அருந்ததி ராய் |
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
விளக்கம்:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
Good clothes open all door
ஆடை இல்லாதவன் அரை மனிதன்.
இரண்டொழுக்க பண்புகள் :
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
உன் இலக்கை
அடையும் வரை..
வெற்றியோ..
தோல்வியோ.. எதையும்
எதிர்பார்க்காமல்
ஓடிக் கொண்டே இரு.
பொது அறிவு :
1. தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
விடை: 20 வருடங்கள்
2. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
விடை: மலேசியா
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும்.
நவம்பர் 24
- 1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர்[7] என்பது குறிப்பிடத்தக்கது.
- 2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்[8].
- மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.[9]
- 2015 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது பெற்றிருக்கிறார்.
நீதிக்கதை
பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஊர்மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்நின்று கொண்டு தங்கநாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்தமக்கள் வீது அள்ளி வீசினான்.அங்கு நின்று கொண்டு இருந்தகடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான். அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.
மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார், மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார்,என்று சொன்னபோது மன்னன் குறுக்கிட்டு சொன்னான், இல்லை இல்லை எனக்கு ஆண் குழந்தை பிறந்ததற்காக நான் தங்ககாசு கொடுக்கவில்லை எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்.
அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளி தூவினான். மன்னன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்து வந்தவன் தான் பின்னாளில் பார் போற்றிய மாவீரன் அலெக்சாண்டர்
ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த மனிதனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்.ஆசிரியர் அரிஸ்டாட்டிலும் அவன் நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையை காப்பாற்றினார். AlwaysTeachers are Wondeful in the world. குரு அறிவுரை கேட்டு நடத்தும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையே........
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment