|
சாக்சி மாலிக் |
திருக்குறள்:
பால்,: பொருட்பால்
அதிகாரம்: இடுக்கண் அழியாமை
குறள் எண்:625
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
பொருள் :விடாமல் மேன்மேலும் துன்பம் வந்த போதிலும் கலங்காமலி ருக்கும் ஆற்றலு டையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு்ப் போகும்.
பழமொழி :
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.
Strike while the iron is hot.
இரண்டொழுக்க பண்புகள் :
*எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.
*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
பொன்மொழி :
பொதுவான விஷயங்களை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாகச் செய்வதே வெற்றியின் ரகசியம்." – ஜான் டி. ராக்பெல்லர்
பொது அறிவு :
1. ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் எங்கு கொடி ஏற்றுவார்?
விடை: செங்கோட்டை
2. எந்த உயிரினம் அதிக மக்களை கொல்லுகிறது?
விடை: பாம்பு
English words & meanings :
gigantic-பிரம்மாண்டமான,
Immense-மகத்தான
வேளாண்மையும் வாழ்வும் :
“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.
செப்டம்பர் 03
சாக்சி மாலிக் அவர்களின் பிறந்தநாள்
சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார்.
நீதிக்கதை
யார் பெரியவர்
அக்பர் தனது அவையில் அமர்ந்திருந்தார்.சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, "அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்கு தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
மதிநுட்ப அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்."உமது கருத்து என்ன? "என அக்பர் கேட்டார்.
"மன்னர் பெருமானே!இந்த விஷயத்தில் சந்தேகத்திற்கு என்ன இருக்கிறது? கடவுளை விட தாங்கள்தானே பெரியவர் என்று கூறினார் பீர்பால். அதை கேட்ட அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
"பீர்பாலே உமது கூற்றை தக்க காரணத்துடன் விளக்குங்கள்" என்றார்அக்பர். "சக்கரவர்த்தி அவர்களே என்னை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே என்னை நாடு கடத்தி விட தாங்களால் முடியும் ஆனால் கடவுளுக்கு என்னை பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது" எனறார் பீர்பால்.
"எப்படி என்று வினவினார் அக்பர்.
"உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதி ஓரளவுக்குத்தான. உங்களுக்கு பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டி விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ,பூமியில் மட்டுமின்றி அனைத்து உலகமும் பரவி இருக்கிறது. ஆகவே அவர் ஒருவரை எவ்வாறு நாடு கடத்த முடியும். ஒருவரை கடவுள் எங்கே விரட்டி அடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தானே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்" என்று கேட்டார் பீர்பால்.
இதைக்கேட்ட அக்பர்,பீர்பால் தனக்கு சரியான பாடம் கற்பித்து விட்டார் என்பதையும்,தனது கேள்வி தவறானது என்பதையும் புரிந்து கொண்டார்.
இன்றைய செய்திகள்
03.09.2024
* தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரம் சரிபார்ப்பு: இரட்டை பதிவுகளை நீக்கும் பணி தீவிரம்.
* தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு.
* தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
* பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் SHe-Box என்ற வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
* கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 90% வளர்ச்சி அடைந்துள்ளது. இது உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சியான 35 சதவீதத்தைவிட 2 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி ஆகும்.
* சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.
* பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்; இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்.
* மேலும் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான வட்டு எறிதல் எப்-56 போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கமும், பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Today's Headlines
* Door-to-door verification of voter details across Tamil Nadu: Intensified work is going on to remove double registrations.
* Tamil Nadu 'Chief Minister's Cup-2024' online pre booking for participation in sports competitions are over.
* So far 11,743 people have been affected by dengue in Tamil Nadu this year: Minister M. Subramanian informed.
* The Central Department of Women and Child Development has launched a website called SHe-Box to ensure workplace safety for women.
* Indian economy has grown by 90% in last 10 years. This is more than 2 times the growth of the world average economic growth of 35 percent.
* Without Sunita Williams and Butch Wilmore Boeing Starliner spacecraft from the International Space Center,will return to Earth alone according to NASA.
* Para Olympic Badminton; India's Nitesh Kumar amazingly won the gold.
* Also, India's Yogesh Kathunia won the silver medal in the men's discus F-56 event and Preeti Pal won the bronze medal in the women's 200m T35 event.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment