Wednesday, September 18, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2024

  

சுனிதா வில்லியம்ஸ்




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :நட்பு

குறள் எண்:788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு .

பொருள்: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

பழமொழி :

வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?

The law-maker should not be a law breaker.

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன். 

  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு வருடம் என்பது முன்னூற்று அறுபத்தைந்து வாய்ப்புகள் கொண்டது. பயன்படுத்துங்கள், வெற்றி பெறுங்கள்.---கவிஞர் வைரமுத்து.

பொது அறிவு : 

1. மனிதன் ஒரு சமூக விலங்கு என கூறியவர் - 

விடை: அரிஸ்டாட்டில்


2. காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி - 

விடை: காற்றழுத்தமானி

English words & meanings :

 liberty-சுதந்திரம்,

 wholly-முற்றிலும்

வேளாண்மையும் வாழ்வும் : 

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்


சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 191965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்[

நீதிக்கதை

கொடுத்தவன் கெட்டதில்லை.


 முன்பு ஜெர்மனிய நாடு பிளவு பட்டு இருந்தபோது, பெர்லின் நகரத்தை கிழக்கு மேற்காக பிரிக்கக்கூடிய பெரிய மதில் சுவர் இருந்தது. 

ஒரு நாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த ஒரு சிலர் லாரி நிறைய குப்பைகளை கொண்டு வந்து, மேற்கு பெர்லினின் எல்லைக்குள் கொட்டி விட்டு சென்று விட்டனர்.

 மேற்கு பெர்லினை சார்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக அவர்கள் ஒரு லாரி நிறைய  உணவுப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பால் பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்து கிழக்கு பெர்லினின் மதில் சுவர் ஓரத்தில் அடுக்கி வைத்துச் சென்றனர்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்துவிட்டு சென்றனர்.

" ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன நிறைய இருக்கிறதோ, அதையே பிறருக்கு கொடுப்பார்கள்".

 நீதி: உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதையே பிறர்க்கும் உன்னால் கொடுக்க முடியும்.  எனவே நமது இதயத்தை  நல்ல எண்ணங்களால் நிரப்புவோம். 

இன்றைய செய்திகள்

19.09.2024

* கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க, எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

* பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை முழு சர்வே செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

* தமிழக மீனவர்கள் 45 பேருக்கு சிறைத் தண்டனையுடன் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம்.

* 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: இது தொடர்பான மசோதா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

* கடும் வறட்சியால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 200 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே நாட்டின் வனத்துறை திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

* சென்னையில் இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் போட்டி:  டிக்கெட் விற்பனை  தொடங்கியது.

* 95-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்கியது.

Today's Headlines

* To prevent the spread of Nipah virus from Kerala to Tamil Nadu, the Director of Public Health Department of Tamil Nadu has ordered to intensify 24-hour surveillance in the border districts.

*  Full survey of Pallikaranai wetland area: South Zone Green Tribunal ordered Tamil Nadu govt.

 * A Sri Lankan court sentenced 45 fishermen from Tamil Nadu  fine and imprisonment.

*  Union Cabinet approves 'One Nation, One Election' scheme: It is reported that the bill in this regard is likely to be tabled in the winter session of Parliament.

*  Zimbabwe's forestry department has announced plans to kill about 200 elephants to help people suffering from food shortages due to severe drought.

*  India-Bangladesh Test Match in Chennai: Ticket Sales Begin

* The 95th All India MCC-Murugappa Gold Cup Hockey Tournament started today at Egmore Mayor Radhakrishnan Stadium, Chennai.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment