Tuesday, June 11, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.06.2024

 


  




திருக்குறள்: 

பால்:பொருட்பால்

அதிகாரம்:கல்வி

குறள் எண்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

பொருள்: கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

பழமொழி :

Don't measure the worth of a person by their size.

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

1. பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பிரகாசமான கிரகம் எது?

விடை: வீனஸ் (வெள்ளி)

2. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை

English words & meanings :

 Persistent-விடாபிடியான

Contentment-மனநிறைவு

வேளாண்மையும் வாழ்வும்: 

நிலையான இடத்தில் மனிதன் வாழ ஆரம்பித்த பின் மனித நாகரிகத்தின் எழுச்சியில் வேளாண்மை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது.

ஜூன் - 12

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

நீதிக்கதை

 ஆனந்தாவும் புத்தரும் ஒரு வழியில் நடந்து சென்றார்கள். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த

கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்..

 புத்தர் தன் மேல்துண்டால்அதை 

துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார்.

 அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை

பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள்

பலவீனமானவை .இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்..

 அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்."இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள்

பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். 

அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"என்று. 

அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. " எண்ணியது போல் நடக்கநான் என்ன உன் அடிமையா.. ?" என்றார்...


 *_நீதி_* 

நாம் நினைப்பவைகளே நடக்க வேண்டும் என்பது பேராசை தான் .

இன்றைய செய்திகள்

12.06.2024

* ஜூன் 20-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: 4 நாள் முன்பே கூட்டத் தொடர் தொடக்கம்.

* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.

* நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* அசோக் எல்லுசாமி இல்லையென்றால் டெஸ்லா நிறுவனம் இல்லை: தமிழக பொறியாளருக்கு எலன் மஸ்க் புகழாரம்.

* ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல்.

Today's Headlines

* Tamil Nadu Legislative Assembly meets on June 20: Sessions begin 4 days earlier.

* Education loan through co-operatives increased from Rs 1 lakh to Rs 5 lakh: Tamil Nadu government declared.

 * The Supreme Court has said that there is no bar to start counseling for undergraduate medical education based on NEET results.

 * If it is not  Ashok Ellusamy, there would be no Tesla: Elon Musk praises the Tamil Nadu engineer.

 * Indian tennis player Sumit Nagal qualified for Olympics.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment