Monday, January 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024

   

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


திருக்குறள்

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் :  நிலையாமை

குறள்:340

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

விளக்கம்:

 உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.


பழமொழி :

Make hay while the sun shines

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும்   வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் அறிவேன்.    

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்து படிப்பேன்

பொன்மொழி :

கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலட்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது . பகத்சிங்.

பொது அறிவு :

1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை 

2.இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி  செய்யப்படுகிறது?

விடை: ஜார்கண்ட் 

English words & meanings :

 Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.

Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.

ஆரோக்ய வாழ்வு : 

மணத்தக்காளி : மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.

ஜனவரி 23

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்நாள்



நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார்.  இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா

நீதிக்கதை

 பகைவனுக்கு அருள்வாய்

ஒரு கழுகைப் பிடித்த ஒரு வேடன் அதன் இறகுகளை வெட்டி விட்டுக் கூண்டில் பிற பறவைகளுடன் அடைத்து வளர்த்து வந்தான். அதனால் அந்தக் கழுகு மிக வருந்திக் கொண்டிருந்தது.

அடுத்த வீட்டுக்காரன் அந்தக் கழுகை விலை கொடுத்து வாங்கினான். அவன் இறகுகளை வெட்டாமல் வளர விட்டான். அதனால் அது பறக்க முடிந்தது.

அப்படிப் பறந்து சென்ற அந்தக் கழுகு ஒரு முயலின் மீது பாய்ந்து அதைத் தன்னை வளர்ப்பவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து ஒரு நரி, "நீ அதை இந்த ஆளுக்குக் கொடுப்பதால் உனக்கு ஒரு புண்ணியமும் இல்லை. நீ இதை, முதலில் உன்னைப் பிடித்து இறகுகளை வெட்டினானே, அந்த ஆளுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவன் உன் மேல் கோபப்படாமல் இருப்பான். இல்லையென்றால் மீண்டும் அவன் உன்னைப் பிடித்து இரண்டாவது முறையாக உன்

இறகுகளை வெட்டி விடுவான்" என்றது.

நீதி : நமக்கு நல்லது செய்த நண்பர்களுக்குத் திரும்ப நல்லது செய்து நட்பை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நமது பகைவர்களுக்கு நல்லது செய்து அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.01.2024

*27 ஆயிரம் அரசு பள்ளிகளை நவீனமாக மாற்ற புதிய திட்டம். கற்பித்தல் தரத்தை உயர்த்த நடவடிக்கை.

*தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு.

*உத்திரபிரதேசம் பட்டாசு கடையில் தீ விபத்து; இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.

*அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது இதில் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகி ராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.

*இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல்.

Today's Headlines

*New scheme to modernize 27 thousand government schools.  Government planned to take steps to improve the quality of teaching.

 *Tamil Nadu Assembly will meet next month likely to make new announcements in budget

 *Fire incident at firecracker shop in Uttar Pradesh;  Two boys  died

*Kumbabhishekam of Ram Temple in Ayodhya was celebrated yesterday with much fanfare, in which the Rama's statue designed by Arun Yogi Raj from Karnataka was selected.

 *Virat Kohli ruled out of two Test matches against England.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment