Tuesday, September 17, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.09.2024

  

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:787

அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

பொருள்:அழிவைத்தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

பழமொழி :

சிறு நுணலும் தன் வாயால் கெடும். 

know when to keep quiet .

இரண்டொழுக்க பண்புகள் :  

 1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன். 

  2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.

பொன்மொழி :

உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும். ---சாக்ரடீஸ்

பொது அறிவு : 

1.எல்லா வகை ரத்தத்தினுடனும் சேரும் ரத்த வகை குரூப் எது? 

 ' ஓ 'பாசிஸிடிவ் - O positive

 2. ஒரு துளி ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? 

 30 கோடி.


English words & meanings :

 impose-துணை,

 obstacle-தடங்கல்

வேளாண்மையும் வாழ்வும் : 

அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.

நீதிக்கதை

 விவசாயி பதில் 


ஒரு வயதான விவசாயி தனது நிலத்தில் பாடுபட்டு சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரிடம் இருந்த குதிரை காணாமல் போய்விட்டது.

உடனே அக்கம் பக்கம் வசிப்பவர்கள் "என்ன ஒரு துரதிஷ்டமான நிலை" என்று விவசாயிக்காக பரிதாபப்பட்டனர் விவசாயி "இருக்கலாம்" என்று ஒரே வார்த்தையில்  அவர்களின் ஆறுதலுக்கு பதில் கூறினார்.

 அடுத்த நாள் காணாமல் போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்துக் கொண்டு விவசாய நிலத்துக்கு வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்ன ஒரு அதிர்ஷ்டம்" என்று வியந்தனர். அதை கேட்ட விவசாயி அதுக்கும் "இருக்கலாம்" என்று பதில் அளித்தார்.

 ஒரு வாரத்துக்கு பிறகு, விவசாயியின் மகன் குதிரையை ஓட்டி கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் "என்னப்பா இது! ஒரு நல்லது நடந்தால் ஒரு கெட்டது நடக்கிறது பாவம் உன்னுடைய பையனின் கால் உடைந்து விட்டதே"  என்று வருந்தினார்கள். அதற்கும் அந்த விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று மட்டுமே  கூறினார்.

 ஒரே வாரத்தில் நாட்டில் போர் சூழல் ஏற்பட்டது. எனவே,நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும்  போர்க்களம் வர உத்தரவிடப்பட்டது

ராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று அங்குள்ள இளைஞர்களை போர்க்களத்திற்கு அழைத்துச்  சென்றனர்.

 ஆனால் விவசாயியின் மகனுக்கு கால் உடைந்து இருந்ததால் அவனை போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லவில்லை அதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் இதையும் புகழ்ந்து கூறினார்கள் அதற்கும் விவசாயி பதிலாக "இருக்கலாம்" என்று  மட்டுமே கூறினார்.

 ஊர் மக்கள் அவரின் பதிலை கேட்டு  ஆச்சரியம் அடைந்தனர்.

 நீதி: நல்லதும் கெட்டதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. கஷ்டமான சூழ்நிலைகளில் இது நிரந்தரமல்ல நாளை என்று ஒருநாள் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

இன்றைய செய்திகள்

18.09.2024

* மாவட்டம் தோறும் நீர்நிலைகளை சிறப்பாக பராமரிப்போருக்கான ‘முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது’ வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

* தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வழக்கத்தைவிட  7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

* கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

* செஸ் ஒலிம்பியாட்: 5-வது சுற்றில் இந்திய அணி வெற்றி.

* ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி: 5வது முறையாக கோப்பையை வென்றது இந்தியா.

* ஐ.எஸ்.எல் கால்பந்து: முகமைதன் அணியை வீழ்த்தி நார்த்ஈஸ்ட் யுனைடெட் திரில் வெற்றி.

Today's Headlines

An ordinance has been issued allocating funds to give the 'CM's Watershed Protector Award' to those who take care of water bodies in every district.

* All the trade union confederations of the transport companies have insisted that the transport pensioners should be given a subsidized hike based on the court rulings.

 * According to the Meteorological Department, the temperature in Tamil Nadu is likely to rise up to 7 degrees Fahrenheit above normal for two days.

 * Union Home Minister Amit Shah has said that the government will soon announce the notification for conducting the country's population census.

 * Central European countries including Austria, Poland, Czech Republic, and Romania have become flooded due to the heavy rains that have been falling for the last 2 days.  Thousands have been dislocated from their homes.

* Chess Olympiad: Indian team won in 5th round.

 * Asian Champions Hockey Tournament: India won trophy for the 5th time

*  ISL Football: Northeast United won a thrill victory of 3-0 against Mohamaidhan team.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment