உலக தேங்காய் தினம. |
பால் :பொருட்பால்
அதிகாரம்: இடுக்கண் அழியாமை
குறள் எண்:624
மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து .
பொருள் :தடைபட்ட இடங்களில் எல்லாம் ,(வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல .
As clear as a bell.
இரண்டொழுக்க பண்புகள் :
*எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.
*ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
பொன்மொழி :
வெற்றி என்பது நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு ஏறினீர்கள் என்பதல்ல, ஆனால் நீங்கள் எப்படி உலகிற்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்."என்பதாகும். – ராய் டி. பென்னட்
பொது அறிவு :
1. அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை?
2. இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
செப்டம்பர் 02
உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.[1] 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது.[2]
வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது
நீதிக்கதை
தன்னம்பிக்கை உள்ள தவளை |
ஒரு அழகிய குளத்தின் அருகில் இரண்டு தவளைகள் வசித்து வந்தன. அவர்கள் நல்ல நண்பர்களாக ஒன்றாக வளர்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் வயலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது மழை வந்தது. அப்போது பெரிய தவளை, “நண்பா மிகவும் மழை பெய்கிறது எனவே எங்கேயாவது ஒதுங்குவதற்கு இடம் தேடலாம்” என்றது.
அடுத்த தவளை அதற்கு சம்மதித்தது. மழையில் இருந்து ஒதுங்க, அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் நுழைந்தன. அந்த வீட்டின்
சமையல் அறைக்குள் நுழைந்தனர். புது இடம் மிகவும் குழப்பமாக இருந்ததால் இரு தவளைகளும் அங்கேயும் இங்கேயும் குதித்துக்கொண்டு இருந்தன.
திடீரென்று நிலைதடுமாறி நிறைய பால் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் இரு தவளைகளும் விழுந்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அந்த பாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
முயற்சியிலிருந்து தோல்வியடைந்த ஒரு தவளை இனி வெளியே வர முடியும் என்னும் நம்பிக்கையை இழந்தது.
இறுதியில் அந்த தவளை பாலில் மூழ்கி இறந்து விட்டது. மற்றோர் தவளை தன்னம்பிக்கையை இழக்காமல் பாலில் நீந்திக் கொண்டே இருந்தது. பாலில் விடாமல் குதித்துக் கொண்டு மீண்டும் முயற்சியை தொடர்ந்தது.
தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து தப்பியது.
நீதி : முயற்சி திருவினையாக்கும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment