திரு.சுந்தர் பிச்சை |
பால்: பொருட்பால்
அதிகாரம்:கல்வி
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
The face is index of the mind.
அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா
பொது அறிவு :
1)தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
2) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும்:
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்"
இந்த குறள் உழவின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது. தினமும் ஒரு செய்தி நாம் வேளாண்மைக் குறித்து காண்போம்
ஜூன் - 10
சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்
முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.
நீதிக்கதை
கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. கண்ணனுக்கு அந்த வீட்டில் மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். கண்ணனின் பெற்றோர் கிராமத்தில் வசித்து வந்தனர். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் பற்றி எடுத்துச் சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டின் பின் புறத்தில் பெரிய தோப்பு இருந்தது. முழுவதும் தென்னை மரம் , பனை மரம் என்று வெயில் இருப்பதே தெரியாது.
எதனால் இந்த காலத்தில் வெப்பம் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று யோசித்தான். பருவம் மாறியுள்ளதையும் சிந்தித்தான். நம் வீட்டில் இருப்பது போல் நகரங்களில் மரங்கள் அதிகமாக கிடையாது. அப்படியே வளர்ந்தாலும் அதை வெட்டி அங்கு ஒரு வீடு கட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. மழை பெய்வதும் குறைந்து விட்டது.
பருவத்தில் பெய்யும் மழையே அமிழ்தமாகும். அந்த காலத்தில் அந்த அமிழ்தத்தை நம் முன்னோர்கள் சுவைத்தனர். நாமும் இனி மரம் வளர்த்து உரிய காலத்தில் மழை பெறுவோம்.புவி வெப்பமாவதைக் குறைப்போம்!!
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment