தன் வினை தன்னைச் சுடும்.
His own actions will burn him.
இரண்டொழுக்க பண்புகள் :
* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.
* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.
பொன்மொழி :
எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்காதே எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு..
----- விவேகானந்தர்
பொது அறிவு :
1.கப்பல்களில் சரியான நேரத்தை கணக்கிட பயன்படும் கருவி எது ?
2. குறைந்த அளவு மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
விவசாயத்தில், குறிப்பாக, நீர் மேலாண்மை மிகவும் நன்கு திட்டமிடப்பட வேண்டும், குறிப்பாக நீர்ப்பாசனத்தின் அடிப்படையில்.
பிப்ரவரி 07
நீதிக்கதை
மின்மினி பூச்சியும்,காகமும்
முன்பொரு காலத்தில் காட்டில் மின்மினி பூச்சி ஒன்று வாழ்ந்து வந்தது. அது அங்கும் இங்கும் சந்தோஷமாக ஆடி பாடிக் சுற்றிக் கொண்டே இருந்தது. ஒரு நாள் காகம் ஒன்று அந்த மின்மினி பூச்சி வருவதை பார்த்துக் கொண்டு இருந்தது. அந்த மின்மினிப்பூச்சி அருகில் வந்தவுடன் தன் வாயை திறந்து அதை சாப்பிட தினமும் முயற்சி செய்தது.
அந்தக் காகத்திடமிருந்து மின்மினி பூச்சி தப்பிக்க, அந்த காகத்திடம் சொன்னது, “நண்பா! நான் சொல்வதை ஒரு நிமிடம் கேள்” என்றது. அந்த
காகமும், “என்னசொல்லு” என்றது.
அதற்கு அந்த மின்மினி பூச்சி சொன்னது, “என்னை மட்டும் உண்பதால் உன்னுடைய பசி எவ்வாறு அடங்கும் என்னை போல் நிறைய பூச்சிகள் இருக்கும் இடத்தை உனக்கு காட்டுகிறேன் என்னுடன் வா” என்றது.
பேராசை பிடித்த காகம் மின்மினி பூச்சியிடம், “சரி நான் உன்னுடன் வருகிறேன் என்னை அழைத்துக் கொண்டு செல்” என்றது. அந்த மின்மினிப்பூச்சி காகத்தை ஒரு இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றது.
அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் இருந்து சில நெருப்பு பொறிகள் வெளியே வந்து கொண்டு இருந்தது. அந்த நெருப்பு பொறிகளை மின்மினி பூச்சி, காகத்திடம் காட்டி சொன்னது, “இங்கு பார்த்தாயா என்னை போல் எவ்வளவு மின்மினிப்பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன”. பேராசை பிடித்த காகம் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த நெருப்பு பொறிகளை போய் சாப்பிட ஆரம்பித்தது.
அந்த நெருப்புப் பொறிகளை சாப்பிட்ட காகத்தின் வாய் உடனே எரிய ஆரம்பித்து விட்டது. உடனே அந்த காகம் சொன்னது, “இது என்ன பூச்சி ? இதை சாப்பிட்டால் இப்படி வாய் எரிகிறதே, எனக்கு இந்த பூச்சி எதுவும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.
நீதி : உடல் பலத்தை விட மனப்பலமே பெரிது.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment