தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
To cheat one that has come for protection is bad.
இரண்டொழுக்க பண்புகள் :
* என்னிடம் உள்ள பொருட்களைப் பற்றி பெருமை பேச மாட்டேன்.
* என்னிடம் இல்லாத பொருட்களை எண்ணி ஏக்கம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
--திரு. வோயாஸ்--
பொது அறிவு :
1. உலகின் இரண்டாவது உயரமான சிகரம் எது?
விடை :காட்வின் ஆஸ்டின்
2. தமிழ்நாட்டின் முக்கிய இழை பயிர் எது?
விடை : பருத்தி
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..
நீதிக்கதை
வெப்பமும் குளிர்ச்சியும்
காலையில் கதிரவன் தோன்றினான். தன் ஒளியைப் பரப்பி உலகம் முழுவதும் உள்ள இருளை விலகச் செய்தான். கடல் நீர்ப்பரப்பின் மீதும் அவன் கதிர்கள் விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும் என்று கதிரவன் தன் ஒளியை மேன்மேலும் அதன் மீது பாய்ச்சினான். வெப்பத்தைத் தாங்க முடியாமல் கடல் முகம் சுருங்கியது.
அதன் அலைகள் தளர்ச்சியடைந்து சிறுத்தன. தான் அன்போடு கதிர் பாய்ச்சிக் கடலை அழகுபடுத்த
முயலும்போது, அது ஏன் முகத்தைச் சுருக்கிக் கொள்கிறது? என்று கதிரவனுக்குப் புரியவில்லை.
“கடலே, என்ன கோபம்?'” என்று கேட்டான்.கடல் பதில் பேசவில்லை. பதில் சொல்லக் கூட விருப்பமில்லாத அளவு தன் மீது கடல் கோபமாய் இருக்கக் காரணம் என்ன? என்று சிந்தித்தான் கதிரவன். அப்போது அந்தப் பக்கமாக காற்றரசன் வந்தான்.
கதிரவன் சிந்தனையைக் கண்டு காரணம் கேட்டான். கடலின் போக்கைப்பற்றிக் கதிரவன் கூறினான். அதைக் கேட்டபின் காற்றரசன் சொன்ன செய்தி கதிரவனை மேலும் துன்பப்படச் செய்தது.
“நீ வரும்போதுதான் கடல் தன் அலைகளைச் சுருக்கிக் கொள்கிறது. இரவில் நிலவரசன் வரும்போது எவ்வளவு மகிழ்ச்சி . கொள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப் பொங்கி அலைகளை உயரச் செலுத்தி ஆனந்தம் கொள்ளுகிறது.உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான் அது விரும்புகிறது?” என்று காற்றரசன் கூறினான்.
மறுநாள் நிலவரசன் பகலிலேயே வெளியில் வந்தான். கடல் அலைகளைப் பெரிதாக்கிக் கொண்டது. கதிரவன் நிலவரசனை நேருக்கு நேரே பார்த்தான். "நிலாத்தம்பி, இந்த கடல் உன்னைக் கண்டு பொங்குவதும் என்னைக் கண்டு. பொங்காததும் ஏன் ?” என்று கதிரவன் கேட்டான்.
“அண்ணா, என் கதிர்கள் குளிர்ச்சியாயிருப்பதால் கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.
அதனால் ஆனந்தமாகப் பொங்குகிறது. உன் கதிர்கள் வெப்பமாக இருப்பதால் சூடு தாங்காமல் சுருங்குகிறது?” என்றான் நிலவரசன். காரணமறிந்த கதிரவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
கருத்துரை:-- இனிய சொற்களே மகிழ்ச்சியைத் தரும். கடுஞ்சொற்கள் மகிழ்ச்சியைத் தராது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment