|
சோழர் கொடி |
திருக்குறள்:
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள்:336
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
விளக்கம்:
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.
பழமொழி :
Live with in your means
வரவுக் கேற்ற செலவு செய்
இரண்டொழுக்க பண்புகள் :1
1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்.
பொது அறிவு :
1. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
விடை: கந்தகம் (சல்ஃபர்)
2. உறையூர் யாருடைய தலைநகரம்?
விடை: சோழர்கள்
English words & meanings :
jaunt- a short journey for pleasure(சுற்றுலா). javeline- a spear (ஈட்டி).
ஆரோக்ய வாழ்வு :
முருங்கை கீரை : கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன.
நீதிக்கதை
ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒன்று மிகவும் நல்ல பண்பு, பாசம், நேசம், மனிதத்தன்மை, உண்மை போன்ற குணங்கள். மற்றொன்று கோபம், பொறாமை, பொய், தான் மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார். அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன். தாத்தா... நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார். நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம், செய்வோம், நல்லதே நடக்கும்.
இன்றைய செய்திகள்
18.01.2024
*நாடு முழுக்க 1200 ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று. 1.1% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
*மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 1.50 கோடி அபராதம்.
* தமிழரின் வீர விளையாட்டை ஊக்குவிப்போம்! பண்பாட்டை காப்போம்! - ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.
*பூரணம் அம்மாளுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை மதுரை கொடிக்குளம் அரசு நடுநிலை பள்ளிக்கு கொடையாக வழங்கினார். அச்செயலைப் பாராட்டி உதயநிதி அமைச்சர் பூரணம் அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
*டி20 யில் ஐந்தாவது சதம் ஒரே போட்டியில் இரண்டு பேரின் சாதனைகளை முறியடித்த ரோகித்.
Today's Headlines
*Corona J.N. 1 Infection has crossed 1200 in the whole country. 1.1% of patients are in intensive care unit.
* Let's promote Tamil's heroic game! Let's preserve the culture of Tamilnadu! - Minister Mr. Udhayanithi Stalin wished the Jallikattu Players.
* INDIGO fined Rs 1.50 crore for passengers eating on the runway in Mumbai, Maharashtra.
*Pooranam Ammal donated one and a half acres of land to Kodikulam Government Middle School, Madurai.
Appreciating this act, minister Udhayanidhi met Poornam Ammal in person and congratulated her.
* Rohit's fifth T20 century broke the records of two person in one match.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment