கவிஞர் சுரதா |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள்:304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
விளக்கம்:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.
Good beginning makes a good ending
நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
வாழ்வில் நீ
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும்
வெல்ல முடியாது.
பொது அறிவு :
1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு தொடங்கப்பட்டது?
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.
நவம்பர் 23
நீதிக்கதை
ஒரு நாள் சுமன் என்ற மாணவன், செக்கிங்கிடம் வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் .
“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?
அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”
பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.
“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.
அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.
“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.
நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர் அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment