைய அம்மா அறைக்குள் வந்து அவனைத் தேற்றினார்.

“என்ன ஆச்சு கவின்?” என்று கேட்டார்.

“அம்மா, எனக்கு மிகவும் பயங்கரமான கனவு வந்தது. இன்னும் அந்தக் கனவு நினைவுக்கு வந்து பயமாக இருக்கிறது,” என்றான் கவின்.

அம்மா அவனிடம், “கண்ணா, அது வெறும் கனவுதான். நாம் தூங்கும்போது நம் மனதில் தோன்றும் காட்சிகள்தான் கனவுகள். அவை உண்மையில் நடப்பவை அல்ல. அதனால் பயப்பட வேண்டாம்,” என்று அன்புடன் கூறினார்.

அதன்பிறகு கவின் ஆழமாக மூச்சை இழுத்து விட்டான். அம்மாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் அமைதியாகப்படுத்தான்.

அடுத்த நாள் காலை எழுந்ததும், நேற்று இரவு பயந்ததை நினைத்து சிரித்தான்.

“கனவு என்னை பயமுறுத்த முயன்றது. ஆனால் அது உண்மையல்ல என்பதை இப்போது புரிந்துக் கொண்டே ன்!” என்று தன்னை த்தானே சொல்லிக்கொண்டான்.

அதன்பிறகு எப்போதாவது பயமுறுத்தும் கனவு வந்தாலும், கவின் உடனே பெற்றோரிடம் சொல்லி, அது வெறும் கனவு என்பதை நினைத்துக் கொண்டு அமைதியாகிவிடுவான்.

நீதி: 🌟 கெட்ட கனவுகள் உண்மையல்ல. அவற்றைக் கண்டு பயப்படாமல், தைரியமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.09.2026

🗒️பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

🗒️மிஷன் ஒலிம்பிக் 2036 திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் ஐ.பி.எஸ். நியமனம்
2036 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திற்கு 15 பதக்கங்களை வெல்ல அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

🗒️ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி ,மேலும் 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம்: ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி
இந்தியா அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.... 
 
🏀ஆசிய விளையாட்டில் சீனாவை சேர்ந்த 13 வயதே நிரம்பிய நீச்சல் வீராங் கனை யூ ஜிடி இரட்டை தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Today's Headlines

🗒️ A review meeting was held under the leadership of Minister Rajmohan about the precautionary measures for the monsoon season.

🗒️ Mylvaaganan, IPS, has been appointed as the Special Officer for the Mission Olympics 2036 project.
The Tamil Nadu government has set a target of winning 15 medals in the 2036 Olympic Games.

🗒️ India’s permanent membership in the UN Security Council has received support from four more European countries.

🏀 Sports News

🏀 Gold medal in the Asian Games: Smriti Mandhana becomes emotional.
India played very well and won the gold medal.

🏀 13-year-old Chinese swimmer Yu Zidi surprised everyone by winning two gold medals at the Asian Games.

Covai women ICT_போதிமரம்