பால்: பொருட்பால்
அதிகாரம் : கல்வி
குறள்எண்:399
தாம் இன் புறுவது உலகுஇன் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
பொருள்: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு ,
கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.
Small rudders guide great ships.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம் என்ற வலிமையான காரணம் வேண்டும்.. அப்போது தான் நம் லட்சிய பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டோம்.!”------ அப்துல் கலாம்
பொது அறிவு :
1.அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?
2. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
விவசாயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
அதன் பரிணாம வளர்ச்சியானது பரவலான காலநிலை, நாகரிகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது
ஜூன் 21
பன்னாட்டு யோகா நாள் (International Yoga Day) ஆண்டுதோறும் சூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.[1][2]
ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார்.[3][4][5][6] சூன் 21 ஆம் நாளை அவர் இதற்காகப் பரிந்துரைத்திருந்தார்.
நீதிக்கதை
செய்யும் செயல்
தையல்காரர் ஒருவர் தனது கடையில் துணிகள் தைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து அதனை கவனித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தையல்காரர் புது துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் வெட்டினார். பின்பு கத்தரிக்கோலை காலடியில் வைத்து விட்டு துணியை தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்தி பத்திரப்படுத்தினார்.
அதைப் பார்த்து அவருடைய மகன் கேட்டான் "அப்பா! கத்தரிக்கோல் மிகவும் அழகானது! விலை அதிகமானது அதை காலடியில் போட்டு விட்டீர்கள் ஆனால் ஊசியோ சிறியது மிகவும் மலிவானது அதை தலையில் குத்தி வைத்துக் கொண்டிருக்கிறீர்களே ஏன்?"
"நீ சொல்வது உண்மைதான். என்ற தையல்காரர் பின்பு கத்திரிக்கோல் மிகவும் அழகாகவும்,விலை அதிகமாகவும் இருந்தாலும் அதனுடைய செயல் வெட்டுவது அதாவது பிரிப்பது
ஆனால் ஊசி சிறியதாக இருந்தாலும் விலை மலிவாக இருந்தாலும் அதனுடைய செயல் சேர்ப்பது".
ஒருவருடைய மதிப்பு அவர் உருவத்தில் இல்லை அவர் செய்யும் செயலால் நிர்ணயிக்க படுகிறது.
நல்லதே செய்வோம்.
நலமாய் வாழ்வோம்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment