கற்கால வெட்டுக்கருவி |
பால் :பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
குறள் எண்:403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
பொருள்:கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால்,
கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.
Honesty is the best policy.
நேர்மையை சிறந்த பண்பாகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
" உழைப்பின் சக்தியே உலகில் மிக உன்னதமானது, அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறு எந்த சக்திக்கும் கிடையாது!"------ ஆபிரகாம் லிங்கன்.
பொது அறிவு :
1. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?
2. இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஏறத்தாழ 40 சதவீத மக்களுக்கு குறிப்பாக பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே பிரதான தொழிலாக வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
நீதிக்கதை
பேசிய வார்த்தைகள்
ஒரு கிராமத்தில் குருவை பார்க்க ஒருவர் வந்தார். அவர் முகம் வாடி இருந்தது. "என்னவாயிற்று"? என்று கேட்டார் குரு. அதற்கு அவர் " ஒருவரை கோபத்தில் கண்டபடி திட்டி விட்டேன். அவர் மிகவும் மனம் ஒடிந்து போய்விட்டார். இப்போது எனக்கு வருத்தமாய் இருக்கிறது.
"அப்படியா"? என்றார் குரு.
"ஆமாம் குருவே, இப்போது நான் திட்டியதற்கு நிவர்த்தி செய்ய விரும்புகிறேன் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்
மெலிதாக சிரித்த குரு,"போ,ஒரு
மூட்டை பஞ்சை வாங்கி ஏதாவது ஒரு இடத்தில் கொட்டு. பின்பு கொட்டிய பஞ்சை எல்லாம் ஒன்று விடாமல் எடுத்து மூட்டை கட்டி கொண்டு வா சொல்கிறேன்" என்றார்.
போனவர் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார்." குருவே பறந்து போன பஞ்சை எல்லாம் சேகரிக்க இயலவில்லை" என்றார்.
"வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் இது போல் தான். கொட்டிவிட்டால் திரும்ப எடுக்க முடியாது. எப்போதும் கவனமாக பேச வேண்டும்"என்றார் குரு.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment