லாலா லஜபதி ராய் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் :299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம்:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Familiarity breeds contempt
பழக பழக பாலும் புளிக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.
பொன்மொழி :
ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாவிட்டால், நாம் சொந்த வாழ்விலும் சரி, நமது சமுதாய வாழ்விலும் சரி, நாம் முன்னேற மாட்டோம். ஜவஹர்லால் நேரு
பொது அறிவு :
1. கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர்?
2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தாமரைப் பூ : தாமரைப் பூவை, நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ,இருமல் ,சுவாசக் கோளாறு நீங்கும்.
நவம்பர் 17
நீதிக்கதை
முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர்- ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே 'மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது... பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது... ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை. உள்ளே போகும் போது... நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே... வெளியில் கொண்டு வர முடியவில்லை... குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி... குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான். அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது. கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள் தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான்... அதிர்ச்சியில் அது பழத்தை விட்டு விட்டது. கை வெளியில் வந்து விட்டது என்றாலும் அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன. "நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து...குரங்கைப்போல அகப்பட்டு விடுகிறோம்...
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment