பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள்:328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
விளக்கம்:
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
Laugh away your fears
இடுக் கண் வருங்கால் நகுக
இரண்டொழுக்க பண்புகள் :1
1) பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2) எனவே நான் எப்பொழுதும் என்னைச் சுற்றியுள்ள பெரியோர்களிடத்து பணிவாக நடந்து கொள்வேன் . மேலும் முடிந்தவரை அன்றாடம் பிறருக்கு உதவுவேன்.
பொன்மொழி :
தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’
- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)
பொது அறிவு :
1.தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது?
2.தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் எது?
திருநெல்வேலி
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சிறுகீரை பயன்கள் :ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களும், இந்த கீரையை அடிக்கடி சாப்பிடவேண்டும். இதனால், ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஜனவரி 03
நீதிக்கதை
நீதிக்கதை
இரண்டு தவளைகள்!
மிகவும் ஆழமான கிணறு ஒன்றில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. இரண்டும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தவித்தன. கிணற்றின் ஓரம் ஏறி மேலே வருவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருந்தன. இரண்டு தவளைகளும் வழுக்கி வழுக்கி உள்ளே விழுந்துக் கொண்டிருந்தன.
இரண்டு தவளைகளும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தகவல் அங்கிருந்த அனைத்து தவளைகளுக்கும் தெரிய வந்தது. அனைத்து தவளைகளும் ஒன்றுக் கூடி கிணற்றின் அருகே வந்தது.
ஆனால் அந்தத் தவளை கூட்டம், அந்த இரு தவளைகளுக்கு உதவி செய்யவில்லை. அதற்கு மாறாக இரு தவளைகளிடமும், ’ஏன் வீணாக முயற்சி செய்துக் கொண்டிருகிறீர்கள்? உங்களால் இது முடியாது. உங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுங்கள். மரணம் தான் உங்கள் முடிவு’ என்று கூச்சலிட்டது.
இரு தவளைகளும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் முயற்சி செய்துக் கொண்டே இருந்தன. தவளை கூட்டம் விடுவதாக இல்லை, ‘இந்தக் கிணறு மிகவும் ஆழமானது. வீண் முயற்சியை விட்டுவிட்டு மரணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கத்தியது.இரு தவளைகளில் ஒரு தவளை சற்று தடுமாறியது. மீண்டும் கத்தியது அந்தக் கூட்டம், ’மேலே நீங்கள் ஏறி வர வேண்டிய தூரத்தைக் கண்டீர்களா? இவ்வளவு தூரம் ஏறி வருவது சாத்தியம் அற்றது. இதுவரை இந்தக் கிணற்றில் விழுந்த 98 தவளைகளும் இறந்துவிட்டன. உங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை இன்று 100 ஆக உயர போகிறது. முயற்சியைக் கைவிட்டுவிடுங்கள் உங்கள் விதி மரணம் தான் என்பதை ஏற்று, கிணற்றின் உள்ளே விழுந்து விடுங்கள்’ என்று ஆரவாரம் செய்தது.
இரு தவளைகளில் ஒரு தவளையின் மனம் மாறியது. மேலே இருக்கும் தவளைகள் கூறுவது சரி தான் என்று ஏற்றுக் கொண்டது. அதன் முயற்சியைக் கை விட்டு, கிணற்றின் நீரினுள் விழுந்து இறந்து விட்டது.
முயற்சி செய்துக் கொண்டிருந்த அந்த ஒரு தவளையைப் பார்த்து, ‘அதோ பார். உன்னோடு ஏறிக் கொண்டிருந்த தவளை உண்மையை உணர்ந்து உள்ளே விழுந்து விட்டது. நீயும் உன் முடிவை ஏற்றுக் கொள். அது தான் உனக்கு இருக்கும் ஒரே வழி’ என்று சத்தம் போட்டன.
ஆனால் அந்த ஒரு தவளை அவை கூறும் எதையும் கண்டுக் கொள்ளவில்லை. மேலே ஏற முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. பல மணி நேர முயற்சிக்குப் பின் மேலே ஏறி வந்து விட்டது. சுற்றி இருந்த தவளைகளுக்கு ஒரே ஆச்சிரியம். அந்தத் தவளையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடின.
அதற்குப் பின் மேலே வந்த தவளை அந்தத் தவளை கூட்டத்திடம், ’தவளை நண்பர்களே! உங்களால் தான் என்னால் இதைச் செய்ய முடிந்தது மிகவும் நன்றி’ என்று உரைத்தது. தவளை கூட்டம் குழப்பமாக நின்றது.
அந்தத் தவளை மேலும் தொடர்ந்தது, ‘எனக்குச் சிறு வயது முதலே காதுக் கேட்காது. செவித்திறன் குறைபாடுள்ள நான் தெரியாமல் கிணற்றின் உள்ளே விழுந்து விட்டேன். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றுக் கூடி வாயை அசைத்துக் கொண்டே இருப்பதை கவனித்துக் கொண்டே இருந்தேன்.
நான் மேலே ஏறி வர நீங்கள் அனைவரும் இடைவிடாமல் வாயை அசைத்து ஊக்கம் அளித்ததை கவனித்தேன். அது தான் நான் மேலே ஏறி வர உறுதுணையாக இருந்தது’ என்று அப்பாவியாகப் பதில் அளித்தது.
நம் வாழ்க்கையிலும் புதிதாக ஏதேனும் முயற்சி செய்யும்பொழுது, பலர் நம்மை விமர்சனம் செய்துக் கொண்டே இருப்பர். முதல் தவளையைப் போல அவற்றைக் காதில் வாங்கிக் கொண்டிருந்தால் நாம் நினைத்த இலக்கை அடைய முடியாது. இரண்டாம் தவளையைப் போல அவற்றுக்குச் செவி சாய்க்காமல் செய்ய நினைப்பதை செய்துக் கொண்டே செல்ல வேண்டும்.
ஒரு நாள் நினைத்த இலக்கை அடைந்த பின் விமர்சித்த வாய் அனைத்தும் வியந்து நம்மை வாழ்த்தும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment