Sunday, September 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2024

  

சிக்மண்ட் பிராய்ட்




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு ஆராய்தல்

குறள் எண்:791

நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்
வீடுஇல்லை நட்பாள் பவர்க்கு.

பொருள் :நட்புச் செய்த பிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை; ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கெடுதியானது வேறு இல்லை.

பழமொழி :

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. 

Alternatively "known is a drop, unknown is an ocean".

இரண்டொழுக்க பண்புகள் :  

 * தேர்வுகள் எழுதுவது எனது கற்றல் திறனை நானே அறிந்து கொள்ள உதவும். எனவே தேர்வுக்கு நன்கு படித்து தயாராவேன்.                              

* கையெழுத்து அழகாக இருந்தால் நான் எழுதும் விபரம் பிறருக்கு நன்கு புரியும்.  எனவே எப்போதும் அழகாக எழுதுவேன்.

பொன்மொழி :

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.-----சாக்ரடீஸ்

பொது அறிவு : 

1. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.?

விடை : இலத்தீன் மொழியில்

2. அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை.?

விடை : 22


English words & meanings :

execution-செய்துமுடி,

enactment-அரங்கேற்றம்

வேளாண்மையும் வாழ்வும் : 

அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.

செப்டம்பர் 23

சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freudசிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

நீதிக்கதை

 விற்பனை


உலகப் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு  நிறுவனத்தின் தலைவர் உலக படத்தை வைத்து  தீவிரமாக யோசித்தார்.


தனது நிறுவனத்தின் காலணிகள் அறிமுகம் செய்யப்படாத  இரண்டு தீவுகளை தேர்ந்தெடுத்தார். அங்குள்ள நிலையை பரிசோதித்து வருவதற்காக தனது  நிறுவனத்தின்  இரண்டு விற்பனை பிரதிநிதிகளை  அனுப்பி வைத்தார்.


இருவருமே புறப்பட்ட அந்தந்த தீவுகளுக்கு சென்றடைந்தனர் ஒரு வாரம் சென்றது.


முதல் தீவுக்கு சென்ற விற்பனை பிரதிநிதி இவ்வாறு பதில் அனுப்பியிருந்தார்.


"இந்த தீவின் மக்களிடையே காலணி அணியும் பழக்கமே கிடையாது.  இங்கு நமது விற்பனையை துவங்க  வாய்ப்பே கிடையாது.அடுத்த விமானத்தில் நான் கிளம்புகிறேன்"


.மற்றொரு தீவில் இருந்த விற்பனை பிரதிநிதி இவ்வாறு பதில அனுப்பி இருந்தார் 


"இந்த தீவில் உள்ள மக்களிடையே காலணி அணியும் பழக்கமே கிடையாது. எனவே நமது விற்பனைக்கு பிரமாதமான எதிர்காலம் உள்ளது.  

 ஆறு மாதங்கள் இங்கேயே தங்கி இருந்து நமக்கு தேவையான ஆர்டர்களை எடுத்து அனுப்புகிறேன்."


ஒரே மாதிரி நிலை.நேர்மறையாக முடிவெடுப்பதும், எதிர்மறையாக முடிவெடுப்பதும் நம் கையில் தான் உள்ளது.


 நீதி:  நேர்மறையாக நினைப்போம். நல்லதே நடக்கும்.

வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

23.09.2024

* மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழக சுகாதாரத் துறை கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்.

* புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு.

* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன துருவ் ஹெலிகாப்டர்: இதன் மூலம் இரவிலும் லடாக் பகுதியை கண்காணிக்க முடியும் என ராணுவம் தகவல்.

* அமெரிக்கா, இஸ்ரேல் உளவாளிகள் இணைந்து ஸ்டக்ஸ்நெட் வைரஸ் மூலம் ஈரான் அணு ஆயுத திட்டம் தடுப்பு.

* செஸ் ஒலிம்பியாட் தொடர்: வரலாற்றில் முதல் முறையாக தங்கம் வென்று இந்திய அணி சாதனை.

* சிறந்த சர்வதேச ஹாக்கி வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்: சிறந்த வீரர் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு.

Today's Headlines

* Government of Tamil Nadu has announced that the Health Department of Tamil Nadu has won 545 awards in the last 3 years due to the measures taken to provide quality medical facilities to the people.

*  KR Sriram  was appointed as the new Chief Justice of Madras High Court.

 * New low pressure area likely to form today: there are 3 days rain likely to be in Tamil Nadu.

 * State-of-the-art indigenously developed Dhruv helicopter: Army informs that it will be able to monitor the Ladakh region even at night.

*  Iran's nuclear weapons program was prevented by the Stuxnet virus together with American and Israeli spies.

 * Chess Olympiad series: Indian team won gold for first time in history

 * Indian team captain Harmanpreet Singh was in the Best International Hockey Player Award list: Best player was selected by voting.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment