திரு.பிவி.நரசிம்ம ராவ் |
பால் :பொருட்பால்
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
பொருள்: கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக்கொள்ளும் மதிப்பு
( கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.
Every tide has its ebb.
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
"உன்னால் முடியாது என பலர் கூறிய வார்த்தைகளே என்னை வெற்றியின் பக்கம் தள்ளியது!"----- ஜாக்கிசான்
பொது அறிவு :
1. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
உற்பத்தியினை பெருக்கிட விவசாயிகளுக்கு தரமான விதைகள், உரங்கள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகியவற்றை சரியான நேரத்தில் அளிப்பது, ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உயர் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற முக்கிய பணிகளை இத்துறை செய்து வருகிறது
ஜூன் 28
நீதிக்கதை
யார் பொறுப்பு
ஒரு குருவும் ஒரு சீடனும் ஒட்டகத்தின் மேல் பயணம் செய்து ஒரு பாலைவனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒட்டகத்தை பராமரிப்பது சீடரின் பொறுப்பு.
அன்று இரவு படுக்கைக்கு சென்ற பின் தான் ஒட்டகத்தை கட்டவில்லை என்று ஞாபகம் வந்தது மிகவும் களைப்பாக இருந்ததால் கடவுளிடம் எனது ஒட்டகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வது தங்களின் பொறுப்பு என்று வேண்டினான்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஒட்டகத்தை காணவில்லை. குரு ஒட்டகத்தை காணவில்லை என்று சீடனை திட்டினார்.
அதற்கு சீடன், "நீங்கள் கோபப்படுவதாக இருந்தால் கடவுளிடம் தான் கோபப்பட வேண்டும் ஏனென்றால் நீங்கள் தானே கடவுளை முழுமையாக நம்ப வேண்டும் என்று கூறினீர்கள்,நான் கடவுளை முழுமையாக நம்பி ஒட்டகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்தேன்" என்றார்.
அதற்கு குரு கடவுள் உனக்கு உணவை கொடுக்கிறார் அதை எடுத்து உண்பது உன் பொறுப்புதானே! கடவுள் வந்து ஊட்டி விடட்டும் என்று நீ காத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லைதானே அதுபோல ஒட்டகத்தை கட்டி வைக்க வேண்டியது உனது பொறுப்பு. நமது கடமையை நாம் தான் செய்ய வேண்டும் அதற்கு உதவுவதை மட்டுமே கடவுள் செய்வார் என்றார் குரு.
நமது முயற்சியை நூறு சதவிகிதம் கொடுத்தால் அந்த முயற்சி பலனளிக்க கடவுள் நிச்சயம் உதவுவார்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment